அடிச்சான் பாரு Mark Zuckerberg.. Google இல் கிடைக்கும் அந்த ரகசிய வசதி இப்போது WhatsApp இல்!
மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தலைமையிலான மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (WhatsApp) சேவையில் ஒரு புதிய "சீக்ரெட் அம்சம்" அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கூகுள் க்ரோமில் (Google Chrome) ஏற்கனவே உள்ள இன்காக்னிட்டோ மோட்-ஐ (Incognito Mode) ஒத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூகுளில் கிடைக்கும் இன்காக்னிட்டோ மோட்-ஐ போலவே சஃபாரியில் (Safari) தளத்தில் பிரைவேட் ப்ரவுஸிங் (Private Browsing) என்கிற அம்சமும் உள்ளது. இந்த இரண்டுமே பயனர்கள் எதை பற்றி தேடுகிறார்கள், என்ன பார்க்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்கிற விவரங்களை சேமிக்காமல், மிகவும் ரகசியமான முறையில் 'சேர்ச்' செய்ய அனுமதிக்கின்றன.

தற்போது இதேபோன்ற ஒரு "ரகசிய வசதி" வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப்பில் பரிசோதிக்கப்படும் அம்சங்களை பற்றிய துல்லியமான விவரங்களை வழங்கும் WABetaInfo வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி - இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.25.28.1 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டுள்ளது. அதாவது இது டெஸ்டிங் ஸ்டேஜில் (Testing Stage) உள்ளது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள், மெட்டா ஏஐ சாட்பாட்டுடன் (Meta AI Chatbot) தனிப்பட்ட முறையில் உரையாட அனுமதிக்கக்கூடும். அதே நேரத்தில் ரகசியத்தன்மையை (Confidentiality) பராமரிக்க பயனர்கள் கேட்கும் கேள்விகளை பற்றிய விவரங்களையும் (History of their queries) பதிவு செய்யாது.
சோதனை கட்டத்தை தாண்டிய பின்னர் இந்த இன்காக்னிட்டோ மோட் அம்சம், எதிர்கால அப்டேட் வழியாக அனைவருக்கும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு நீங்கள் மெட்டா ஏஐ சாட்போட்டுடன் உரையாடும் போது, எதிர்கால குறிப்புக்காக அது உங்களுடைய கேள்விகள் குறித்த தரவை பதிவு செய்யலாம்.
இன்காக்னிட்டோ மோட் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அதை நீங்கள் இயக்கிய பின்னர், மெட்டா ஏஐ ஆனது பயிற்சிக்காகவோ அல்லது பயனர் அனுபவத்தை தனிப்பயனாக்கவோ, எந்த தரவுகளையும் பயன்படுத்த முடியாது என்று WABetaInfo கூறுகிறது. இது பயனர்களுக்கு அவர்களின் தரவு மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் அதே வேளையில் அவர்களுடைய ப்ரைவஸியையும் பராமரிக்கும்.
மேலும் இந்த இன்காக்னிட்டோ மோட் இயக்கப்பட்டிருக்கும் போது, ஒரு பயனர் சாட் விண்டோவில் இருந்து வெளியேறினால், அவர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டிடம் கேட்ட கேள்விகள் தானாகவே நீக்கப்படும். எனவே, பயனர்கள் தங்கள் தரவு தவறாக பயன்படுத்தப்படுவதை பற்றி கவலைப்படாமல் "சென்சிடிவ் ஆன" கேள்விகளை கூட கேட்கலாம்.
இதுகுறித்து WABetaInfo ஆல் பகிரப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட்டின் படி, ஒரு பயனர் வாட்ஸ்அப்பில் இன்காக்னிட்டோ மோட்-ஐ இயக்கும்போது, மெட்டா ஏஐ சாட்பாட்டுடன் எதிர்கால உரையாடல்களுக்கு பெர்சனலைசேஷன் இல்லை, ஹிஸ்டரி இல்லை, ஸ்டோரேஜ் இல்லை என்கிற 3 உடனடி எச்சரிக்கையை வாட்ஸ்அப் வழங்குகிறது. அதனை தொடர்ந்து இன்காக்னிட்டோ மோட்-ஐ பயன்படுத்தலாம்.
நினைவூட்டும் வண்ணம் இதே WABetaInfo வழியாக இன்னொரு புதிய அம்சம் குறித்த விவரங்களும் வெளியாகி இருந்தது. அது வாட்ஸ்அப் க்ரூப்களுக்கான புதிய ம்யூட் @எவ்ரிஒன் (Mute @Everyone) என்கிற ஆப்ஷன்ஆகும் . இதுவும் கூட தற்போது டெஸ்டிங் ஸ்டேஜில் தான் உள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது @எவ்ரிஒன் என்கிற மென்ஷன்களை (@Everyone Mentions) ம்யூட் செய்யும்.
இதுகுறித்து WABetaInfo ஷேர் செய்துள்ள ஸ்க்ரீன்ஷாட்டில், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் உள்ள நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் (Notification Settings) ம்யூட் டாகிலுக்கு கீழே ஒரு புதிய மியூட் @எவ்ரிஒன் விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது, இருப்பினும், இது டீபால்ட் ஆகவே முடக்கப்பட்டுள்ளது; அதாவது விருப்பம் உள்ளவர்கள் இதை கைமுறையாக 'ஆன்; செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








