மே.5 முதல் செயல்படாது.. WhatsApp-க்கு வச்சாச்சு.. 5 மாசத்துல இதை பண்ணிடுங்க.. இல்லனா.. எந்த மொபைல் மாட்டுது?
வாட்ஸ்அப் (WhatsApp) இல்லாத மொபைல்களை இப்போது பார்க்க முடியாது என்று அடித்து சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு மொபைல் யூசர்களிடையே அதிகரித்துவிட்டது. இதனால், வாட்ஸ்அப்-பில் செய்யப்படும் மாற்றங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு மாற வேண்டி இருக்கிறது. இப்போது, 2025ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இதனால், உங்களது வாட்ஸ்அப் செயல்படாமல்கூட போக வாய்ப்புள்ளது. ஆகவே, இப்போது என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இது பொருந்தாது. இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டிருக்கும் மொபைல்கள் மற்றும் ஓஎஸ் வெர்ஷன்கள் உங்களிடம் இருந்தால், வேறு வழி இல்லை. 2025ஆம் ஆண்டு மே 5ஆம் தேதியில் இருந்து நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகும். இதில் எந்தெந்த மொபைல்கள் மற்றும் ஓஎஸ் வெர்ஷன் இருக்கிறது.

இந்த புதிய மாற்றம் மூலமாக 15.1 விட பழைய ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன்களின் வாட்ஸ்அப் சப்போர்ட் (iPhone WhatsApp Support) நிறுத்தப்பட இருக்கிறது. இப்போது, ஐஓஎஸ் 12.1 (iOS 12.1) வெர்ஷன் வரையில் வாட்ஸ்அப் சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், இது மே 5ஆம் தேதிக்கு பிறகு மாற இருக்கிறது. ஐஓஎஸ் 15.1 (iOS 15.1) விட பழைய வெர்ஷன்களில் கிடைக்காது.
ஆகவே, அந்த வெர்ஷனில் இருக்கும் மொபைல்களில் மேசேஜ்கள், வாய்ஸ் கால்கள் போன்றவற்றை செய்ய முடியாது. இந்த வெர்ஷனில் என்னென்ன மொபைல்கள் இருக்கிறது என்று பார்த்தால், ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus), ஐபோன் எஸ்5 (iPhone 5S), ஐபோன் 6 (iPhone 6) போன்றவை இருக்கின்றன. ஆகவே, வாட்ஸ்அப் பயன்படுத்துவது இனிமேல் இயலாத காரியமாக இருக்கப் போகிறது.
அதே நேரத்தில் ஐஓஎஸ் அப்டேட் செய்யப்படும் ஐபோன்களில் வாட்ஸ்அப் தொடர்ந்து கிடைக்கலாம். ஆகவே, ஐபோன் யூசர்கள் தங்களது செட்டிங்ஸ் பக்கத்துக்கு சென்று ஜென்ரல் டேப்ஐ கிளிக் செய்து, அதில் அடுத்த வெர்ஷன் ஐஓஎஸ் கிடைத்தால் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது வாட்ஸ்அப் தொர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
ஆனால் இதை 2025ஆம் ஆண்டு மே 5ஆம் தேதிக்குள் செய்து முடித்து விடுங்கள். வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்களுக்கு சென்றுவிட்டன. இதனால், அப்டேட் செய்யப்படாத அல்லது அப்டேட்கள் முடிந்த மொபைல்களில் புது வெர்ஷனை பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனாலேயே வாட்ஸ்அப் நிறுவனம் முன்கூட்டியே யூசர்களுக்கு இதை தெரிவிக்கிறது.
ஜூன் மாதத்தில் ஆண்ட்ராய்டு 5.0 (Android 5.0) அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்பதை தெரிவித்தது. இதனால், சாம்சங் கேலக்ஸி நோட் 3, சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி, சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ், சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி, மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ் போன்ற பல்வேறு ஆண்ட்ராய்டு மொபைல்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது.
இப்போது, ஐபோன் எஸ்5, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்ற மொபைல்களிலும் செயல்படாமல் இருக்க போகிறது. மேலும், வாட்ஸ்அப் நிறுவனம், முன்னதாக வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட்ஸ் (WhatsApp Voice Message Transcripts) அப்டேட்டை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்தது. இது வாய்ஸ் மெசேஜ்களில் நேரடியாக மாற்றத்தை கொண்டு வருகிறது.
அதாவது, வாய்ஸ் மெசேஜ் பெறும்போது, அதை வெறும் ஆடியோவாக மட்டுமல்லாமல், எழுத்தாகவும் யூசர்கள் மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு வரும் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றி படித்து கொள்ளலாம் அல்லது அதை காப்பி செய்தும் வைத்து கொள்ளலாம். இது ஹெட்போன்கள் இல்லாத நேரத்தில் யூசர்களுக்கு பயன்படும்.


Click it and Unblock the Notifications








