வாட்ஸ்ஆப் புது அப்டேட் புது அம்சங்கள் : அப்டேட் பண்ணிட்டீங்களா??

By Meganathan
|

உலக பிரபலமான குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் மாதம் ஒரு அப்டேட் மூலம் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. தினசரி அடிப்படையில் அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயனர் எண்ணிக்கை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் சமமான வரவேற்பு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்டேட்

அப்டேட்

வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அப்டேட் மூலம் டாக்குமெண்ட் ஷேரிங், வாய்ஸ் மெயில், ஃபார்மேட்டெட் டெக்ஸ்ட் போன்ற புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் வழங்க இருப்பதை உணர்த்தும் செய்திகள் பல மாதங்களாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

பதிப்பு

பதிப்பு

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்கள் வாட்ஸ்ஆப் செயலியின் 2.16.229 பதிப்பிலும் ஐஓஎஸ் இயங்குதளத்தின் 2.16.8 பதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் மெயில்

வாய்ஸ் மெயில்

வாட்ஸ்ஆப் செயலியில் மற்றவருக்கு அழைப்பு மேற்கொள்ளும் போது மறுமுனையில் இருந்து பதில் வராத போது இனி நேரடியாக வாய்ஸ் மெயில் அனுப்ப முடியும்.

ஆப்ஷன்கள்

ஆப்ஷன்கள்

முன்னதாக அழைப்பை எடுக்காத போது சாட் விண்டோ ஓபன் ஆகும். இனி மறுமுனையில் அழைப்பை ஏற்காத போது மீண்டும் அழைப்பது மற்றும் வாய்ஸ் மெசேஜ் என இரு ஆப்ஷன்கள் திரையில் தெரியும்.

அம்சங்கள்

அம்சங்கள்

கேன்சல் ஆப்ஷன் ( cancel option) கிளிக் செய்தால் சாட் விண்டோ திறக்கும், மாறாக (Call again) மீண்டும் அழைப்பை விடுக்கும் ஆப்ஷனை கிளிக் செய்தால் மீண்டும் அழைப்பை மேற்கொள்ள முடியும்.

வாய்ஸ் மெயில்

வாய்ஸ் மெயில்

வாய்ஸ் மெயில் அனுப்பும் போது மற்ற சேவைகளில் அனுப்புவதைப் போல் ஆப்ஷனினை கிளிக் செய்து, தகவலைப் பேசியதும் அனுப்பலாம்.

அழித்தல்

அழித்தல்

ஒரு வேலை வாய்ஸ் மெசேஜ் சரியாக வரவில்லை எனில் அதனினை இடது புறமாக ஸ்வைப் செய்தால் அழிந்து விடும். இதே வழிமுறையினை டிராஃப்ட் மெசேஜ்களுக்கும் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp New update brings New features on Android and iOS Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X