மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!

|

வாட்ஸ்அப் அதன் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை மே15-க்குள் எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பதை நினைவூட்டத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் அதன் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்தது. பிப்.,8 ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் என பயனர்களை அறிவுறுத்தியது.

புதிய கொள்கை குறித்து விமர்சனங்கள்

புதிய கொள்கை குறித்து விமர்சனங்கள் எழுந்ததையடுத்து இதை அமல்படுத்தும் தேதியை மே-15 ஆம் தேதிவரை நீடித்தது. இந்த நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் டுவிட்டரில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கொள்கையை ஏற்க நினைவூட்டும் அம்சத்தை நினைவூட்டி வருகிறது.

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அறிமுகம் செய்த தனியுரிமைக் கொள்கையை மீண்டும் ஏற்க நினைவூட்டும் ஸ்கிரீன் ஷாட்களை பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் மே15-க்குள் புதிய கொள்கையை ஏற்க வேண்டும் என வாட்ஸ்அப் பயனர்களுக்கு நினைவூட்டுகிறது.

அதேபோல் இன்னொரு பயனர் நிறுவனம் தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கிறோம் அதை மதிப்பாய்வு செய்ய கிளிக் செய்யவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மே15 ஆம் தேதிக்குள் பயனர்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிறுவனம் வலியுறுத்துகிறது.

விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கைகள்

வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. இதுகுறித்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிந்துக் கொள்ளவேண்டியவை குறித்து பார்க்கலாம்.

ஏற்க வலியுறுத்தும் நிறுவனம்

பயனர்கள் வாட்ஸ்அப்பின் தனியுரிமை விதிகளை ஒப்புக் கொள்ளும்படி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில் அணுகலை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Terms and Privacy Policy Updates கட்டாயம்

வாட்ஸ்அப் இன் Terms and Privacy Policy Updatesஐ கட்டாயம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாட்ஸ்அப் பயனர்கள் அனைவருக்கும் நோட்டிபிகேஷன் மூலம் இந்த தகவல் அனுப்பப்படுகிறது. இந்த நோட்டிபிகேஷனுக்கு சென்று allow என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Whatsapp Reminds Users to Accept WhatsApp terms and Privacy Policy by May 15

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X