Home
News

வாட்ஸ்அப் பயனர்களே தயாரா?- இனி எல்லாம் அனிமேஷன் மெசேஜ் தான்: விரைவில் வரும் அனிமேஷன் ரியாக்ஷன் அம்சம்!

கடந்த சில நாட்களாக பெரும் பேசு பொருளாக இருக்கும் வாட்ஸ்அப் அம்சங்களில் ஒன்று வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்கள் அம்சம் ஆகும். நிறுவனம் கடந்த சில மாதங்களாக இதன் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர்

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற தளங்கள், மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வகையிலான மெசேஜ் ரியாக்ஷன் அம்சத்தில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பயனர் பெறும் ஒரு மெசேஜ்-க்கு எழுத்து மூலமாகவோ அல்லது இமோஜி மூலமாகவோ எதிர்வினையாற்ற முடியும். ஆனால் வரவிருக்கும் அம்சத்தின் மூலம் பயனர்கள் அனிமேஷன் மூலமான ரியாக்ஷன் மூலமாக பதிலளிக்கலாம். பொதுவாக ஒரு அம்சம் வெளியிடுவதற்கு முன்னதாக அதை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வாட்ஸ்அப் வெப், வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பின் பீட்டா பயனர்களுக்கு வெளியிட்டு சோதிக்கப்படும். அதன்படி புதிய அனிமேஷன் ரியாக்ஷன் WABetaInfo அறிக்கையில் காணப்பட்டது. அதில் ஒரு மெசேஜ்-க்கு எதிர்வினையாற்றும் போது புதிய அனிமேஷன் முறையில் பதலளிக்கும் வகையில் காணப்பட்டது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அனிமேஷன் தேர்வு

புதிய அனிமேஷன் தேர்வு

வாட்ஸ்அப் பயன்பாட்டில், புதிய அனிமேஷன் தேர்வானது இமோஜி தேர்வு செய்யும் பகுதிக்கு அடிப்பகுதியில் இடம்பெறும் என அறிக்கைத் தகவல் காட்டுகிறது. இமோஜி விரும்பிகளின் கவனத்தை இந்த அம்சம் மேலும் ஈர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அறிக்கையில் காணப்படும் தகவலின்படி இந்த அம்சம் தற்போது வரை எந்த பயனருக்கும் அல்லது சோதனையாளருக்கும் கிடைக்கவில்லை என அறிக்கை கூறுகிறது.

ஆறு இமோஜிகள் கொண்ட பேனல்

ஆறு இமோஜிகள் கொண்ட பேனல்

கடந்த வாரம் WABetaInfo-ல் ஒரு இமோஜி ஐகான் காட்டப்பட்டது. இதை கிளிக் செய்யும் போது ஆறு இமோஜிகள் கொண்ட பேனல் காட்டப்பட்டது. அதில் கட்டைவிரல், சிவப்பு இதயம், அழுகிற முகம், கூப்பிய கைகள், அதிர்ச்சியடைந்த முகம் மற்றும் கண்ணீருடன் கூடிய முகம் ஆகியவை ஆகும். இந்த அம்சத்தில் குறிப்பிட்ட ஆறு இமோஜிகள் மட்டுமே இடம்பெறுமா அல்லது கூடுதல் இமோஜிகள் வருமா என்பது குறித்த தகவல் தற்போதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு அம்சம்

புதுப்பிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு அம்சம்

சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் அல்லது வெப் பயன்பாடும் புதுப்பிக்கப்பட்டு புதிய பாதுகாப்பு அம்சங்களின் ஆதரவைப் பெறப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப் போகும் அந்த அம்சங்களின் விவரங்கள் மற்றும் செயல்பாடு குறித்த தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம். WhatsApp குழு நிர்வாகிகள் மற்ற பயனர்களின் செய்திகளை அனைத்து பயனர்களுக்கும் நீக்க முடியும். தற்போது, ​​அது நிர்வாகியாக இருந்தாலும் அல்லது பயன்பாட்டில் உள்ள சாதாரண பயனராக இருந்தாலும், அவர்/அவள் எல்லாப் பயனர்களுக்கும் தனது சொந்த செய்தியை மட்டுமே நீக்க முடியும். ஆனால் இப்போது, ​​வாட்ஸ்அப் நிர்வாகிகள் அனைத்து பயனர்களுக்கும் எந்த பயனரும் எந்த செய்தியையும் நீக்க முடியும் அனுமதியை வழங்குகிறது. இது ஒரு குழுவிற்குள் செல்லும் உள்ளடக்கத்தின் சிறந்த மதிப்பீட்டைக் கொண்டுவரும்.

மிக தேவையான அம்சம்

மிக தேவையான அம்சம்

அடுத்தபடியாக வாட்ஸ்அப் இல் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் அடுத்த அம்சம் இது தான். WhatsApp இன் வெப் அல்லது டெஸ்க்டாப் பயன்பாட்டில் 2-படி சரிபார்ப்புக்கான ஆதரவைப் பெறுகிறது. அதாவது 2 ஸ்டேப் வெரிஃபிகேஷன் அம்சத்தைப் பயனர்கள் பெறப்போகிறார்கள். இது உங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் அனுபவத்தை மிகவும் பாதுகாப்பானதாக்கும் மற்றும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் கணினி மூலம் யாரும் உள்நுழைய முடியாது என்ற மன அமைதியை உங்களுக்கு வழங்கும். அடுத்தபடியாக வாட்ஸ்அப் இல் கிடைக்கவிருக்கும் மூன்றாம் அம்சம் இது தான், இதில் வாட்ஸ்அப் பயனர்கள் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்வது போன்ற குறிப்பிட்ட செய்திகளுக்கு விரைவில் ரியாக்ஷன்களை அனுப்ப முடியும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மிகவும் புரிந்துகொள்ளக் கூடியதாக மாற்ற இது மிகவும் தேவையான அம்சமாகும்.

Best Mobiles in India

English summary
Whatsapp New Feature Testing on Android: Animations For Message Reactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X