குரூப் சாட்-ஓ.. பர்சனல் சாட்-ஓ.. இனிமே இதை பண்ணுங்க.. இனி WhatsApp பிரைவசியில் யாரும் ஒன்னும் பண்ண முடியாது!
இந்தியாவில் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நண்பர்களுடன் குட்டி சுவற்றில் உட்கார்ந்து பேசிய பேச்சுகள் தொடங்கி பிடித்தமானவர்களுடன் தனிமையில் பேசும் பேச்சுக்கள் வரையில் வாட்ஸ்அப்-க்கு மாறிவருகிறது. இதை பர்சனல் சாட் அல்லது குரூப் சாட் என்று பிரித்து சொல்லிவிட முடிகிறது. இதனால், சாட் செய்வதில் பல்வேறு பிரைவசி அப்டேட்களையும் பீச்சர்களையும் மெட்டா (Meta) நிறுவனம் கொண்டுவருகிறது. இப்போது, அட்வான்ஸ்டு சாட் பிரைவசி (Advanced Chat Privacy) பீச்சரை களமிறக்கி இருக்கிறது.
வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் தகவல்கள் மூன்றாவதாக யாருக்கும் செல்லாது என்றும் எண்ட்-டூ எண்ட் என்கிரிப்ஷன் (End-to End Encryption) மூலம் நேரடியாக அனுப்பும் நபருக்கு மட்டுமே செல்லும் என்றும் மெட்டா நிறுவனம் ஆரம்பத்தில் இருந்து சொல்லிவருகிறது. அதையடுத்து சாட் லாக் (Chat Lock), வியூ ஒன்ஸ் (View Once), டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் (Disappearing Messages) என்று பல்வேறு பிரைவசி பீச்சர்களையும் கொடுக்க தொடங்கியது.

இதில் மேலும் கூடுதல் பிரைவரசியை சேர்க்க அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சரை இப்போது சேர்த்துள்ளது. இது ஏற்கனவே இருந்த பீச்சரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். அதாவது, உங்களது சாட்டை நீங்கள் டேட்டாவாக டவுன்லோட் செய்து கொள்ளும் ஆப்ஷனை வாட்ஸ்அப் கொடுக்கிறது. இதன் மூலம் தேவையான சாட்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் சேமித்து கொள்ளவும், பயன்படுத்தவும் முடியும்.
அதேபோல நீங்கள் அனுப்பும் நபரும் அதை சேமித்து கொள்ளவும், பயன்படுத்தவும் முடியும். ஆனால், இப்போது வந்துள்ள அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சர் மூலம் யாரும் உங்களது சாட் டேட்டாக்களை டவுன்லோட் செய்ய முடியாது. இது பர்னல் சாட் மற்றும் குரூப் சாட் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும். ஆகவே, வாட்ஸ்அப் மூலம் மட்டுமே இனிமேல் சாட்களை பார்த்து கொள்ள முடியும்.
அதை டேட்டாவாக டவுன்லோட் செய்து வேறு டிவைஸ்களில் பயன்படுத்த முடியாது. இந்த அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சர்களை யார் எனபிள் செய்தாலும், அவர்களது சாட்களை அவர்களும் சரி அதை பெற்றவர்களும் சரி டவுன்லோட் செய்ய முடியாது. அதேபோல ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை எனபிள் செய்து வைத்திருந்தாலும் இந்த அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சரானது அதை தடுத்துவிடும்.
ஆகவே, உங்களது சாட் டேட்டாவை யாரும் டவுன்லோட் செய்து பயன்படுத்திவிட முடியாது. உங்களது சாட்களில் இருக்கும் டேட்டாக்கள் டிஸ்அப்பியரிங் ஆகும் வரையில் யாரும் அதை டவுன்லோட் செய்யக்கூடாது என்றால் இந்த அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சர்களை எனபிள் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த பீச்சரை எப்படி எனபிள் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சரை எப்படி எனபிள் செய்வது? முதலில் உங்களது வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் பிரைவசி செய்ய வேண்டிய பர்சனல் அல்லது குரூப் சாட்டின் புரொபைலை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் (i) ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்தால், மீடியா ஃபைல்கள், நேட்டிபிகேஷன்கள் உள்ளிட்ட ஆப்ஷன்கள் தோன்றும்.
அதேபோல சாட் லாக் ஆப்ஷனும் தோன்றும். இதற்கு கீழே அட்வான்ஸ்டு சாட் பிரைவசி பீச்சர் இடம்பெற்றிருக்கும். இதை கிளிக் செய்தால் ஆன் அல்லது ஆஃப் ஆப்ஷன்கள் தோன்றும். இதை ஆன் செய்தால், அந்த சாட்களை நீங்களோ அல்லது அதை பெற்றவர்களோ டவுன்லோட் செய்ய முடியாது. அதுவே குரூப் சாட்டாக இருந்தால், யாரும் உங்களது சாட்டை டவுன்லோட் செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications








