பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!

|

பூமர் அங்கிள் (Boomer Uncle) என்றதும் "பொத்தாம் பொதுவாக" எங்களின் மீது கோபம் கொள்ள வேண்டாம். எங்களின் அறிவுக்கு எட்டிய வரை "யார் பூமர் அங்கிள்?" என்பதை பற்றி முதலில் பேசிவிடுவோம்.

யாரெல்லாம் பூமர் அங்கிள்?

யாரெல்லாம் பூமர் அங்கிள்?

நின்றால் அட்வைஸ்.. நடந்தால் அட்வைஸ்.. ஆளே இல்லை என்றாலும் தேடிக்கண்டுபிடித்து கூட அட்வைஸ் செய்யும் நபர்களும், இன்னமும் ரோஜாப்பூ போட்டோவோடு சேர்ந்த குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்களை அனுப்பும் நபர்களும், "காலம் போன காலத்தில்... ஃபேமிலி வாட்ஸ்அப் க்ரூப் என்றுகூட பாராமல் பெண்களிடம் 'ஜொள்ளு' விடும் நபர்களும் தான் - பூமர் அங்கிள்கள்!

போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

கிளியர் ஆகி விட்டீர்களா? இப்போது மேட்டருக்குள்ள போவோமா?

கிளியர் ஆகி விட்டீர்களா? இப்போது மேட்டருக்குள்ள போவோமா?

"வாட்ஸ்அப் க்ரூப்களில் ஜொள்ளு" என்றதுமே உங்களுக்கு பலரின் முகங்கள் நினைவில் வந்து குதித்து இருக்கலாம்.

இப்படி ஜொள்ளு பார்ட்டிகள் மட்டுமல்ல வாட்ஸ்அப் க்ரூப்பில் நாம் பலவகையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது மற்றும் சில பல காரணங்களுக்கு குறிப்பிட்ட க்ரூப்களில் இருந்து நம்மால் வெளியேறவும் முடியாது.

இந்த

இந்த "தலைவலி"க்கான மருந்தை கொண்டு வரும் WhatsApp!

வாட்ஸ்அப், கடந்த பல வாரங்களுக்காகவே 'யூசர் இன்டர்பேஸில்' எக்கச்சக்கமான மேம்படுத்தல்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒரு அதிரடியான அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால், அட்மின்களுக்கான டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன் (Delete messages for everyone) என்கிற அம்சம் ஆகும். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் ஏன் நாங்கள் பூமர் அங்கிள்களை பற்றி பேசினோம் என்று!

Google-ல் அசத்தல் அம்சம்; இனி Google-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

அந்த

அந்த "புது கிடுக்கிப்பிடி" இதுதான்!

இதுநாள் வரையிலாக 'டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன்' என்கிற அம்சம் தனிப்பட்ட நபர்களுக்கான ஒரு அம்சமாகவே வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கிறது.

ஆனால் இனிமேல் அது க்ரூப் அட்மின்களுக்கும் அணுக கிடைக்கும். அதாவது இனிமேல் வாட்ஸ்அப் க்ரூபில் 'கிரிஞ்ச்' தனமான மெசேஜ்களை அனுப்பினால், அது மற்றவர்களை எரிச்சல் அடைய வைக்கும் என்று அட்மின்கள் நினைத்தால், அதை அவர்களால் ஒட்டுமொத்தமாக டெலிட் செய்ய முடியும்.

பீட்டா டெஸ்டிங்கில் உள்ளதாம்!

பீட்டா டெஸ்டிங்கில் உள்ளதாம்!

வாட்ஸ்அப்பில் வரவுள்ள அல்லது சோதனை செய்யப்படும் அம்சங்களை பற்றி புட்டுப்புட்டு வைப்பதில் பலே கில்லாடியான WABetInfo-வின் கூற்றுப்படி, இந்த அம்சம் தற்போது சில பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைக்கிறது.

