தலைவா WhatsApp என்னது இது? ஆன்லைன்ல யாரு இருக்கானு காட்டிக்கொடுக்கும் அம்சம்.. வாட்ஸ்அப் யூஸர்ஸ் கவனியுங்க..
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு நிறுவனம் இப்போது ஒரே முழு வீச்சில் 12 வகையான புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து, அதன் வாட்ஸ்அப் தளத்தை அப்டேட் (New WhatsApp Update) செய்து முன்னேறி சென்றுள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த புதிய மாற்றங்களுடனான அப்டேட் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வது சிறந்தது. சரி, மெட்டாவிற்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) தளம் என்னென்ன புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது உங்கள் வாட்ஸ்அப் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. வாட்ஸ்அப் சாட் மற்றும் வாட்ஸ்அப் காலிங் உடன், உங்கள் வாட்ஸ்அப் சேனல்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், WhatsApp அதன் பயன்பாட்டிற்கு நிறைய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அப்டேட்டில் புதிதாக ஆன்லைன் இண்டிகேட்டர் இன் குரூப்ஸ் (online indicator in groups), டேப்பபில் ரியாக்ஷன்ஸ், டிஃபால்ட் iOS சாட் போன்ற பல புதிய மாற்றங்களை WhatsApp அறிமுகம் செய்துள்ளது.

1. ஆன்லைன் இண்டிகேட்டர் இன் குரூப்ஸ் (Online indicator in groups):
இந்த அம்சம் ஒரு குழுவின் கீழ் எத்தனை நபர்கள் ஆன்லைனில் சாட் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக காண் பிக்கக்கூடியது.
2. ஹைலைட் நோட்டிபிகேஷன் இன் குரூப்ஸ் (Highlight notifications in groups):
இந்த அம்சம் ஒரு குழுவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் செய்திகளை மட்டும் ஹைலைட் செய்து காண்பிக்க உதவுகிறது. நீங்கள் விரும்பும் நபரை @ பிறகு குறிப்பிட்டு 'Notify for' செட்டிங் மற்றும் 'Highlights' விருப்பத்தை தேர்வு செய்து, முக்கியமான நோட்டிபிகேஷன்களை மட்டும் இனி பெற முடியும். அனைவரின் செய்திகளை பெறுவதற்கு 'All' என்ற விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
3. ஈவென்ட் அப்டேட் (Events update):
குழுக்களில் இதுவரை ஈவென்ட் நிகழ்வுகளை உருவாக்கி வந்த வாட்ஸ்அப் பயனர்கள் இனி ஒன் ஆன் ஒன் (1:1) உரையாடலில் கூட ஈவென்ட் நிகழ்வை உருவாக்க முடியும் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. வாட்ஸ்அப் இப்போது ஈவென்ட் அப்டேட் அம்சத்தை தனி சாட்களில் பின் செய்துகொள்ளவும் அனுமதிக்கிறது.
4. டேப்பபில் ரியாக்ஷன்ஸ் (Tappable reactions):
இப்போது நீங்கள் மற்ற அனைவரின் ரியாக்ஷன்களை விரைவாகப் பார்க்கலாம். அதேபோல், நீங்கள் அனுப்ப விரும்பும் ரியாக்ஷனையும் சிங்கிள் டேப்பில் அனுப்பலாம்.
5. ஐபோன்களில் நேரடி டாகுமெண்ட் ஸ்கேனிங் (Document scanning on iPhone):
ஐபோனில் உள்ள வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக இனி உங்களால் ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்ப முடியும். அட்டச்மெண்ட் ட்ரேயில் உள்ள 'Scan document' என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆவணத்தை ஸ்கேன் செய்துகொள்ளலாம். இதை நீங்கள் க்ராப் செய்து சேவ் செய்துகொள்ளவும் முடியும்.
