Home
News

பணம் அனுப்புனா கேஷ்பேக் உறுதி: இவ்வளவு கொடுப்பாங்களா?., வாட்ஸ்அப் பே தளத்தில் பணம் அனுப்புவது எப்படி?

டிஜிட்டல் இந்தியா என்ற மத்திய அரசின் கொள்கை பல மடங்கு முன்னோக்கி செல்கிறது. இதில் பிரதானமாக குறிப்பிடத்தக்க வகையில் இருப்பது டிஜிட்டல் பேமெண்ட் அம்சமாகும். டிஜிட்டல் பேமெண்ட் என்பது பல மடங்கு முன்னோக்கி வளர்ந்து வருகிறது. இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் பிரதான பயன்பாடாக இருக்கிறது. இந்த வரிசையில் முன்னோக்கி வருகிறது வாட்ஸ்அப் பே அம்சம், செய்தியிடல் தளத்தில் பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப். தற்போது இந்த அம்சத்தில் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வசதியும் இணைக்கப்பட்டிருக்கிறது.

ரூ.20,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனை

ரூ.20,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனை

மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று (ஏப்ரல் 24) உரையாற்றினார். அதில் தினசரி ரூ.20,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நடைபெறுகின்றன எனவும் இது சேவைகளை மேம்படுத்தும் வகையிலும் திறந்த சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் சிறிய ஆன்லைன் கட்டணங்களும் பெரிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க உதவுகின்றன எனவும் இதன்மூலம் பல புதிய ஃபின்டெக் ஸ்டார்ட்-அப்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது எனவும் நாள்தோறும் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது எனவும் குறிப்பிட்டார். சிறிய தொழில் முனைவோர்கள் அதாவது சிறிய உணவகங்கள், பழக்கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஸ்டார்ட் அப் துறை குறித்து அறிந்த பலரும் அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் பணத்தை எடுத்து செல்லவோ ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை என குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் பே சேவை

வாட்ஸ்அப் பே சேவை

வாட்ஸ்அப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறுது காலமே ஆகிறது, இருப்பினும் இதன்மூலம் நினைத்தளவு குறிப்பிட்ட வளர்ச்சியை பெற முடியவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் கூகுள் பே, போன் பே இயங்குதளம் பெற்ற பயனர் எண்ணிக்கையை வாட்ஸ்அப் பே தளத்தால் பெறமுடியவில்லை. இதன்காரணமாக வாட்ஸ்அப் பே கேஷ்பேக் சலுகையை வழங்க முடிவு செய்திருக்கிறது.

கேஷ்பேக் சலுகைகள்

கேஷ்பேக் சலுகைகள்

மெட்டாவுக்கு சொந்தமான இந்த செயலி, வாட்ஸ்அப் பேமெண்ட்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை கொண்டுவர கேஷ்பேக் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேஷ்பேக் அம்சமானது படிப்படியாக கிடைக்கும் என வாட்ஸ்அப் தெளிவுப்படுத்தி இருக்கிறது. முன்னதாக வாட்ஸ்அப் ரூ.33 வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. வாட்ஸ்அப் பே கேஷ்பேக் பெறுவதற்கு பேமெண்ட்களுக்கு பதிவு செய்து அதில் உள்ள தொடர்புக்கு முதலில் பணத்தை அனுப்ப வேண்டும்.

ரூ.33 வரை கேஷ்பேக் பெறும் வாய்ப்பு

ரூ.33 வரை கேஷ்பேக் பெறும் வாய்ப்பு

வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதற்கு உங்கள் தொடர்பில் உள்ளவர்கள் அதில் பதிவு செய்துள்ளார்களா என்பதை கவனிக்க, தொடர்பின் பெயருக்கு அடுத்ததாக ஒரு பரிசு ஐகான் காட்டப்படும். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உங்கள் தொடர்பு பெயருக்கு அருகில் கிஃப்ட் ஐகான் காணவில்லை என்றால் பணத்தை அனுப்புவதற்கு முன் அவர்களை வாட்ஸ்அப் பே தளத்தில் இணையும் அழைக்க வேண்டும். வாட்ஸ்அப் பே தளத்தில் முதலில் ஒரு ரூபாய் அனுப்பினாலும் ரூ.33 வரை கேஷ்பேக் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி?

  • வாட்ஸ்அப் மூலம் உங்கள் தொடர்புகளுக்கு எப்படி பணம் அனுப்புவது என்பது குறித்து பார்க்கலாம். இது மிகவும் எளிதான விஷயமாகும்.
  • வாட்ஸ்அப் தளத்தை ஓபன் செய்து நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சேட்டிங்கை ஓபன் செய்யவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்பு வாட்ஸ்அப் கட்டண விருப்பத்தை பயன்படுத்தவில்லை என்றால், அவரை வாட்ஸ்அப் தளத்தை பதிவு செய்யும்படி அழைப்பு விடுக்கவும்.
  • பணம் பெறுபவர் முன்னதாகவே வாட்ஸ்அப் பே தளத்தை பயன்படுத்தினால், "பேமெண்ட்" என்ற விருப்பத்தை கிளிக் செய்து தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அனுப்பும் தொகையை பதிவிட்டு "அடுத்து" என்ற விருப்பத்தை கிளிக் செய்து "சென்ட் பேமெண்ட்" என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் வாட்ஸ்அப் பின் கேட்கப்படும், பணத்தை அனுப்ப உங்கள் பின்-ஐ உள்ளிட்டு அடுத்து என்பதை தேர்ந்தெடுத்து பணத்தை அனுப்பலாம்.
  • வாட்ஸ்அப் பே எவ்வாறு அமைப்பது?

    வாட்ஸ்அப் பே எவ்வாறு அமைப்பது?

    வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் ஓபன் செய்வது மிகவும் எளிதானது, அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

    முதலில் உங்கள் வாட்ஸ்அப் தளத்தை திறந்து மெனு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

    கட்டண விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் அமைவு விருப்பம் காண்பிக்கப்படும் அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    விருப்பங்கள் பட்டியலில் காட்டப்படும் உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, எஸ்எம்எஸ் மூலம் அங்கீகாரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பரிவர்த்தனைகளை தொடர உங்கள் யூபிஐ பின்-ஐ உள்ளிடுவது கட்டாயமாகும்.

Best Mobiles in India

English summary
Whatsapp Pay Offering Cashback facility: How to Register and Get Cashback
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X