வாட்ஸ் அப் வதந்தி: இந்தியாவில் அதிகரிக்கும் அப்பாவிகள் கொலை.!
குழந்தைகளை கடத்துவதாக வாட்ஸ் அப் வதந்திகளை நம்பி கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வாட்ஸ் அப் வதந்திகளால் இந்தியாவில் அப்பாவி மக்களை பொதுமக்கள் அடித்து கொலை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. குழந்தைகளை கடத்துவதாக வாட்ஸ் அப் வதந்திகளை நம்பி கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 200 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் இதன்மூலம் பல பயன்கள் இருந்தாலும் நாடு முழுவதும் கடந்த ஆண்டில் குழந்தைகளை திருடுவதாக வதந்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பியதாக சுமார் 30 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். மாநில அரசுகளும், காவல்துறையினர்களும் இதனால் பெரும் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொலை நடந்ததை அடுத்து அம்மாநில அரசு கிராமங்களுக்கு சென்று இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று அறிவிப்பு செய்துள்ளது.

உலகில் சுமார் 1.5 மில்லியன் பேர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியால் பல தகவல்கள் ஒருவருக்கொருவர் பறிமாறி கொள்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த வாட்ஸ் அப் செயலியால் பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இதனையடுத்து தற்போது இந்தியாவில் வாட்ஸ் அப் வதந்திகளால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஒரு சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு நாடோடி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வாட்ஸ் வதந்தியால் மிரட்டப்பட்டனர். இவர்களில் கும்பல் ஒரு பேருந்தில் குழந்தையுடன் பயணம் செய்த ஒரு பெண்ணை மிரட்டியதுடன் சுமார் 35 பேர் சூழ்ந்து அந்த பெண் குழந்தையை கடத்தியதாக கூறி கண்மூடித்தனமாக தாக்கினர். இதுகுறித்டு தகவல் அறிந்து காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்தபோது நான்கு அதிகாரிகளும் தாக்குதலுக்கு காயமடைந்தனர்.
இரண்டு பேர் ஒரு குழந்தையை பைக்கில் தூக்கி செல்வது போன்ற ஒரு வீடியோ பரப்பப்படுகிறது. உண்மையில் இந்த வீடியோ பாகிஸ்தானில் குழந்தை பாதுகாப்பு பிரச்சாரம் குறித்த ஒரு வீடியோ ஆகும். ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு பையனை இரண்டு பேர் கடத்துவதாக வதந்தி பரவி பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

குரூப் அட்மின்
ஃபேஸ்புக்கின் இன்னொரு சமூக வலைத்தளமான வாட்ஸ் அப், இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையில் உதவுகிறது. கிராமப்புற டாக்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது உள்பட பல்வேறு ஆக்கபூர்வமான விஷயங்கலை செய்து வருகிறது. ஆனால் அதே வாட்ஸ் அப், இதுபோன்ற குழந்தை கடத்தல் வதந்தியை கட்டுப்படுத்த தவறுவதால் அப்பாவிகளின் உயிர்கள் பலியாகிறது. கடந்த வாரம் குருப் அட்மின்கள் பதிவு செய்வதில் சில வரைமுறைகளை வாட்ஸ் அப் கொண்டு வந்தது. இதன்படி ஒரு குரூப் அட்மின் இன்னொரு குரூப்பில் போஸ்ட் செய்ய முடியாது.
அதேபோல் நம்பகமான நண்பர்கள் அல்லது உறவினர்களால் அனுப்பப்பட்ட பதிவுகளில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை அனுப்பியவர் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளும் நபர் குறித்த பீட்டா வசதி தற்போது உள்ளது.

2019ஆம் ஆண்டு
2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களுக்கு முன்னதாகவே இந்தியாவில் உண்மையான வலைத்தளங்களை இணைத்துக்கொண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்திய மெக்ஸிகோவில் நடந்த தேர்தல்களில் இவ்வாறே செய்தது. அந்நாட்டில் வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வதந்திகளை அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன் விலை மற்றும் டேட்டாக்கள் குறைந்த விலையில் கிடைப்பதால்தான் என்று கருதப்படுகிறது. ஆனால் அதுவே இந்தியாவுக்கு ஒருசில நேரங்களில் பாதகமாகவும் அமைந்துவிடுகிறது. போலி இணையதளங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஒருவர் இதுகுறித்து கூறியபோது, 'நாட்டின் பல பாகங்களில் டிஜிட்டல் மிரட்டல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் தொலைத்தொடர்புத்துறை சென்றுவிட்டது. ஆனால் அதனுடன் கல்வி, விழிப்புணர்ச்சியும் செல்ல வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய பத்திரிகையாளர்
இந்திய அரசு இதுபோன்ற வதந்திகள் பரப்புபவர்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு பல வழிகளில் அறிவுறுத்தி வந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு முஸ்லீம் இளைஞர் உத்தரபிரதேசத்தில் மாட்டுக்கறியை அதிகளவில் சேமித்து வைத்திருந்ததாக ஒரு வதந்தி பரவி கொலை செய்யப்பட்ட சம்பவம் இதுபோன்ற வதந்திகளால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றம் அந்த பகுதியில் உள்ள மைக் ஒன்றில் பரப்பப்பட்ட வதந்தியால் ஏற்பட்டது. உண்மையில் இந்தியாவில் இதுபோன்ற படுகொலை அதிகரித்து வருவதாக முகம்மது அலி என்ற இந்திய பத்திரிகையாளர் வருத்தத்துடன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா
அதேபோல் "அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த மோதல்களுக்கு காரணம் உள்ளூர் நபர்கள் அல்ல என்றும், அதேபோல் ஐதராபாத், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் வதந்திகளால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வருவதாகவும், அந்த பத்திரிகையாளர் மேலும் கூறியுள்ளார். ஒருசில குறிப்பிட்டவர்களை தாக்குவதற்கு இதை ஒரு வித்தியாசமான ஐடியாவாக பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications