Home
News

ஒரே வாட்ஸ்அப் கணக்கில் 2 ப்ரொஃபைல் ஓபன் செய்யலாமா? புது அப்டேட்டுடன் கலக்கும் WhatsApp..

உலகளவில் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.7 பில்லியன் ஆக இருக்கிறது. இதில் அதிலகளவு பயனர்களை கொண்ட நாடக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 535.8 மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் உலகளவில் மிகவும் பிரபலமான மொபைல் ஆப்ஸ் ஆக திகழ்கிறது. ஆண்ட்ராய்டு (android) மற்றும் iOS என்று இரண்டு தளங்களிலும் வாட்ஸ்அப் அதிக பயனர்களை கொண்டுள்ளது. பல பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த மெசேஜ்ஜிங் ஆப்ஸை (WhatsApp Messaging Apps) நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. உண்மையில், வாட்ஸ்அப் இப்போது ஹை-டெக்காக உருமாறியுள்ளது.

ஒரே வாட்ஸ்அப் கணக்கில் 2 ப்ரொஃபைல் ஓபன் செய்யலாமா? புது அப்டேட்..

வாட்ஸ்அப் இப்போது வரை 1 பயனர் கணக்கை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது. ஒரே வாட்ஸ்அப் கணக்கை (WhatsApp account) பல டிவைஸ்களில் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. ஆனால், இனி வாட்ஸ்அப் விரைவில், ஒரே போனில் 2 வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்த அனுமதிக்க போகிறது. அதற்கான, புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது வெளியிட துவங்கியுள்ளது.

பல நாடுகளில் இன்று முதல், வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை லாக்-இன் (2 WhatsApp account login) செய்து பயன்படுத்த முடியும். இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது. நீங்கள் வொர்க் (Work) மற்றும் பர்சனல் (Personal) அக்கௌன்ட் என்று 2 வெவ்வேறு தனிப்பட்ட கணக்குகளுக்கு இடையே மாறுவதற்கு இனி வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கும் என்பது சிறப்பான விஷயமாகும்.

இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் 2 வாட்ஸ்அப் கணக்கை (two WhatsApp account) பயன்படுத்த, 2 போன்களை நாட வேண்டியதுள்ளது. அல்லது ஒரே போனில் வாட்ஸ்அப் க்ளோன் (WhatsApp clone) செய்து, மற்றொரு கணக்கை பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. ஒரு ஆப்ஸ் இல் இருந்து மற்றொரு வாட்ஸ்அப் ஆப்ஸ்க்கு செல்ல வேண்டியதுள்ளது. சிலர் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை பயன்படுத்துகிறார்கள். இது பாதுகாப்பற்றது.

ஒரே வாட்ஸ்அப் கணக்கில் 2 ப்ரொஃபைல் ஓபன் செய்யலாமா? புது அப்டேட்..

இதை சரி செய்ய, நிறுவனம் இப்போது ஒரே வாட்ஸ்அப் ஆப்ஸ் இல் 2 ப்ரொபைல் அமைக்க அனுமதிக்கிறது.
இரண்டாவது கணக்கை அமைக்க, உங்களுக்கு இரண்டாவது ஃபோன் எண் மற்றும் சிம் கார்டு அல்லது eSIM விபரங்களை தேவைப்படும். உங்கள் WhatsApp செட்டிங்ஸ் (Settings) சென்று, உங்கள் பெயருக்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும். "ஆட் அக்கௌன்ட் (Add Account)" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒவ்வொரு கணக்கிலும் உங்கள் பிரைவசி (privacy) மற்றும் நோட்டிபிகேஷன் செட்டிங்ஸை (notification settings) நீங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த அம்சம் உண்மையில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அலுவலக வேலைக்கென்று தனியாக ஒரு ப்ரொபைல் மற்றும் தனிப்பட்ட பெர்சனல் சாட்டிங் மற்றும் மற்ற தேவைகளுக்கென்று இரண்டு வெவ்வேறு கணக்குகளை வைத்து கையாள்வது இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்.

வாட்ஸ்அப் இல் உள்ள இந்த இரண்டு அக்கௌன்ட்கள் மற்றும் அதில் அனுப்பப்படும் அணைத்து வகையான மெசேஜ்கள் எல்லாம் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் (end-to-end encrypt) செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் பாதுகாப்பான முறையில், உங்கள் தகவலை பாதுகாக்கிறது. மற்றொரு முக்கிய குறிப்பு, அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப்பை மட்டும் மக்கள் பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறார்கள்.

காரணம், உங்கள் மொபைலில் கூடுதல் வாட்ஸ்அப் கணக்குகளைப் பெறுவதற்கு மூன்றாம் தரப்பு ஆப்ஸ்கள் மற்றும் போலி வாட்ஸ்அப் பதிப்புகள் அல்லது வாட்ஸ்அப் பிளஸ் போன்ற போலி பதிப்புகளைப் பதிவிறக்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ WhatsApp ஐப் பயன்படுத்தும் போது மட்டுமே உங்கள் மெசேஜ்கள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாகவும், தனிப்பட்டதாகவும் இருக்கும் என்பதை நினைவில்கொள்க.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Rolls Out New Multiple Accounts Support Profile For All Android Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X