Home
News

அடுத்தகட்ட அம்சம்னா இப்படி இருக்கனும்.. WhatsApp-க்கு வந்த புது வசதி.. Status விரும்பிகள் ஹேப்பி அண்ணாச்சி!

அடுத்தகட்ட அம்சம் என்றால்.. இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கூறும்படியாக, வாட்ஸ்அப்பில் ஒரு புதிய வசதி (New WhatsApp Feature) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் வழியாக ஷேர் செய்யப்படும் ஸ்டேட்டஸ்களுக்கு (Status) கூடுதல் திறனளிக்கும் இந்த புதிய அம்சத்தின் பெயர் என்ன? பயன் என்ன? இதோ விவரங்கள்:

பயனர்களின் அனுபவத்தை (User Experience) மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் நிறுவனமானது அதன் பிஸ்னஸ் வெர்ஷனில் (Business version) 'ஸ்டேட்டஸ் ஆர்க்கைவ்' (Status Archive) என்கிற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அம்சமானது 24 மணிநேரத்திற்கு பிறகும் கூட ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட்டை ரீபப்ளிஷ் (Republish) செய்ய அனுமதிக்கும்.

அடுத்தகட்ட அம்சம்னா இப்படி இருக்கனும்.. WhatsApp-க்கு வந்த புது வசதி!

அதாவது, வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை (WhatsApp Business Account) வைத்திருக்கும் பயனர்கள், ஆர்க்கைவ் லைப்ரரி (Archive Library) வழியாக ஏற்கனவே ஷேர் செய்த ஒரு ஸ்டேட்டஸை மீண்டும் ஷேர் செய்ய முடியும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்டஸை மீண்டும் உருவாக்கி, அதை மறுபடியும் ஷேர் செய்யும் நேரம் மிச்சமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வாட்ஸ்அப் பிஸ்னஸிற்கான இந்த புதிய அம்சம், தற்போது வரையிலாக ஆண்ட்ராய்டில் உள்ள சில பீட்டா டெஸ்டர்களுக்கு (WhatsApp Android Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது; வாட்ஸ்அப் பிசினஸ் 2.23.11.18 பீட்டா வெர்ஷனில் அணுக கிடைக்கும் இந்த அம்சம், வரும் வாரங்களில் மேலும் பல டெஸ்டர்களுக்கு விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த ஸ்டேட்டஸ் ஆர்க்கைவ் அம்சமானது, பிஸ்னஸ் வெர்ஷனுக்கு வெளியே, அதாவது வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு (WhatsApp Android) மற்றும் ஐஓஎஸ் (WhatsApp iOS) வெர்ஷன்களுக்கு வருமா என்பது குறித்த எந்தத் தகவலும் இன்னும் வெளிவராததால், இது பிஸ்னஸ் வெர்ஷனுக்கான ஒரு பிரத்தியேக அம்சமாக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வீடியோ கால்ளுக்கான ஸ்க்ரீன் ஷேரிங் (WhatsApp Video Call Screen Sharing) விருப்பமும் சோதிக்கப்பட்டு வருகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இந்த அம்சம், நீங்கள் ஒரு வாட்ஸ்அப் காலில் (WhatsApp Call) இருந்தபடியே உங்களுடைய ஸ்க்ரீனை (மற்றவருடன்) ஷேர் செய்ய அனுமதிக்கும்.

வாட்ஸ்அப் பிஸ்னஸிற்கான ஸ்டேட்டஸ் ஆர்க்கைவ் அம்சத்தை போலவே இதுவும் சில பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது. தற்போது வரை ஆண்ட்ராய்டு 2.23.11.19 பீட்டா பில்ட்டில் மட்டுமே கிடைக்கும் இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சமானது வரும் நாட்களில் அதிகமான பயனர்களுக்கு வந்து சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் கால்களுக்கான ஸ்க்ரீன் ஷேரிங் அம்சமானது பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் (Old Android Versions) மூலம் இயங்கும் "பழைய" ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பழைய போன்களை பயன்படுத்துபவர்களால் நீங்கள் ஷேர் செய்யும் ஸ்க்ரீனை பார்க்க முடியாமல் கூட போகலாம்.

மேலும் இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சமானது 2 நபர்களுக்கு மத்தியில் நடக்கும் வாட்ஸ்அப் காலில் மட்டுமே வேலை செய்யும், இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்ளும் வாட்ஸ்அப் க்ரூப் கால்களில் (WhatsApp Group Call) வேலை செய்யாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp New Feature Status Archive Which Helps Business Account Users to Republish Their Status
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X