இனி WhatsApp ஸ்டேட்டஸை இப்படி தான் பார்க்கணுமா? புது அப்டேட் விபரங்கள்.!

|

WhatsApp இப்போது அதன் பயனர்களுக்காக புதிய அப்டேட்டை களமிறங்குகிறது. மெட்டாவுக்குச் சொந்தமான நிறுவனம் சமீபத்தில் அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான பல தனியுரிமை அம்சங்களை அறிவித்து அறிமுகம் செய்து வருகிறது. இப்போது, வாட்ஸ்அப் மற்றொரு பெரிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அப்டேட் இனி நீங்கள் ஸ்டேட்டஸ் பார்க்கும் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றப்போகிறது. இந்த புது அப்டேட் என்ன செய்யுமென்று விரிவாகப் பார்க்கலாம்.

WaBetaInfo வெளியிட்ட புதிய அப்டேட் விபரம்

WaBetaInfo வெளியிட்ட புதிய அப்டேட் விபரம்

WaBetaInfo இன் தகவலின் படி, புதிய WhatsApp அப்டேட் உடன் நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கவிருக்கிறது. இந்த புதிய WhatsApp அப்டேட்டின் படி, இது வாட்ஸ்அப் பயனர்களை இனி அவர்களுடைய சாட் லிஸ்ட் இல் இருந்தபடியே வாட்ஸ்அப் காண்டாக்ட்களின் ஸ்டேட்டஸ் விபரங்களைப் பார்க்க அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 2.22.18.17 வெர்ஷன் மூலம் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அனுபவம் மாறுமா?

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அனுபவம் மாறுமா?

இந்த அம்சம் இன்னும் சோதனையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த அம்சம் சோதனை கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து, அனைவரின் பயன்பாட்டிற்குக் கிடைக்க இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் என்று WaBetaInfo தகவல் குறிப்பிடுகிறது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்பது வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டோரி போன்ற அம்சமாகும். இது 24 மணிநேரத்திற்குப் பிறகு தானாக மறைந்துவிடும். இதில் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடலாம்.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

தற்போதுள்ள ஸ்டேட்டஸ் அனுபவம் மற்றும் புதிய அம்சத்திற்கு என்ன வித்தியாசம்?

தற்போதுள்ள ஸ்டேட்டஸ் அனுபவம் மற்றும் புதிய அம்சத்திற்கு என்ன வித்தியாசம்?

தற்போது, ​​ஒரு காண்டாக்ட்டின் ஸ்டேட்டஸை பார்க்க, நாம் பிரத்தியேகமான ஸ்டேட்டஸ் டேப் சென்று அவற்றை கிளிக் செய்து பார்க்க வேண்டும். இந்த அம்சம் இப்போது அனைவருக்கும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், WaBetaInfo கூறும் புதிய அம்சம் அனைவருக்கும் நேரலையானதும் இனி ஸ்டேட்டஸ் பார்க்கும் அனுபவம் மாற்றப்படும். இந்த அம்சம் வந்தால், பயனர்கள் சாட் செய்யும் போதே பட்டியலில் இருந்து அப்படியே ஸ்டேட்டஸ் பார்க்க முடியும்.

2 பில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ்அப்

2 பில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ்அப்

கிட்டத்தட்ட 2 பில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் அதன் பயனர் அனுவத்தை மேம்படுத்த, தொடர்ந்து மிகவும் வேகமாகப் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் இன்னும் பல புதிய அம்சங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை நிறுவனம் மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் இதுவரை அறிமுகப்படுத்திய அனைத்து முக்கிய அப்டேட்களின் விபரங்கள் இதோ.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

ஸ்டாண்ட் அலோன் விண்டோஸ் ஆப்ஸ்

ஸ்டாண்ட் அலோன் விண்டோஸ் ஆப்ஸ்

விண்டோஸ் பயனர்களுக்காக ஒரு தனியான செயலியை மெட்டா சமீபத்தில் அறிவித்தது. இது இப்போது PC அல்லது லேப்டாப்பில் WhatsApp ஐப் பயன்படுத்த போனை இணைக்காமல் பயனரை அனுமதிக்கிறது. மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் மூலம் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடவும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் பயனர்கள் வேகமான அனுபவத்தை லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாகப் பயன்படுத்தலாம்.

சைலண்ட் குரூப் எக்ஸிட்

சைலண்ட் குரூப் எக்ஸிட்

வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான மற்றொரு முக்கிய புதுப்பிப்பு இது, இந்த அம்சம் தனிநபர் பிரைவசிக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஒரு குழுவில் இருந்து நீங்கள் நீங்க நினைக்கும் போது இது பெரிதும் பயனளிக்கிறது. குழுவில் உள்ள மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல், குழு அரட்டையிலிருந்து அமைதியாக வெளியேறப் பயனர்களை இந்த அம்சம் அனுமதிக்கும். குழு நிர்வாகிக்கு மட்டும் நீங்கள் வெளியேறிய தகவல் தெரிவிக்கப்படும்.

ரெஸ்டோர் டெலீட்டட் மெசேஜ்

ரெஸ்டோர் டெலீட்டட் மெசேஜ்

இந்த அம்சம் பயனர்கள் தற்செயலாக நீக்கப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க அனுமதிக்கும் புதுப்பிப்பில் WhatsApp செயல்படுகிறது. இந்தச் செய்திகளை மீட்டெடுக்க அவர்களுக்கு சில வினாடிகள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்த அம்சம் பயன்பாட்டின் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால், விரைவில் இது அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp new update to let you see Status directly from chat list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X