வாட்ஸ்அப் பயனர்களுக்கு இனி இந்த சிக்கல் இல்லை: வருகிறது சேட்டிங் ஃபில்டர் அம்சம்!

|

பிரபல செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சமானது தற்போது பீட்டா சோதனை நிலையில் இருக்கிறது. பிஸ்னஸ் கணக்குகளில் தேடல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது இந்த அம்சம் காண்பிக்கப்படும்.

வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சம்

வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சம்

வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சமானது தற்போது பீட்டா சோதனை நிலையில் இருக்கிறது. பிஸ்னஸ் கணக்குகளில் தேடல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது இந்த அம்சம் காண்பிக்கப்படும். வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர்கள் அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர்கள் ஆனது வணிக பயனர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சமானது சில எளிய ஃபில்டர்களை இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது.

பிரபல செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்

பிரபல செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்

பிரபல செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் அதன் இயங்குதளத்தில் சேட்டிங் ஃபில்டர்கள் அம்சத்தை செயல்படுத்த இருக்கிறது. ஃபில்டர்களை பயன்படுத்தி குறிப்பிட்ட சேட்டிங்கை மட்டும் கண்டறிய இந்த அம்சம் பயனர்களுக்கு உதவுகிறது. WABetaInfo வெளியிட்ட அறிக்கையின்படி, சேட்டிங் ஃபில்டர் அம்சமானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாம் பயனர்களுக்கு எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடும் என கூறப்படுகிறது. சில சேட்டிங்களை விரைவாகக் கண்டறியவும் சில எளிய ஃபில்டர்களை இணைக்கவும் இந்த அம்சமானது பயனர்களை அனுமதிக்கும்.

வாட்ஸ்அப் வணிகம் அல்லாத கணக்குகளில் இந்த அம்சம் விரைவில்

வாட்ஸ்அப் வணிகம் அல்லாத கணக்குகளில் இந்த அம்சம் விரைவில்

வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகளின் தேடல் விருப்பத்தில் மட்டுமே இந்த சேட்டிங் ஃபில்டர் விருப்பம் காண்பிக்கப்படும். வாட்ஸ்அப் வணிகம் அல்லாத கணக்குகளில் இந்த அம்சம் காண்பிக்கப்படாது. வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் பயன்பாட்டில் நான்கு விருப்பங்கள் காண்பிக்கப்படும். இந்த சேட்டிங் பயன்பாட்டில், படிக்கப்படாத அரட்டைகள், தொடர்புகள், தொடர்புகள் அல்லாதவை மற்றும் குழுக்கள் என்ற பிரிவுகள் இருக்கின்றன.

நான்கு பிரிவுகளில் சேட்டிங் ஃபில்டர்

நான்கு பிரிவுகளில் சேட்டிங் ஃபில்டர்

அறிக்கையில் வெளியான தகவலின்படி, "வாட்ஸ்அப் படிக்காத சேட்டிங் அதாவது ரீட் செய்யப்படாத சேட்டிங், தொடர்புகளில் இல்லாதவர்கள், தொடர்புகளில் இருப்பவர்கள் மற்றும் குழுக்களில் தேடுவது உள்ளிட்டவைகளை எளிதாக்குகிறது. பயன்பாட்டின் எதிர்கால புதுப்பிப்பில் நிலையான வாட்ஸ்அப் கணக்குகளுக்கும் அதே அம்சம் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் உள்ள ஒரு சிறு வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் அரட்டைகள் மற்றும் தகவல்களை தேடாத போதும் ஃபில்டர் பட்டன் எப்போதும் காண்பிக்கப்படும். வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்பின் பீட்டா பயனர்களுக்கான சேட்டிங் ஃபில்டர் சோதனை கட்டத்தில் இருக்கிறது. வாட்ஸ்அப் விரைவில் இந்த அம்சத்தை அப்டேட் மூலம் அனைத்து பயனர்களுக்கும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம்

வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம்

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் சமீபத்தில் வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சத்தை வெளியிட்டது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சமானது பயனர்களை ஒரு இமோஜி மூலம் உடனடியாக எதிர்விணையாற்ற உதவும். ஆரம்பக் கட்டத்தில் லைக், லவ், ஸ்மைல், ஆச்சரியம், சோகம் மற்றும் நன்றி என்று ஆறு இமோஜி இருக்கும் எனவும் வரும் காலத்தில் அனைத்து இமோஜிகளும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆறு இமோஜிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்

ஆறு இமோஜிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்

ஒவ்வொரு மெசேஜ்-க்கும் ரிப்ளை செய்ய அதை மார்க் செய்து ரிப்ளை செய்ய வேண்டும். அது ஒரு மெசேஜ் ஆக அனைவருக்கும் காட்டப்படும். அடுத்தடுத்த தலைப்பை பேசத் தொடங்கினாலும் பழைய மெசேஜ்-க்கு ஒருவர் ரியாக்ட் செய்யும் போது அது மீண்டும் மெசேஜ் ஆக மாறும். இந்த செயலை குறைக்க ஒருவர் ஒரு மெசேஜ்-க்கு இமோஜி முறையில் ரிப்ளை செய்யும் போது அது மெசேஜ்களின் கீழ் எத்தனை இமோஜி ரிப்ளை செய்யப்பட்டிருக்கிறது என இமோஜிகளுடன் காட்டப்படும். இதை கிளிக் செய்து எத்தனை இமோஜிகள் என தனித்தனியாக பார்த்துக் கொள்ளலாம். தற்போது வரை ஆறு இமோஜிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் நிலையில் எதிர்கால புதுப்பிப்பில் வாட்ஸ்அப் ரியாக்ஷன்ஸ் பயன்பாட்டில் கூடுதல் இமோஜிகள், ஜிஐஎஃப் மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்த அனுமதிக்கலாம். சமீபத்திய அறிக்கையின்படி இந்த அம்சமானது பயனர்கள் ப்ளஸ் பட்டனை கிளிக் செய்யும் முழு இமோஜி விசைப்பலகைகள் அணுகலும் வழங்கப்படும். ஒருவர் மெசேஜை அழுத்திப் பிடிக்கும் பட்சத்தில் இந்த எதிர்விணை ரியாக்ஷன் அம்சம் காண்பிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Whatsapp Planning to Rolling Out New Chat Filters to Business Account Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X