வாட்ஸ்ஆப் தெரியும், அது என்ன வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் செயலி இன்று பலரும் குறுந்தகவல் அனுப்ப பயன்படுத்தி வரும் பிரபலமான செயலி என்று கூறலாம். வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியும் சந்தையில் கிடைக்கும் குறுந்தகவல் அனுப்பும் செயலி தான், பலரும் இதை போலி என்று கூறி வருகின்றனர். வாட்ஸ்ஆப் செயிலி அளிக்கும் அம்சங்களை விட வாட்ஸ்ஆப் ப்ளஸ் சற்று அதிகமான அம்சங்களை அளிக்கின்றது எனலாம், அந்த வகையில் வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயிலி குறித்த அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் உங்களுக்கு பிடித்த மற்றும் இலவசமாக கிடைக்கும் தீம்களை செட் செய்து கொள்ளலாம். உண்மையான வாட்ஸ்ஆப் செயலியில் இந்த அம்சம் கிடையாது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
எக்கச்சக்கமான எமோட்டிகான்ஸ்களை வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் பயன்படுத்த முடியும், இது வாட்ஸ்ஆப் செயலியில் முடியாத ஒன்று.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
பயனாளிகளை முதன் முதலில் ஹைடு அம்சத்தை அறிமுகப்படுத்தியது, அதன் பின் தான் ஒரிஜனல் வாட்ஸ்ஆப் செயிலியில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியின் தோற்றத்தை உங்களுக்கு பிடிக்கும் விதத்தில் மாற்றியமைத்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
ப்ளூ டிக்ஸ் அம்சத்தை வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் பயனாளிகளே டிஸேபிள் செய்து விடலாம்.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
கடைசியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திய நேரத்தை காட்டும் அம்சம் வாட்ஸ்ஆப் செயிலியில் சேர்க்கப்பட்டது அனைவரும் அறிந்ததே, ஆனால் இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் ஏற்கனவே இருந்தது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் ஃபைல் எடிட்டிங் ஆப்ஷன் இருக்கின்றது, இதன் மூலம் பயனாளிகள் ஃபைல்களின் மெமரியை மாற்றியமைத்து கொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
இந்த செயலி கொடுக்கும் ஆறு மெனுக்களை கொண்டு வடிவமைப்பு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் செயலியை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிவிட்டது, இனி இந்த செயலி எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications