வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு சிக்கல்: மத்திய அரசு கிடுக்குப்பிடி!

இந்தியாவை பொறுத்த வரையில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும், பெரும்பான மக்கள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் ஆப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது.

|

வாட்ஸ் மூலம் குறுஞ்செய்தி, படங்கள், வீடியோக்கள், ஆடியோ உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல் பரிமாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த வாட்ஸ் ஆப் செயலிக்கு இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

 வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பும் வசதிக்கு சிக்கல்: மத்திய அரசு கிடுக்குப

இந்த செயலி மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களை கொண்டு சேர்க்கிறது. ஆகையால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் எனப்படும் செயலி மூலம் பணம் அனுப்பும் வசதியை கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.

வாட்ஸ் ஆப் பணப் பரிமாற்றம்:

வாட்ஸ் ஆப் பணப் பரிமாற்றம்:

இந்தியாவை பொறுத்த வரையில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும், பெரும்பான மக்கள் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் ஆப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக பணம் அனுப்பும் வசதியை கொண்டு வர முனைப்பு காட்டியது.

வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள்:

வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள்:

இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் பொது மக்களுக்கு உதவும் வகையிலும், வர்த்தகம் நடைபெறும் வகையிலும் பணப்பறிமாற்றம் செய்யும் வசதியை அறிவித்திருந்தது. வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்த அறிவிக்கு பொது மக்களுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

வாட்ஸ் ஆப் அதிகாரிகள் சந்திப்பு:

வாட்ஸ் ஆப் அதிகாரிகள் சந்திப்பு:

வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகிகள் குழு மின்னணு மற்றும் தகவல் அமைச்சக அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது வாட்ஸ் ஆப் செயலி மூலம் இந்தியாவில் பணப்பறிமாற்றம் தொடர்வது குறித்தும் தற்போது தொடங்கியுள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு கிடுக்குபிடி:

மத்திய அரசு கிடுக்குபிடி:

வாட்ஸ் ஆப் நிறுவனம் தொலை இயக்கி முறையில் இந்தியாவில் பணப்பறிமாற்றம் செய்யும் முறை கொண்டு வர முனைப்பு காட்டியது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்தியாவில் இந்த பணப்பரிமாற்ற முறையை நடைமுறை படுத்த அலுவலகத்தை துவங்காமல், ஆட்களை பணியில் அமர்த்தாமல் இச்சேவையை கொண்டு வர முடியாது என கிடுக்குபிடித்தது மத்திய அரசு.

வாட்ஸ் ஆப்புக்கு எதிரானவர்கள் அல்ல:

வாட்ஸ் ஆப்புக்கு எதிரானவர்கள் அல்ல:

இந்நிலையில் மத்திய அரசு வாட்ஸ் ஆப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய குழு உருவாகிறது:

புதிய குழு உருவாகிறது:

மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் பணப்பறிமாற்றம் செய்ய ஏதுவாக இந்தியாவில் புதிய குழுவை உருவாக்குவதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆயுத்த பணிகள் விரைவாக நடக்கும் என்று தெரிகிறது. வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
WhatsApp Payments hit office hurdle : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X