வாட்ஸஅப் புது அம்சம்: இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதையும் இணைக்கலாம்- அமோக வரவேற்பு!

|

பிரபல செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனமானது ஒரு புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ஸ்டேட்டஸ் பிரிவில் எந்த ஒரு வலைதளம் மற்றும் இணையத் தகவலுக்கான இணைப்பை (Link) சேர்க்க பயனர்களை அனுமதிக்கிறது. பயனர்கள் தங்கள் நிலையில் பதிவேற்றும் இணைப்புகளுக்கான முன்னோட்டங்களை இணைப்பதில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இணைப்பில் உள்ள மாதிரி காட்சிகளானது ஒருவர் எதை பகிர்ந்து கொள்கிறார் என்பதை சரிபார்க்க உதவுகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருக்கிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சம்

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது வலைதளம் மற்றும் மூலத்திற்கான இணைப்பை (Link) இணைக்க முடியும். இது நீங்கள் என்ன பகிர்ந்துள்ளீர்கள் என்ற முன்னோட்டத்தை காண்பிக்கும். லிங்க் தனியாக பதிவிட்டு அது என்ன என்பதை கீழே தனியாக பதிவிட வேண்டும். இதை கிளிக் செய்த பிறகு என்ன என்பதை பார்க்க முடியும். இந்த சிக்கலை தீர்க்கும் வகையிலான புது அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முன்னோட்டம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முன்னோட்டம்

WaBetaInfo புதிய அம்சத்தை தளத்தில் கண்டறிந்துள்ளது. அதில் தெரிவித்த தகவலின்படி இது ஸ்டேட்டஸ் பிரிவில் எந்தவொரு வலைத்தளம் அல்லது மூலத்திற்கும் இணைப்புகளைச் சேர்க்க பயனரை அனுமதிக்கிறது. வாட்ஸ்அப்பில் முன்னதாகவே இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும் இருப்பினும் நீங்கள் அதை ஸ்டேட்டஸில் காப்பி செய்து அதை பதிவிட வேண்டும். தற்போது ஸ்டேட்டஸில் இதன் முன்னோட்டம் நேரடியாக காண்பிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட தளத்தையோ, வீடியோவையோ விளம்பரப்படுத்த விரும்புவோருக்கு அதன் இணைப்புகளை பகிர அனுமதிக்கிறது. இது பயனர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கும்

விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கும்

ஒரு இணைப்பில் உள்ள மாதிரி காட்சியானது ஒருவர் எதை பகிர்ந்திருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த அம்சம் WhatsApp இன் iOS பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சமானது வரும் காலங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கும் கிடைக்கும். தற்போது ஸ்டேட்டஸிற்கான புதிய முன்னோட்ட இணைப்பு அம்சம் ஐஓஎஸ்-ன் 2.22.11.16 பதிப்பைக் கண்டறிந்துள்ளது. இந்த அம்சம் தற்போது வளர்ச்சியில் இருக்கிறது. எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும்.

2ஜிபி அளவிலான டேட்டா

2ஜிபி அளவிலான டேட்டா

அதேபோல் வாட்ஸ்அப்பில் பயனர்கள் 2ஜிபி அளவிலான டேட்டாவை பகிர அனுமதிக்கிறது. இது ஒரு சிறந்த அம்சமாகும். டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் பயன்பாடுகளில் நீண்ட காலமாக இதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் அனுப்பும் அனைத்து கோப்புகளும் என்க்ரிப்ட் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்று இயங்குதளம் குறிப்பிடுகிறது.

வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சம்

வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சமானது தற்போது பீட்டா சோதனை நிலையில் இருக்கிறது. பிஸ்னஸ் கணக்குகளில் தேடல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது இந்த அம்சம் காண்பிக்கப்படும். வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர் அம்சமானது தற்போது பீட்டா சோதனை நிலையில் இருக்கிறது. பிஸ்னஸ் கணக்குகளில் தேடல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது இந்த அம்சம் காண்பிக்கப்படும். வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர்கள் அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் சேட்டிங் ஃபில்டர்கள் ஆனது வணிக பயனர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சமானது சில எளிய ஃபில்டர்களை இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது.

குறிப்பிட்ட சேட்டிங்கை மட்டும் கண்டறிய உதவும்

குறிப்பிட்ட சேட்டிங்கை மட்டும் கண்டறிய உதவும்

பிரபல செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் அதன் இயங்குதளத்தில் சேட்டிங் ஃபில்டர்கள் அம்சத்தை செயல்படுத்த இருக்கிறது. ஃபில்டர்களை பயன்படுத்தி குறிப்பிட்ட சேட்டிங்கை மட்டும் கண்டறிய இந்த அம்சம் பயனர்களுக்கு உதவுகிறது. WABetaInfo வெளியிட்ட அறிக்கையின்படி, சேட்டிங் ஃபில்டர் அம்சமானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாம் பயனர்களுக்கு எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடும் என கூறப்படுகிறது. சில சேட்டிங்களை விரைவாகக் கண்டறியவும் சில எளிய ஃபில்டர்களை இணைக்கவும் இந்த அம்சமானது பயனர்களை அனுமதிக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Whatsapp Now Working on New Feature: Previews to Links Showing in Status

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X