Home
News

ஸ்மார்ட் மூவ்.. WhatsApp-ல் போட்டோஸ் வீடியோஸ் ஷேர் செய்யுறீங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்..

ஆஹா..ஆஹா ஒளி வந்துவிட்டது. இத்தனை நாட்களாக கிடைக்காத என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த அம்சம் ஒருவழியாக இப்போது வாட்ஸ்அப் (WhatsApp) இல் கிடைக்கப்போகிறது. ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நியர்பை ஷேர் (Nearby Share) போன்ற அம்சம் இனி வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.

வாட்ஸ்அப் சமீபத்தில் 2 ஜிபி அளவு வரை, கம்ப்ரெஸ் செய்யப்படாத HD புகைப்படங்களை மற்றும் பைல்களை அப்படியே எந்தவித குவாலிட்டி குறைபாடும் இல்லாமல் ஷேர் செய்ய அனுமதிக்கும் அம்சத்தை வெளியிட்டதன் மூலம் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது. இப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் ஒரு முறை பயனர் எதிர்பார்ப்பது பூர்த்தி செய்யவுள்ளது.

ஸ்மார்ட் மூவ்.. WhatsApp-ல் போட்டோஸ் வீடியோஸ் ஷேர் செய்யுறீங்களா?

​​வாட்ஸ்அப் இன்னும் அதன் தளத்தில், பைல் ஷேரிங் பகிர்வை எளிதாக்குவதற்கு பல வழிகளை ஆராய்ந்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் இப்போது மற்றொரு புதிய அம்சத்தை மிகவும் தீவிரமாக உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் நியர்பை ஷேர் போன்று செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், இந்த புதிய அம்சம் இப்போது வளர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நியர்பை ஷேர் அம்சம், அருகிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுடன் வேகமாக பைல்களைப் பகிர அனுமதிக்கும். இந்த அம்சமானது, ஆண்ட்ராய்டின் "நியர்பை ஷேர்" போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் உங்களுக்கிய புரியும் படி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஷேர்இட் ஆப்ஸ் போல இனி சிங்கிள் கிளிக்கில் நீங்கள் விரும்பிய பைல்களை வேகமாக ஷேர் செய்துகொள்ளலாம்.

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் அப்டேட் ஆண்ட்ராய்டு 2.24.2.17 இல் உள்ள வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய பைல் நியர்பை ஷேரிங் அம்சத்தை இப்போது பயனர்கள் வாட்ஸ்அப் பீட்டா அணுக முடியும் என்று WABetaInfo தெரிவித்துள்ளது. இயங்குதளத்தால் பகிரப்பட்ட அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டின் படி, புதிய அம்சம் பீட்டா சோதனையாளர்கள் பைல்களைப் பகிர்வதற்கான புதிய வழியை முயற்சிக்க அனுமதிக்கிறது.

ஸ்மார்ட் மூவ்.. WhatsApp-ல் போட்டோஸ் வீடியோஸ் ஷேர் செய்யுறீங்களா?

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் புதிய பிரிவிற்குச் செல்ல வேண்டும், அங்கு அவர்கள் கோப்புகளை அனுப்பவும் பெறவும் முடியும். ஸ்கிரீன்ஷாட் இரண்டு பயனர்களும் பைல்களை பரிமாறிக்கொள்ள இந்த பகுதியை அணுக வேண்டும், குறுகிய தூரத்தில் பாதுகாப்பான பகிர்வை உறுதி செய்கிறது. இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உங்கள் சாதனத்தை ஷேக் செய்தால் இந்த அம்சம் உடனே ஆக்டிவேட் செய்யப்படுமாம்.

வாட்ஸ்அப் பைல் எக்ஸ்சேஞ் அம்சம் திறம்பட கட்டுப்படுத்துகிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது. வட்ஸ்அப் சாட்டில் இல்லாவிட்டாலும் அல்லது அறிமுகமில்லாத நெட்வொர்க் அமைப்பில் இருந்தாலும் பைல் ஷேரிங் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் உடன் வருகிறது. இதனால், உங்கள் போனில் இருந்து பகிர படும் பைல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

இந்த புதிய நியர்பை ஷேரிங் அம்சம் இப்போது பீட்டா வெர்ஷனில் சோதனையில் இருக்கிறது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்தவுடன், இந்த அம்சம் எல்லோருக்கும் கிடைக்கும் படி, உலகளவில் அணைத்து பயனர்களுக்கு ஒரே நேரத்தில் அல்லது பகுதி வாரியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் மூலம் பைல் ஷேரிங் செய்வது மிகவும் சுலபமானதாக மாறப்போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Nearby Share Feature Coming Soon To Share Image Video and Media Files in Android Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X