6. ஐபோனில் டிபால்ட் ஆப்ஸ் ஆக வாட்ஸ்அப் (Default App for iPhone):
புதிய iOS அப்டேட் மூலம், உங்கள் iPhone இல் WhatsApp ஐ உங்கள் இயல்புநிலை மெசேஜ்ஜிங் மற்றும் அழைப்பு பயன்பாடாக இப்போது மாற்றிக்கொள்ள முடியும். இதை செய்ய Settings > Default Apps > WhatsApp கிளிக் செய்யவும்.
7. வாட்ஸ்அப் வீடியோ காலில் ஜூம்மிங் வசதி (Pinch to zoom in WhatsApp video calls):
ஐபோன் பயனர்கள் இப்போது வீடியோ அழைப்பில் இருக்கும்போது உங்கள் சொந்த அல்லது பியர் வீடியோவை நெருக்கமாகப் பார்க்க, வீடியோவை பெரிதாக்க டிஸ்பிளேவில் பின்ச் கேஸ்ட்ரை பயன்படுத்தலாம்.
8. சாட்டில் இருந்தபடி புதிய அழைப்புகளை ஆட் செய்யலாம் (Add to call from a chat):
சாட் பாக்சில் மேலே உள்ள அழைப்பு ஐகானைத் தட்டி, 'Add to call' என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அரட்டைத் தொடரிலிருந்து நேரடியாக ஒருவரை 1:1 அழைப்பில் இனி சேர்க்க முடியும்.
9. முன்பை விட உயர்தர வீடியோ காலிங் (Enjoy smoother and High Quality video calls):
உங்கள் வீடியோ அழைப்புகளை மிகவும் நம்பகமானதாகவும் உயர் தரமாகவும் மாற்றுவதற்காக வாட்ஸ்அப் அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. தளத்தின் உகந்த ரூட்டிங் அமைப்பு சிறந்த இணைப்பு பாதையைக் கண்டறிந்து, அழைப்புகள் துண்டிக்கப்படுவதையும் வீடியோ முடக்கப்படுவதையும் குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தை WhatsApp பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட அலைவரிசை கண்டறிதல் உங்கள் வீடியோவை விரைவாக HD தரத்திற்கு மேம்படுவதை WhatsApp உறுதி செய்துள்ளது.
10. சேனல்களுக்கான வீடியோ நோட்ஸ் (Video notes for Channels):
வாட்ஸ்அப் சாட் பாக்ஸ் போலவே, சேனல் நிர்வாகிகளும் இப்போது உடனடியாக ஷார்ட் வீடியோ ரெக்கார்ட் செய்ய வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. இந்த ஷார்ட் வீடியோவின் அளவு 60 வினாடிகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். இந்த மாற்றம் வாட்ஸ்அப் இல் உள்ள அப்டேட்ஸ் டேப் (Updates Tab) பிரிவின் கீழ் வருகிறது.
11. சேனல்களில் வாய்ஸ் மெசேஜ் ட்ரான்ஸ்கிரிப்ஷன் (Voice message transcripts on Channels):
நீங்கள் பயணத்தில் இருக்கும்போது சேனல்களைக் கேட்க முடியாதபோது, சேனல்களிலிருந்து வரும் குரல் செய்தி அப்டேட் தகவல்களை இனி நீங்கள் எழுத்துச் சுருக்கமாக பெற இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது.
12. கியூஆர் கோட்ஸ் (QR codes):
சேனல் அட்மின்கள் இப்போது, உங்கள் சேனலுடன் நேரடியாக இணைக்கும் தனித்துவமான QR குறியீட்டை வாட்ஸ்அப் இல் பகிரலாம். இது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும், பார்வையாளர்களை அதிகரிப்பதையும் எளிதாக்குகிறது.
இந்த 12 புதிய மாற்றங்களுடன் வாட்ஸ்அப் இப்போது உயர்தர மெசேஜ்ஜிங் தளமாக உருமாறியுள்ளது. இத்தகைய மாற்றங்களை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், உங்கள் வாட்ஸ்அப் ஆப்ஸை உடனே அப்டேட் செய்து பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications