வாட்ஸ்அப் புதுஅம்சம்: இனி எல்லாத்துக்கும் டைப் பண்ண வேணாம்., ஒரு அழுத்து ஒரு ரியாக்ட்- பயன்படுத்துவது எப்படி?
சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப் தளம். வாட்ஸ்அப் பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப் வழங்குவதாக தகவல் வெளியான இந்த நேரத்தில் தற்போது வாட்ஸ்அப் இமோஜிகள் மூலம் ரிப்ளை செய்யும் அம்சத்தை கொண்டுவருகிறது. வாட்ஸ்அப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெசேஜ் ரிப்ளை அம்சத்தை கொண்டு வருகிறது. தேர்ந்தெடுக்குப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் முன்னதாகவே இந்த செயல்பாட்டை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சம்
வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் குறித்த தகவல் சமீப காலமாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த அம்சத்தை பீட்டா பயனர்களால் முயற்சிக்க முடியும். டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல பயன்பாடுகள் முன்னதாகவே இந்த செயல்பாட்டை தொடங்குகின்றன. வாட்ஸ்அப் அனிமேஷன் செய்யப்பட்ட இமோஜிகலை வழங்கவில்லை என்றாலும் பயனர்கள் குறைந்தபட்சம் வழக்கமான இமோஜிகளுடன் சில மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்ய முடியும்.

ரிப்ளை செய்ய எந்த மெசேஜையும் கிளிக் செய்யலாம்
வாட்ஸ்அப் செய்திகளுக்கு ரிப்ளை செய்ய பயனர்கள் எந்த மெசேஜையும் கிளிக் செய்யலாம். இனி ஆப்ஸ் ஒரு இமோஜி பெட்டியைக் காண்பிக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து தேர்வு செய்யலாம். நீங்கள் கிளிக் செய்யும் இமோஜி ரிப்ளையாக அனுப்பப்படும். தற்போது இமோஜி பாக்ஸ்-ஐ கிளிக் செய்யும் போது பயனர்கள் லைக், லவ், ஸ்மைல், ஆச்சரியம், சோகம் மற்றும் நன்றி உள்ளிட்ட ஆறு இமோஜிகளை மட்டுமே பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற அம்சத்தை டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளமும் வழங்குகிறது. டெலிகிராம் 10-க்கும் மேற்பட்ட இமோஜிகளை மட்டுமே வழங்குகிறது. அதேபோல் இன்ஸ்டாகிராம் குறிப்பிட்ட அம்சத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு வரம்பற்ற இமோஜிகளை வழங்குகிறது.பெறப்படும் மெசேஜை அழுத்திப் பிடித்து காட்டப்படும் இமோஜியை செலக்ட் செய்து ரிப்ளை செய்யலாம். இதன்மூலம் பதில் சொல்லாமல் இமோஜி மூலம் ரிப்ளை செய்யலாம். இந்த அம்சம் டெஸ்க்டாப் வாட்ஸ்அப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே சோதனை
தற்போது இந்த அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் கிடைக்கிறது. இந்த அம்சம் வரும் மாதங்களில் நிலையான வெளியீட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் குழு மற்றும் தனிப்பட்ட அரட்டைகள் இரண்டிற்கும் வழங்கப்படுகிறதா அல்லது தனிநபர் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களாக நீங்கள் இருந்தால் வாட்ஸ்அப்பின் 2.22.8.3 பதிப்பின் மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும்.

பிரதானமாக பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் அம்சம்
அதேபோல் வாட்ஸ்அப் தளத்தில் ஸ்டிக்கர் அம்சம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஒரே ஸ்டிக்கரில் தங்கள் வெளிப்பாடை புரிய வைக்கும் ஸ்டிக்கர் அம்சத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம் பெரும் பிரபலமடைந்ததை அடுத்து பல மூன்றாம் தரப்பு செயலிகளும் பல்வேறு வகையில் அதாவது சினிமா வசனங்கள், பிற வசனங்கள் புகைப்படங்கள் மூலம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சத்தை வெளியிட்டன. இந்த அம்சம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு பெரியளவு வரவேற்பு பெற்றது. ஆனால் தற்போது மூன்றாம் தரப்பு செயலி உதவி இல்லாமல் வாட்ஸ்அப் தளத்திலேயே புகைப்படங்கள் மூலம் ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

அம்சம் பயன்படுத்துவது எப்படி
தற்போது வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள அம்சமானது வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அம்சம் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாட்ஸ்அப் வெப் அணுகலுக்கு சென்று சாட் விண்டோஸ் விருப்பத்துக்குள் செல்ல வேண்டும். இதற்குள் சென்ற உடன் அட்டாச்மெண்ட் என்ற ஐகானை கிளிக் செய்து அதில் காட்டப்படும் ஸ்டிக்கர் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின் காட்டப்படும் ஃபைல் எக்ஸ்ப்ளோரர் தளத்துக்குள் சென்று தங்களுக்கு தங்களுக்கு பிடித்தமான போட்டோவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பேக் கிரவுண்ட் மாற்றம் செய்யப்படும் அம்சம்
இதன்பின் இந்த புகைப்படம் ஸ்டிக்கர் வகைகளுக்குள் செல்லும். இந்த ஸ்டிக்கரை ரைட் கிளிக் செய்தபின் பிரஸ் செய்ய வேண்டும் இதன்பின் இதை சேமித்துக் கொள்ளலாம். இந்த அம்சத்தின் மூலம் ஸ்டிக்கர் பயன்பாடாக மாற்றாலம். இருப்பினும் இந்த அம்சத்தில் பேக் கிரவுண்ட் மாற்றம் செய்யப்படும் அம்சம் கொண்டுவரவில்லை என்பதால் முன்னதாகவே பேக் கிரவுண்ட் மாற்றம் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தினால் நீங்கள் பயன்படுத்தும் புகைப்படம் ஸ்டிக்கருக்கு இணையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications