WhatsApp-இன் அடுத்த அதிரடி: 2 வெவ்வேறு ஸ்மார்ட்போன்களில் ஒரே அக்கவுண்ட்!

|

சமீபத்தில் வெளியான மிகவும் முக்கியமான வாட்ஸ்அப் (WhatsApp) அம்சம் என்ன? - என்று நாங்கள் கேட்க, அதற்கு நீங்கள் - மல்டி டிவைஸ் சப்போர்ட் என்று பதில் சொன்னால்.. அது உண்மைதான், ஆனாலும் ஒரு சின்ன சிக்கல் உள்ளது!

அதென்ன சிக்கல்?

அதென்ன சிக்கல்?

அதாவது இங்கே Multi Device Support என்கிற வார்த்தைக்கு பின்னால் ஒரு டெஸ்க்டாப்போ அல்லது ஒரு டேப்லெட்டோ தான் இருக்குமே தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்காது!

அதாவது மல்டி டிவைஸ் சப்போர்ட்டே இருந்தாலும் கூட உங்களால் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ 2 ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்க / பயன்படுத்த முடியாது.

நிலைமை இப்படி இருக்கும் போது, மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் எப்படி மிகசிறந்த வாட்ஸ்அப் அப்டேட்களில் ஒன்றாக இருக்க முடியும்?

இதற்கு என்ன தான் தீர்வு?

இதற்கு என்ன தான் தீர்வு?

இதற்கு 'சாட் சிங்க்' (Chat Sync) தான் ஒரே தீர்வு. வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே இந்த அம்சத்தை சோதிக்க தொடங்கி விட்டதால் "ஒரே அக்கவுண்ட்டை இரண்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாத" சிக்கல் விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதாவது நீங்கள் இரண்டு வெவ்வேறு மொபைல்களில் ஒரே வாட்ஸ்அப் நம்பரை பயன்படுத்தலாம் மற்றும் உங்களின் எல்லா மெசேஜ்களும் தானாகவே Sync செய்யப்படும்.

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!

கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!

ஏனெனில், வாட்ஸ்அப் நிறுவனம் டெஸ்ட் செய்யும் அம்சங்களை பற்றி 'அக்குவேறு ஆணிவேறாக' பிரித்து காட்டுவதில் கில்லாடியான WABetainfo வலைதளம் வழியாக நமக்கு கிடைத்த தகவலின்படி, 'வாட்ஸ்அப் சாட் சிங்க்' அம்சமானது ஆண்ட்ராய்டு பீட்டாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டாவின் 2.22.15.13 ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை கட்டத்தில் உள்ளதாம்.

இது எப்போது அனைவருக்கும் வரும்?

இது எப்போது அனைவருக்கும் வரும்?

உங்களை போலவே, இது எப்போது அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்று நாங்களும் ஆர்வமாகத்தான் உள்ளோம். ஆனால் இது எப்போது வாட்ஸ்அப்பின் "பொது தளத்திற்கு" வரும் என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை.

ஆனாலும் இந்த அம்சம் கொஞ்சம் 'ஸ்லோ'வாக இருக்கும் என்கிற தகவலை நாங்கள் அறிவோம்.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

ஸ்லோவாக இருக்கும் என்றால்.. எதில் ஸ்லோ?

ஸ்லோவாக இருக்கும் என்றால்.. எதில் ஸ்லோ?

'சாட் சிங்க்' அம்சம் வேலை செய்யும் செயல்முறையே 'ஸ்லோ'வாக தான் இருக்குமாம். ப்ரைமரி ஸ்மார்ட்போனில் (அதாவது எந்த ஸ்மார்ட்போனில் இருந்து சாட்-ஐ சிங்க் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த ஸ்மார்ட்போனில்) இருக்கும் சாட்களின் சைஸ்-ஐ பொறுத்து தான் டிரான்ஸ்பர் ஆகும் வேகமும் இருக்குமாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட 'சாட் சிங்க்' ஆனது வயர்லெஸ் மூலம் நிகழ்வதால், "நிறைய" சாட்களை டிரான்ஸ்பர் செய்யும் பட்சத்தில், அது டிரான்ஸ்பர் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதுவும் சரி செய்யப்படும்!

அதுவும் சரி செய்யப்படும்!

ஒரே வாட்ஸ்அப் நம்பரை பல போன்களில் "இயக்குவதற்கும்", டிவைஸ்களுக்கு இடையே அனைத்து சாட்களையும் சிங்க் செய்வதற்கான வழியை கண்டுபிடித்த வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு, சாட்கள் வேகமாக டிரான்ஸ்பர் செய்யும் வழியை கண்டுபிடிக்க தெரியாதா என்ன? அதெல்லாம் சிறப்பா செஞ்சிடும்!

வாட்ஸ்அப்பில் வேறு என்னென்ன அப்டேட்?

வாட்ஸ்அப்பில் வேறு என்னென்ன அப்டேட்?

'சாட் சிங்க்' அம்சத்தை தவிர்த்து, வாட்ஸ்அப் இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் உள்ள பல யூசர்களையும் தங்கள் சாட்-களை ஐஓஎஸ் டிவைஸிற்கு 'டிரான்ஸ்பர்' செய்ய அனுமதிக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், குறிப்பிட்ட அம்சம் சில வாரங்களுக்கு முன்னர் தான் அறிமுகமானது. தற்போது மெல்ல மெல்ல அனைவருக்கும் அணுக கிடைக்கிறது.

ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

முதலில் ஐஓஎஸ் டூ ஆண்ட்ராய்டு; இப்போது ஆண்ட்ராய்டு டூ ஐஓஎஸ்!

முதலில் ஐஓஎஸ் டூ ஆண்ட்ராய்டு; இப்போது ஆண்ட்ராய்டு டூ ஐஓஎஸ்!

முன்னதாக ஐஓஎஸ் வெர்ஷனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு வாட்ஸ்அப் சாட்களை டிரான்ஸ்பர் செய்யும் ஆதரவு, கூகுள் மற்றும் வாட்ஸ்அப் யூசர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆப்பிள் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனம், ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு வாட்ஸ்அப் சாட்களை டிரான்ஸ்பர் செய்யும் ஆதரவை அறிவித்தன.

இப்படியாக மெட்டாவுக்கு சொந்தமான இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்மிற்கு இந்த 2022 ஆம் ஆண்டு மிகவும் பிஸியான ஒரு காலகட்டமாக இருந்து வருகிறது.

நாளுக்கு நாள் யூசர்களின் எண்ணிக்கையும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே போவதால், வாட்ஸ்அப் நிறுவனம் அடுக்கடுக்கான அம்சங்களை வெளியிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

Best Mobiles in India

English summary
WhatsApp New Feature Allow Android Users to Sync Chats Between Two Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X