Home
News

அந்த சிரமமும் இனி இல்லை- இனி டயலருக்குள் போகாது.,நேரடியாக வாட்ஸ்அப் சேட்டிங் தான்: சோதனையில் புது அம்சம்!

பிரபலமான உடனடி செய்தியிடம் தளமான வாட்ஸ்அப் சில புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்-ல் பயன்படுத்தப்படும் பிரதான அம்சங்களில் ஒன்றாக இருப்பது வாய்ஸ் மெசேஜ். வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அம்சமானது பிரதான பயன்பாடாக இருக்கிறது. வாட்ஸ்அப் தளமானது பயனர்களின் தேவை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக நீங்கள் சேட்டிங்கில் இருக்கும் போது ஒரு எண்ணை கிளிக் செய்தால் அது நேரடியாக உங்கள் டயலருக்குள் செல்லும். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புதிய அப்டேட் மூலம் சேட்டிங் பயன்பாட்டில் உள்ள எண்ணை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் பாப் அப் உரையாடல் பக்கம் காண்பிக்கப்படும்.

பீட்டா பயன்பாட்டில் புது அம்சம்

பீட்டா பயன்பாட்டில் புது அம்சம்

சமூகவலைதளமான வாட்ஸ்அப் பயனர்கள் அனுபவத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களை கொண்டு வர இருக்கிறது. சமூகவலைதள பயன்பாட்டில் வாட்ஸ்அப் தளம் பிரதான தேவையாக இருக்கிறது. வாட்ஸ்அப் தற்போது 2 பில்லியன் மாதாந்திர பயனர்கள் மற்றும் 5 பில்லினுக்கும் அதிகமான பதிவிறக்கங்களையும் ப்ளே ஸ்டோரில் பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் தற்போது புதிய வளர்ச்சியாக பீட்டா பயன்பாட்டில் புது அம்சம் ஒன்றை சோதித்து வருகிறது.

நேரடியாக டயலருக்குள் செல்லும்

நேரடியாக டயலருக்குள் செல்லும்

புதிய அம்சம் குறித்து WABetaInfo தளத்தின் அறிக்கைப்படி, நீங்கள் பீட்டா இயங்குதள பயனராக பதிவு செய்திருந்தால் தற்போது இந்த அம்சத்தை நீங்களும் சோதிக்கலாம். சில சேட்டிங் பயன்பாட்டில் தொலைபேசி எண்கள் மெசேஜ்களாக அனுப்பப்பட்டிருந்தால் அதை கிளிக் செய்யும் போது நேரடியாக டயலருக்குள் செல்லும், தற்போது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்வதற்கான சில புதிய கருவிகளை காணலாம்.

பாப் அப் உரையாடலுக்குள் செல்லும்

பாப் அப் உரையாடலுக்குள் செல்லும்

தற்போதைய இந்த புதிய அப்டேட் மூலம் சேட்டிங்கில் உள்ள எண்ணைத் தட்டினால், வாட்ஸ்அப் முதலில் பாப் அப் உரையாடலை வழங்கும். அதேபோல் அந்த எண் வாட்ஸ்அப் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வாட்ஸ்அப் செக் செய்துக் கொள்ளும். பின் எண்ணை கிளிக் செய்தவுடன் வாட்ஸ்அப் பாப் அப் சேட்டிங் காட்டப்படும். அந்த அரட்டை தளத்திற்குள் சென்று அந்த நபருடன் தகவலை பெறும் விருப்பம் காண்பிக்கப்படும். சமீபத்திய பீட்டா 2.22.8.11 என்ற எண்ணுடன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் இந்த அம்சம் சோதனை அடிப்படையில் கிடைக்கிறது.

பல புதிய அம்சங்களை அறிமுகம்

பல புதிய அம்சங்களை அறிமுகம்

வாட்ஸ்அப் சமீபத்தில் வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் தொகுப்பில் முதலாவதாக இருப்பது அவுட் ஆஃப் தி சாட் ப்ளே பேக் ஆகும். இது பயனர்களை சேட்டிங் சாளரத்திற்கு வெளியேயும் வாய்ஸ் மெசேஜை கேட்க அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் அடுத்த அம்சமானது வாய்ஸ் மெசேஜ்-ன் போது இடைநிறுத்தம் (ரெஸ்யூம்) செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்யும் போது குரல் பதிவை இடைநிறுத்தி மீண்டும் அதை தொடங்க அனுமதிக்கிறது.

வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் பல்வேறு புது அம்சம்

வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் பல்வேறு புது அம்சம்

அடுத்ததாக அலைவடிவ காட்சிப்படுத்தல் (Waveform Visualisation) என்பது ஆகும். அலைவடிவ காட்சிப்படுத்தல் என்பது குரல் செய்தியை அனுப்பும் போது ஒலியின் அளவை காட்சிப்படுத்தும் அம்சமாகும். வாய்ஸ் மெசேஜை கேட்கும் போது இந்த அம்சத்தை காணலாம். வாட்ஸ்அப்-ன் அடுத்த அம்சமானது டிராஃப்ட் ப்ரிவியூ ஆகும். டிராஃப்ட் ப்ரிவியூ (Draft Preview) அம்சத்தின் மூலம் பயனர்கள் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்துவிட்டு நிறுத்தி சேமித்துவிட்டு அதை கேட்டப்பின் அனுப்பலாம். அடுத்ததாக இருப்பது நினைவு பின்னணி இயக்க (Remember Playback) அம்சமானது நீங்கள் வாய்ஸ் மெசேஜ் கேட்பதை நிறுத்திவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதேபோல் வேகமான ப்ளேபேக் (Fast Playback on Forwarded Messages) அம்சத்தின் மூலம் நீங்கள் எத்தனை பெரிய வாய்ஸ் மெசேஜாக இருந்தாலும் அதை வேகமாக ப்ளே செய்ய அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Now Testing New Feature: While Click a Phone number in Chating it directly take to pop up dialogue
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X