Home
News

பொள்ளாச்சி பாலியல் கொடுமை : வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை- போலீஸார் தகவல்.!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வாட்ஸ் ஆப் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று புகார் எழுப்பப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாட்ஸ் ஆப் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று புகார் எழுப்பப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ்குமார் மற்றும் சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு பிறகு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஒத்துழைகாத்த வாட்ஸ ஆப்

ஒத்துழைகாத்த வாட்ஸ ஆப்

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி வந்துள்ளனர். வழக்கின் விசாரணையின் பொது வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு தொடர்பாக போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று காவல்துறையினர் நீதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களை ஏன் இந்தியாவில் தடை செய்யக் கூடாது?

சமூக வலைத்தளங்களை ஏன் இந்தியாவில் தடை செய்யக் கூடாது?

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்காத வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ஏன் இந்தியாவில் தடை செய்யக் கூடாதென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டிக் டாக் செயலி சென்ற வாரம் தான் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம் அளிக்க நோட்டீஸ்

விளக்கம் அளிக்க நோட்டீஸ்

குறைகளைத் தீர்க்கும் பொதுத்தகவல் அதிகாரிகளை இன்னும் பல சமூக வலைத்தள நிறுவனங்கள் நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு சமூக வலைத்தளங்கள் ஏன் ஒத்துழைக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு

வழக்கு ஒத்திவைப்பு

சமூக வலைத்தளங்களிற்கு விளக்கம் அளிக்க கூறி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமை ஒத்தி வைத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
whatsapp not sharing details in pollachi case says tn police in mhc : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X