ஆக இது கூடிய விரைவில் அனைத்து வகையான வாட்ஸ்அப் அட்மின்களுக்கும் வந்து சேரும் என்று நம்புவதில் எந்த தவறும் இல்லை.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

இந்த அம்சம் உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

இந்த அம்சம் உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் இந்த அம்சம் உள்ளதா என்பதை கண்டறிய, முதலில் நீங்கள் ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பிற்கு அட்மின் ஆக இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்களொரு க்ரூப் அட்மின் என்றால், குறிப்பிட்ட க்ரூப்பிற்கு சென்று அதில் உள்ள ஏதேனும் ஒரு மெசேஜை டெலிட் செய்ய முயற்சிக்கவும், அப்போது நீங்கள் "Delete for everyone" என்கிற அம்சத்தை பார்த்தால் உங்கள் அக்கவுண்டில் குறிப்பிட்ட அம்சம் உள்ளது என்று அர்த்தம்.

இந்த அம்சம் Admin Delete என்று அழைக்கப்படலாம்!

இந்த அம்சம் Admin Delete என்று அழைக்கப்படலாம்!

க்ரூப்பில் உள்ள ஒரு மெசேஜை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்ய, அட்மின்களுக்கு உதவும் இந்த அம்சம், சமீபத்தில் அல்ல, கடந்த ஆண்டே டெஸ்ட் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. அந்த நேரத்தில் இது அட்மின் டெலிட் என்று அழைக்கப்பட்டது.

பெயரா முக்கியம்? அம்சத்தின் திறன் தான் முக்கியம். அப்படியாக இந்த அம்சம், க்ரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ்அப் க்ரூப்களை சிறந்த முறையில் நிர்வகிக்க அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

வாட்ஸ்அப்பில் Kept messages அம்சமும் வரவுள்ளது!

வாட்ஸ்அப்பில் Kept messages அம்சமும் வரவுள்ளது!

இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப், கெப்ட் மெசேஜஸ் (Kept messages) என்கிற அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது.

இந்த அம்சம், வாட்ஸ்அப் பீட்டாவின் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன்களுக்கான எதிர்கால அப்டேட்டில் அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெப்ட் மெசேஜஸ் அம்சத்தின் வேலை என்ன என்று கூறினால் கடுப்பாகி விடுவீர்கள்!

கெப்ட் மெசேஜஸ் அம்சத்தின் வேலை என்ன என்று கூறினால் கடுப்பாகி விடுவீர்கள்!

'கெப்ட் மெசேஜஸ்' என்பது டிஸ்அப்பியரிங் மெசேஜின் (Disappearing message) "தற்காலிகமான" ஸ்டாண்டர்ட் வாட்ஸ்அப் மெசேஜ் ஆகும்.

அதாவது ஒரு மெசேஜ் ஆனது சிறுது நேரம் கழித்து காணாமல் போக வேண்டும் என்று நினைத்து அதை டிஸ்அப்பியரிங் மெசேஜ் ஆக அனுப்புவீர்கள் அல்லவா?

அந்த மெசேஜின் "காலாவதி காலம்" முடிந்த பின்னர், அது "தற்காலிகமான"ஒரு ஸ்டாண்டர்ட் வாட்ஸ்அப் மெசேஜ் ஆக காட்சிப்படுத்தப்படும்; அதற்கு கெப்ட் மெசேஜஸ் அம்சம் துணையாக இருக்கும். இந்த அம்சம் சாட் இன்ஃபோ பிரிவின் கீழ் ஒரு புதிய செக்ஷனாக அணுக கிடைக்கும்.

போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!

வாட்ஸ்அப்பிற்கு சாட்போட் ஒன்றும் வரப்போகிறது!

வாட்ஸ்அப்பிற்கு சாட்போட் ஒன்றும் வரப்போகிறது!

மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து, வாட்ஸ்அப்பில் ஒரு புதிய சாட்போட் (Chatbot) வரப்போவதாகவும், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆப்பை அப்டேட் செய்யும் போது, குறிப்பிட்ட அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பற்றி அது உங்களுக்கு தெரிவிக்குமாம்.

புதிய அம்சங்களை மட்டுமின்றி டிப்ஸ் மற்றும் சில வாட்ஸ்அப் ட்ரிக்ஸ், ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி தொடர்பான தகவல்களையும் உங்களுக்கு வழங்குமாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp New Feature Allow Group Admins to Delete Any Message For Everyone How it Works

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X