நீங்க சொல்லுவிங்க., நாங்க செய்வோம்- மெசேஜ் அனுப்பிய பிறகும் எடிட் செய்யலாம்: வாட்ஸ்அப் எடிட் பட்டன் சோதனை!

|

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

பிரத்யேக எடிட் பட்டன்

பிரத்யேக எடிட் பட்டன்

வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் விரைவாக எடிட் ஆப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம் தேவை

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம் தேவை

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம் தேவை என்பது குறித்த விவாதம் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் எடிட் பட்டன் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப்பில் ஒருமுறை மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை திருத்தம் செய்வதற்கான எடிட் ஆப்ஷன் தற்போது வரை இல்லை. தவறாக மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை டெலிட் செய்யலாம் ஆனால் திருத்தம் செய்ய முடியாது. இந்த சிக்கலை சரி செய்ய வாட்ஸ்அப் எடிட் பட்டன் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

எடிட் அம்சத்தின் ஸ்க்ரீன்ஷாட்

எடிட் அம்சத்தின் ஸ்க்ரீன்ஷாட்

வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் கண்காணிக்கும் தளமான Wabetainfo இந்த அம்சத்தையும் கண்டறிந்து தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த அம்சத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. Wabetainfo வாட்ஸ்அப் உருவாக்கியுள்ள எடிட் அம்சத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்திருக்கிறது. இந்த ஸ்க்ரீன்ஷாட்டில் பிரத்யேக திருத்த பட்டன் காட்டப்படுகிறது. மெசேஜ்களை நகலெடுத்து (Copy) செய்யும் அம்சத்தின் கீழ் இந்த திருத்த விருப்பம் காட்டப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெசேஜில் இருக்கும் எழுத்துப் பிழை மற்றும் சொற்கள் பிழையை திருத்தம் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை மெசேஜ்களில் பிழை ஏற்படும் பட்சத்தில் அதை டெலிட் செய்வது மட்டுமே ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்டா பதிப்பில் சோதனை

பீட்டா பதிப்பில் சோதனை

அதேபோல் இந்த எடிட் அம்சம் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், திருத்தப்பட்ட செய்திகளின் முந்தைய பதிப்பை காட்டுபவதற்கான திருத்த வரலாறு (Correction History) இதில் இருக்காது என கூறப்படுகிறது. இந்த அம்சம் தற்போது சோதனையில் மட்டுமே இருக்கும் காரணத்தால் அறிமுகம் செய்யும்போது இதில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பிய உடன் அதை எத்தனை மணிநேரத்துக்குள் திருத்த வேண்டும் என்ற நேர கட்டுப்பாடு தகவல் தற்போது வரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்த கூடுதல் தகவல் தொடர்ந்து தெரிவிக்கப்படும் என Wabetainfo அறிக்கை தெரிவிக்கிறது. வாட்ஸ்அப் தற்போது குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இந்த அம்சத்தை சோதித்து வருகிறது. விரைவில் அதிகளவிலான பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய புது அப்டேட்

சமீபத்திய புது அப்டேட்

வாட்ஸ்அப் சமீபத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் யாருக்கும் தெரிவிக்காமல் குரூப்-ல் இருந்து சத்தமில்லாமல் வெளியேறலாம். வாட்ஸ்அப் குரூப்-ல் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த குரூப் அட்மினுக்கு மட்டுமே அதற்கான நோட்டிபிகேஷன் செல்லும். ஒருவர் குரூப்-ல் இருந்து வெளியேறி இருப்பது குரூப்-ல் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் மூலம் பயனர்கள் தேவையற்ற குரூப்களில் இருந்து வெளியேறுவது எளிதாக்கப்படும். முன்பு ஒரு குரூப்-ல் இருந்து உறுப்பினர் வெளியேறும்போது, வாட்ஸ்அப் தானாக உருவாக்கிய அறிவிப்பை காட்டுகிறது. பின்பு இந்த தகவல் குரூப்-ல் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தும்.

Best Mobiles in India

English summary
Whatsapp New Feature: Whatsapp Testing Edit Button Option on Beta Version

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X