90'ஸ் கிட்ஸ் வயிற்றில் பாலை வார்த்த WhatsApp: ஆனந்த கண்ணீர் வர வைக்கும் ஒரு அம்சம்!

|

WhatsApp நிறுவனம் Message Yourself என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமூகவலைதளங்களில் பிஸியாக சேட் செய்து கொண்டிருக்கும் 20ஸ் கிட்ஸ்கள் 90ஸ் கிட்ஸ்களை நக்கல் செய்யும்பட்சத்தில் இனி நீங்கள் அதற்கு கவலை கொள்ள வேண்டாம். காரணம் இனி நீங்களும் பிஸியாக சேட் செய்து கெத்து காட்டலாம். அதுவும் உங்களுக்கு நீங்களே மெசேஸ் செய்து கொள்ளலாம். இதில் என்ன சந்தோஷம் என்று கேள்வி வருகிறதா? முழு தகவலை விரிவாக பார்க்கலாம்.

WhatsApp Message Yourself

WhatsApp Message Yourself

WhatsApp இல் Message Yourself என்ற அம்சம் அறிமுகமாகிறது. இந்த அம்சமானது உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்ய அனுமதிக்கும் சேவை ஆகும். இந்த அம்சமானது உங்களுக்கு நீங்களே மெசேஜ்கள், கோப்புகள் மற்றும் மீடியாக்களை அனுப்ப அனுமதிக்கிறது. WhatsApp Message Yourself அம்சம் ஆனது Android மற்றும் iOS ஆகிய இரண்டு பயனர்களுக்கும் கிடைக்கும்.

மெசேஜ் யுவர்செல்ஃப் என்றால் என்ன?

மெசேஜ் யுவர்செல்ஃப் என்றால் என்ன?

வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு நோட்ஸ்களையோ அல்லது குறிப்பிட்ட தகவலையோ டைப் செய்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மெசேஜ் பயன்பாட்டிற்கு சென்று டைப் செய்வோம். பின் அதை Draft இல் சேமித்து வைப்போம். இது சேமிக்கப்படுகிறதா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சரி இதற்கு என்ன தான் வழி என்றால். அதை டைப் செய்து வேறு நபருக்கு அனுப்பி வைப்போம். ஆனால் இது அனைத்து தகவலுக்கும் சாத்தியமில்லை.

உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்யலாம்

உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்யலாம்

அனைத்து குறிப்புகளையும், ரிமைன்டர்களையும், முக்கிய தகவல்களையும் பிறருக்கு அனுப்பிக் கொண்டே இருக்க முடியாது, சரி இதை வாட்ஸ்அப் இல் டைப் செய்யலாம் என நினைத்தால் அங்கும் அதே நிலைமை தான். இந்த பிரச்சனை இனி இருக்காது. இதை தீர்க்கவே மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. இனி இது அனைத்தையும் டைப் செய்து உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து கொள்ளலாம்.

தனி அரட்டை பிரிவு

தனி அரட்டை பிரிவு

அதேபோல் Message Yourself என்ற அம்சத்தின் மூலம் நோட்ஸ், ரிமைன்டர்கள் மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள், ஃபைல்கள் என அனைத்தையும் அனுப்பலாம். இந்த அம்சம் மிகவும் பேருதவியாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுக்கு கிடைக்கத் தொடங்கியதும் "You" என்ற தனி அரட்டை பிரிவு காட்டப்படும்.

வாட்ஸ்அப் அப்டேட் அவசியம்

வாட்ஸ்அப் அப்டேட் அவசியம்

வாட்ஸ்அப் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சத்தை பெறுவதற்கு நீங்கள் உங்கள் ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை செக் செய்து கொள்ளவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று வாட்ஸ்அப் என டைப் செய்தால் ஓபன் அல்லது அப்டேட் என காட்டப்படும். இதில் அப்டேட் என காட்டப்படும் பட்சத்தில் அதை அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி அப்டேட் என காட்டப்படவில்லை என்றால் சிறிது நாட்கள் காத்திருக்கவும், கண்டிப்பாக அப்டேட் கிடைக்கத் தொடங்கும்.

பயனர் பாதுகாப்பில் அதிக கவனம்

பயனர் பாதுகாப்பில் அதிக கவனம்

அப்டேட் செய்த உடன் வாட்ஸ்அப் தொடர்பை செக் செய்து கொள்ளவும். அதில் You என்ற விருப்பம் காட்டப்படும். அதை கிளிக் செய்து மெசேஜ் செய்தால் அந்த மெசேஜ் உங்களுக்கே வரும். இதுதான் Message Yourself என்ற தேர்வாகும்.

Message Yourself அம்சத்தின் மூலம் உங்களுக்கு தேவையான பல முக்கிய தகவலை உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பயனர் பாதுகாப்பு

WhatsApp தனது பயனர் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இதற்காக, மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து பல அம்சங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு மாதமும் புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இப்படி, பயனர்களின் பாதுகாப்பான சாட்டிங் அனுபவத்தைச் சிறப்பானதாக மாற்ற WhatsApp அறிமுகம் செய்த அம்சம் தான் Message Yourself ஆகும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Rolling Out a Special Feature For 90's kids: "Message Yourself" specs For Android and iOS.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X