வாட்ஸ்அப்-ல் இனி இந்த சிக்கலும் இல்லை- வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டை இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கலாம்!
வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது இனி இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாய்ஸ் நோட்களை பதிவு செய்யும் போது அந்த ஆடியோவை இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது. இந்த அம்சமானது குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறுது.

வாட்ஸ்அப் பயனர் அனுபவம்
வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. மெசேஜ் ரெக்கார்டிங் செய்யும் போது பயனர்கள் ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் வகையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேம்படுத்தும் வகையில் பல அம்சங்கள்
வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. அதேபோல் வாய்ஸ் மெசேஜ்களை பதிவு செய்யும் போது ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வெளியிட இருக்கிறது. தற்போது குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வெளியிடப்பட்டிருக்கிறது. பயனர்கள் தங்கள் குரல் குறிப்பை பதிவு செய்யும் நேரத்தில் அவற்றை இடைநிறுத்தம் செய்யலாம் அதேபோல் அதை மீண்டும் தொடங்கவும் செய்யலாம். வாட்ஸ்அப் வாய்ஸ் குறிப்புகளை கேட்கும் போது அதை இடைநிறுத்தம் செய்து அதை மீண்டும் இயக்கம் செய்யவும் முடியும்.

புதிய இடைநிறுத்த பட்டன்
வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்காணிக்கும் வலைதளமான Wabetainfo அறிக்கையின் படி, வாட்ஸ்அப் தற்போது புதிய இடைநிறுத்த பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் பதிவை நிறுத்தி பின் அதை மீண்டும் தொடங்க அனுமதிக்கும். முன்னதாக வாட்ஸ்அப் பயனர்கள் குரல் குறிப்புகளை கேட்கும் போது இடைநிறுத்தப்பட்டு அதை இயக்க மட்டுமே அனுமதிக்கும் விருப்பும் காட்டப்படும். வாட்ஸ்அப் மெசேஜ்க்கு வெளியே குரல் நோட்டை இயக்கும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியது. முன்பாக பயனர்கள் சேட்டிங்குள் சென்று குரல் நோட்டை கேட்க வேண்டியிருந்தது. புதிய அம்சம் தற்போது பயனர்கள் குரல் நோட்களை கேட்கும் போது பிற அரட்டைகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது.

புதிய இடைநிறுத்தம் மற்றும் மறுதொடக்கம்
இந்த அம்சமானது ஏற்கனவே குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக Wabetainfo அறிக்கை கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு 2.22.6.7 புதுப்பிப்புக்கான புதிய WhatsApp Business பீட்டாவை நிறுவிய பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குரல் நோட்ஸ்களை பதிவு செய்யும் போது புதிய இடைநிறுத்தம் மற்றும் மறுதொடக்கம் அம்சத்தை நீங்கள் காணவில்லை என்றால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தயாராக இல்லை என்று அர்த்தம். தொடர்ந்து நீங்கள் புதுப்பிப்பு பெற வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

மெசேஜ் ரியாக்ஷன் அம்சம்
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற தளங்கள், மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வகையிலான மெசேஜ் ரியாக்ஷன் அம்சத்தில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பயனர் பெறும் ஒரு மெசேஜ்-க்கு எழுத்து மூலமாகவோ அல்லது இமோஜி மூலமாகவோ எதிர்வினையாற்ற முடியும். ஆனால் வரவிருக்கும் அம்சத்தின் மூலம் பயனர்கள் அனிமேஷன் மூலமான ரியாக்ஷன் மூலமாக பதிலளிக்கலாம். பொதுவாக ஒரு அம்சம் வெளியிடுவதற்கு முன்னதாக அதை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வாட்ஸ்அப் வெப், வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பின் பீட்டா பயனர்களுக்கு வெளியிட்டு சோதிக்கப்படும். அதன்படி புதிய அனிமேஷன் ரியாக்ஷன் WABetaInfo அறிக்கையில் காணப்பட்டது. அதில் ஒரு மெசேஜ்-க்கு எதிர்வினையாற்றும் போது புதிய அனிமேஷன் முறையில் பதலளிக்கும் வகையில் காணப்பட்டது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அனிமேஷன் தேர்வு
வாட்ஸ்அப் பயன்பாட்டில், புதிய அனிமேஷன் தேர்வானது இமோஜி தேர்வு செய்யும் பகுதிக்கு அடிப்பகுதியில் இடம்பெறும் என அறிக்கைத் தகவல் காட்டுகிறது. இமோஜி விரும்பிகளின் கவனத்தை இந்த அம்சம் மேலும் ஈர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அறிக்கையில் காணப்படும் தகவலின்படி இந்த அம்சம் தற்போது வரை எந்த பயனருக்கும் அல்லது சோதனையாளருக்கும் கிடைக்கவில்லை என அறிக்கை கூறுகிறது.

ஆறு இமோஜிகள் கொண்ட பேனல்
கடந்த வாரம் WABetaInfo-ல் ஒரு இமோஜி ஐகான் காட்டப்பட்டது. இதை கிளிக் செய்யும் போது ஆறு இமோஜிகள் கொண்ட பேனல் காட்டப்பட்டது. அதில் கட்டைவிரல், சிவப்பு இதயம், அழுகிற முகம், கூப்பிய கைகள், அதிர்ச்சியடைந்த முகம் மற்றும் கண்ணீருடன் கூடிய முகம் ஆகியவை ஆகும். இந்த அம்சத்தில் குறிப்பிட்ட ஆறு இமோஜிகள் மட்டுமே இடம்பெறுமா அல்லது கூடுதல் இமோஜிகள் வருமா என்பது குறித்த தகவல் தற்போதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications