WhatsApp-ல் இப்போ Add பண்ணு பார்ப்போம்.. தெரியாத நபர், தெரியாத க்ரூப்.. ஆப்பு வச்சிவிட்ட மார்க் அண்ணன்!
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டாவின் (Meta) கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் ஆனது அதன் பயனர்களுக்கான ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது சேஃப்டி ஓவர்வியூ (Safety Review) என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் என்ன செய்யும்? இதனால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பிற்கான புதிய சேஃப்டி ஓவர்வியூ டூல் ஆனது, உங்களுக்கு தெரியாத ஒருவர், அடையாளம் காண முடியாத ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் உங்களை சேர்க்கும்போது இந்த அம்சம் வேலை செய்ய தொடங்கும். சேஃப்டி ஓவர்வியூ டூல் ஆனது உங்களை க்ரூப்பில் சேர்த்த நபர், அந்த க்ரூப்பில் உள்ள மொத்த மெம்பர்களின் எண்ணிக்கை, அந்த க்ரூப்பை உருவாக்கியவரின் விவரங்கள் மற்றும் அந்த க்ரூப் உருவாக்கப்பட்ட தேதி ஆகிய அனைத்து தகவல்களை காண்பிக்கும்.

அந்த தகவல்களை மதிப்பாய்வு செய்து, அந்த க்ரூப்பில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது வெளியேற விரும்புகிறீர்களா என்பதை பயனர்கள் முடிவு செய்யலாம். சேஃப்டி ஓவர்வியூ டூல் வழங்கும் தகவல்களின் வழியாக, குறிப்பிட்ட க்ரூப் உங்களுக்கு பரீட்சியமானதாக இருந்தால், மேலும் விவரங்களுக்கு அந்த க்ரூப்பின் சாட்களை பார்க்கலாம்.
ஒருவேளை நீங்கள் வெளியேற விரும்பினால், மெட்டாவின் கூற்றுப்படி படி, அந்த க்ரூப்பில் உள்ள எந்த மெசேஜ்களையுமே பார்க்காமல் க்ரூப்பில் இருந்து வெளியேற வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், நீங்கள் அந்த வாட்ஸ்அப் க்ரூப்பில் இருக்க விரும்புகிறீர்கள் என்று கூறும் ஒரு சரிபார்ப்பு குறியை டிக் செய்யும் வரை குழுவிலிருந்து வரும் நோட்டிபிகேஷன்கள் ஆனது சைலன்ட் ஆகவே இருக்கும்.
இதேபோல பெர்சனல் சாட்ளுக்கு, வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்கள் தங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சேர்க்கப்படாத ஒருவருடன் புதிய சாட்டை தொடங்கும் போதெல்லாம் அவர்களை எச்சரிக்க ஒரு புதிய வழியை சோதித்து வருகிறது. இதெல்லாமே - மோசடிகளிலிருந்து தனது பயனர் தளத்தை பாதுகாக்கும் வாட்ஸ்அப்பின் முயற்சிகள் ஆகும்
சமீபத்தில் மோசடி மையங்களுடன் இணைக்கப்பட்ட 6.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்ததாகவும் இந்நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும் மோசடி முயற்சிகளை சீர்குலைக்க வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது அதன் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் சாம் ஆல்ட்மேனின் ஓப்பன்ஏஐ ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அடிப்படையிலான ஒரு புதிய அம்சத்தையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி இருந்தது. அது மெசேஜ் சம்மரீஸ் (Message Summaries) என்று அழைக்கப்படுகிறது பெயர் குறிப்பிடுவது போலவே இது உங்களுக்கான மெசேஜ்களை சுருக்கமாக்கி காட்டும். மெட்டாவின் கூற்றுப்படி, இந்த அம்சம் பிரைவேட் ப்ராஸஸிங் (Private Processing) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
இது மெட்டா உட்பட சாட்-இல் உள்ள வேறு எவராலும் மெசேஜை படிக்காமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப்பில் பயனர்கள் சுருக்கமாக கூற வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்களை மட்டும் முன்னிலைப்படுத்த அட்வான்ஸ்டு சாட் ப்ரைவஸியையும் (Advanced Chat Privacy) பயன்படுத்தலாம் இந்த புதிய அம்சம் குறித்த பிளாக் போஸ்ட்டில், வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ் சம்மரீஸ் அம்சத்தை விவரித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி இந்த அம்சம் - பெர்சனல் மற்றும் க்ரூப் சாட்களில் கிடைக்கும். இது முற்றிலும் ஒரு விருப்பத்தேர்வாக இருக்கும் கூறப்படுகிறது. அதாவது தேவைப்பட்டால் பயன்படுத்தலாம் மற்றும் இது டீபால்ட் ஆக முடக்கப்பட்டு இருக்கும் ஒரு சாட்டில் உள்ள அன்ரீட் மெசேஜஸ் ஐகானை (Unread messages icon) கிளிக் செய்யும் போது மெட்டா ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டும் மெசேஜ் சம்மரீஸ் ஆனது புல்லடட் லிஸ்ட் வியூவில் காட்டப்படும். கன்டன்ஸ்டு மெசேஜ் விண்டோ (condensed message window) ஆனது "உங்களுக்கு மட்டுமே தெரியும்" என்கிற டெக்ஸ்ட்-ஐ கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








