Whatapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் எளிதாக இதை செய்யலாம்!
Whatapp செயலியில் புதிய சேமிப்பு மேலாண்மை அம்சம் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சம் தேவையற்ற வாட்ஸ்அப் வீடியோக்கள், மீடியா ஃபைல்கள் உள்ளிட்டவைகளை எளிதாக நீக்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புது அம்சம்
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது.

புதிய சேமிப்பு மேலாண்மை அம்சம்
தேவையற்ற வாட்ஸ்அப் வீடியோக்கள், மெசேஜ்கள் மற்றும் மீடியா ஃபைல்களை நீக்குவதற்கான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய சேமிப்பு மேலாண்மை அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது. வாட்ஸ்அப் சேட்களின் அனைத்து மெசேஜ்களையும் ஒரே கிளிக்கில் நீக்க இது அனுமதிக்கிறது.

ஒரே கிளிக்கில் நீக்கலாம்
வாட்ஸ்அப் புதிய அம்சம் ஆவணங்கள்(Document), லிங்க்குகள்(Links), டெக்ஸ்ட், தொடர்புகள் (contact), வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், புகைப்படம் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை ஒரே கிளிக்கில் நீக்க அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் செயலி அப்டேட்
இந்த புதிய சேமிப்பு மேலாண்மை அம்சத்தை செட்டிங்ஸ் மெனுவில் பெறலாம். முன்னதாக கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்கள்
வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும், மேலே வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் செட்டிங்க்ஸ் தேர்வை கிளிக் செய்யவும். அதில் தரவு மற்றும் சேமிப்பக பயன்பாடு(Data and Storage usage) என்பதற்குள் சென்று சேமிப்பக நிர்வகித்தல் (Manage Storage) என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

5 எம்பிக்கு பெரிதாக இருக்கும் ஃபைல்கள்
இதில் 5 எம்பிக்கு பெரிதாக இருக்கும் ஃபைல்களை தனியாக காண்பிக்கும் பிரிவு பயனர்களுக்கு காண்பிக்கப்படும். இது பயனர்களை முற்றிலும் தேவையில்லாத தகவல்களை நீக்க அனுமதிக்கிறது. தொடர்பு பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு சேட்டிங்கும் எவ்வளவு சேமிப்பு இடத்தை எடுத்துள்ளது என இது காண்பிக்கும்.
வாட்ஸ்அப் விளக்க வீடியோ
இதுகுறித்து வாட்ஸ்அப் விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் சேட்டிங் திரையிலேயே மேற்புறத்தில் Storage Almost Full என காண்பிக்கும்படியாக இருக்கிறது. இதை கிளிக் செய்து நேரடியாக உள்ள சென்று தேவையில்லா ஃபைல்களை தேர்ந்தெடுத்து டெலிட் செய்து கொள்ளும்படியாக இருக்கிறது.

ஸ்டோரேஜ் யூசேஜ் என்ற ஆப்ஷன்
அதேபோல் ஸ்டோரேஜ் யூசேஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து குரூப் சேட்டிங் அல்லது தனிநபர் சேட்டிங்கை தேர்வு செய்வதன் மூலம் புகைப்படம், வீடியோ, டெக்ஸ்ட் மெசேஜ், ஸ்டிக்கர், ஜிஐஎஃப் ஃபைல்கள், ஆடியோ மெசேஜ், ஆவணங்கள் என காண்பிக்கப்படும். அதன் அருகிலேயே பயன்பாட்டின் சேமிப்பு அளவும் குறிப்பிடப்பட்டிருக்கும். கீழே உள்ள ஃப்ரீ அப் ஸ்பேஸ் (Free up Space) என்ற தேர்வை கிளிக் செய்து தேவையில்லாவைகளை தேர்ந்தெடுத்து டெலிட் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் இருந்து மட்டுமே நீக்கப்படும்
இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று இந்த மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் இருந்து மட்டுமே நீக்கப்படும். தொலைபேசயில் இருந்து அல்ல என கூறப்படுகிறது. இதன்மூலம் பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும் தகவல்கள் தொலைபேசியில் இருக்கும் என்பது கவனித்தக்க ஒன்று. இந்த அம்சம் செயலி எடுத்துக் கொள்ளும் சேமிப்பிடத்தை குறைக்க உதவும்.

ஜாயின் மிஸ்டு கால்
அதேபோல் ஜாயின் மிஸ்டு கால் என்று அழைக்கப்படும் அம்சத்தை அறிமுகம் செய்வதில் வாட்ஸ் அப் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் பயனர்களை, அவர்கள் முன்பு தவறவிட்ட குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் மீண்டும் சேர அனுமதிக்கிறது. அழைப்பு முடிந்துவிட்டால் ஜாயின் மிஸ்டு கால் மூலம் இணைவதற்கான விருப்பம் காண்பிக்காது.
source: indiatoday.in


Click it and Unblock the Notifications