இதை மட்டும் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.105 வரவு: வாட்ஸ்அப் அறிவித்த அட்டகாச சலுகை!

|

வாட்ஸ்அப் பே மூலம் மேற்கொள்ளப்படும் கட்டண பரிவர்த்தனைக்கு ரூ.105 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.105 வரை கேஷ்பேக் சலுகை

ரூ.105 வரை கேஷ்பேக் சலுகை

வாட்ஸ்அப் தளம் இந்திய பயனர்களுக்கு ரூ.105 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. அதாவது வாட்ஸ்அப் பே மூலம் செலுத்தப்படும் அடுத்தடுத்த மூன்று பேமெண்டுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.35 என கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது வரையறுக்கப்பட்ட கால சலுகை ஆகும். அதேபோல் இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அம்சங்களை வழங்கும் வாட்ஸ்அப்

பல்வேறு அம்சங்களை வழங்கும் வாட்ஸ்அப்

இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் தளமாக திகழ்ந்து வருகிறது. வாட்ஸ்அப் தளம் பல்வேறு வகையில் பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. வாட்ஸ்அப் தளத்தில் தகவல்களை பகிர்வதோடு மட்டுமல்லாமல், வீடியோ, இமேஜ், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு தகவலை பகிர பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர் தேவை அறிந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட சேவை தான் வாட்ஸ்அப் பே அம்சம்.

யூபிஐ அடிப்படையிலான கட்டண சேவை

யூபிஐ அடிப்படையிலான கட்டண சேவை

வாட்ஸ்அப் பே என்பது யூபிஐ அடிப்படையிலான கட்டண சேவை தளமாகும். இது கூகுள்பே, போன்பே போன்று பயனர்களை பணம் செலுத்த அனுமதிக்கிறது. அதேபோல் நிறுவனம் பயனர்கள் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் பே தளத்தில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே

வாட்ஸ்அப் பே அதன் பயனர்களுக்கு மொத்தம் ரூ.105 கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. வாட்ஸ்அப் தளமானது அடுத்தடுத்த மூன்று கட்டணங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.35 என கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இந்த தொகைக்கு வரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கவில்லை. உதாரணமாக பயனர்கள் வாட்ஸ்அப் பேமெண்ட் மூலம் ரூ.1 அனுப்பினாலும் ரூ.35 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இது வரையறுக்கப்பட்ட கால சலுகை ஆகும். இந்த சலுகையானது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்புவது எப்படி?

 • நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் தொடர்பை முதலில் தேர்ந்தெடுக்கவும்
 • சேட்டிங் தேர்வுக்கு அருகில் இருக்கும் கட்டணம் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
 • இதில் எவ்வளவு தொகை என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் குறிப்பையும் எழுதலாம். அதாவது நீங்கள் எந்த காரணத்துக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்று எழுத முடியும்.
 • வங்கிக் கணக்கை இணைக்கும் வழிமுறைகள்
  • வங்கிக் கணுக்கு இணைக்கப்படாத பட்சத்தில் அதை இணைக்க வேண்டும்.
  • வங்கிக் கணக்கை இணைக்க Get Started என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் காட்டப்படும் உங்கள் வங்கிப் பெயரை தேர்ந்தெடுக்கவும்
  • அடுத்ததாக மொபைல் எண்ணை சரிபார்க்க என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • வங்கி எண்ணுடன் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அப்படி இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.
  • பின் Verify என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • தற்போது வங்கிக் கணக்கு வாட்ஸ்அப் பே தளத்தில் இணைக்கப்படும். இதன்பின் கொடுக்கப்பட்ட இடத்தில் தொகையை உள்ளிட வேண்டும்.
  • அடுத்து (Next) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • உடனடி கேஷ்பேக்
   • ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இணைக்கலாம் அப்படி இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் எந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
   • அடுத்ததாக செண்ட் பேமெண்ட் என்பதை கிளிக் செய்யவும்
   • இதன்பின் நீங்கள் முன்னதாகவே உருவாக்கி இருக்கும் UPI பின்னை பதிவிட வேண்டும்
   • அவ்வளவுதான், நீங்கள் தேர்ந்தெடுத்த நபருக்கும் குறிப்பிடப்பட்ட தொகை அனுப்பப்படும். அதேநேரத்தில் உங்களது வங்கிக் கணக்குக்கும் ரூ.35 கேஷ்பேக் வரவு வைக்கப்படும்.
   • முன்னதாகவே தெரிவித்தப்படி இந்த கேஷ்பேக் சலுகையானது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Whatsapp Pay Offering Rs.105 Cashback for india Users: How to Register and Get Cashback

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X