Just In
- 7 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 7 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 7 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 8 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!
மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) அதன் பயனர்களுக்காகப் பல சிறந்த அம்சங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட அப்டேட்களையும் நிறுவனம் சரியாகச் சோதனை செய்த பின்னரே வாட்ஸ்அப் பயனர்களுக்காக அவற்றை வெளியிடுகிறது. அந்த வகையில் ஒரு சூப்பரான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய WhatsApp Polls அம்சம்
முதலில் இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டாவில் கிடைக்கச் செய்த பிறகு, WhatsApp இறுதியாக அதன் சமீபத்திய ஸ்டாண்டர்ட் அப்டேட் புதுப்பித்தலுடன் iOS மற்றும் Android சாதனங்களுக்கான WhatsApp Polls அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் இப்போது வாட்ஸ்அப் ஸ்டாண்டர்ட் கட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் கிடைக்கிறது.

WhatsApp Polls இல் 12 விருப்பங்கள் வரை உள்ளதா?
இந்த புதிய வாட்ஸ்அப் போல்ஸ் அம்சம், தனிப்பட்ட சாட்கள் (Private chat) மற்றும் குரூப் சாட்கள் (Group chat) போன்ற இரண்டிலும் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. வாட்ஸ்அப் போல்ஸ் அம்சம் ஒரு கருத்துக்கணிப்பு அம்சமாகும். இது பயனர்களுக்கு 12 விருப்பங்கள் வரை பதில்களுடன் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. இது மெட்டாவிற்கு புதிய விஷயமில்லை.

ஓ.. இது அதுல.! அங்க இருந்து இங்க வந்துடுச்சா?
மேலும் பயனர்கள் தங்களுக்கு ஏற்றதாகக் கருதும் பல விருப்பங்களுக்கு வாக்களிக்க இந்த அம்சம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்டாவிற்கு சொந்தமான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் போல்ஸ் அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அம்சத்தை நிறுவனம் இப்போது வாட்ஸ்அப் தளத்திலும் களமிறக்கியுள்ளது.

வாட்ஸ்அப் இல் இனி உங்களுக்கு பிடித்தபடி வாக்கெடுப்பு எடுக்கலாமா?
குரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டில் நீங்கள் ஒரு போல்ஸ் அம்சத்தை நிறுவியவுடன், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருப்பவர்கள் வாக்கெடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்கெடுப்பை உருவாக்கியவர் உட்படப் பயனர்கள் பல விருப்பங்களுக்கு வாக்களிக்க முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. போல்ஸ் தகவலுக்கு ஒரு விருப்பத்திற்கு வாக்களிக்கலாம்.

வாட்ஸ்அப் போல்ஸ் அம்சத்தின் அதிகபட்ச வரம்பு எவ்வளவு?
ஆனால், அதிகபட்சமாக 12 விருப்பங்களுக்கு வாக்களிக்க விருப்பம் உள்ளது. இது வாக்கெடுப்பை உருவாக்கியவர் சேர்க்கக்கூடிய விருப்பங்களின் எண்ணிக்கையின் அதிகபட்ச வரம்பாகும் என்பது கவனிக்கத்தக்கது. கூடுதலாக, பயனர்கள் தாங்கள் வாக்களித்த விருப்பத்தையும் பின்னர் மாற்றிக்கொள்ளும் அம்சமும் இதில் உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டாண்டர்ட் அப்டேட் ரோல் அவுட்
இந்த அம்சம் முன்பு பீட்டா கட்டமைப்பில் காணப்பட்டது. ஆனால், இந்த அம்சம் குரூப் சாட் அரட்டைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஸ்டாண்டர்ட் அப்டேட் ரோல் அவுட்டில், தனிப்பட்ட அரட்டைகளுக்குக் கூட இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இது இப்போது இரண்டு சாட் வகைகளிலும் வேலை செய்கிறது.

வாட்ஸ்அப் போல்ஸ் அம்சத்தை எவ்வாறு உருவாக்குவது?
சரி, இப்போது வாட்ஸ்அப் போல்ஸ் அம்சத்தை நாம் எவ்வாறு உருவாக்குவது என்று பார்க்கலாம். வாட்ஸ்அப் போல்ஸ் அம்சத்தை நீங்கள் உருவாக்க, முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் ஆப்ஸை அதன் சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும். இதை முதலில் உறுதிசெய்யவும். அதை அடுத்து, கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

WhatsApp Polls உருவாக்குவது எப்படி?
- வாட்ஸ்அப்பை கிளிக் செய்து, ஓபன் செய்துகொளுந்தங்கள்.
- குரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டிற்கு செல்லவும்.
- நீங்கள் iOS பயனர் என்றால், + பட்டனை தட்டவும்.
- நீங்கள் Android பயனர் என்றால், Attachment பட்டனை கிளிக் செய்யவும்.
- Polls விருப்பத்தைக் கண்டறியவும்.
- Ask question புலத்தில் உங்கள் கேள்வியை உள்ளிட்டு வாக்களிப்பதற்கான விருப்பங்களைச் சேர்க்கவும்.
- அவ்வளவு தான் உங்களுடைய போல்ஸ் ரெடி ஆகிவிடும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470