வாட்ஸ்அப் விரைவில் 2ஜிபி அளவு பைல்களை பகிர அனுமதிக்குமா? இந்த புது அம்சம் வந்தால் டெலெக்ராம் அவுட்..
சமீபத்திய தகவலின் படி, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கான ஒரு புத்தம் புதிய அம்சத்தில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முதல் முறையாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் மெசேஜ்ஜிங் தளத்திலிருந்து 2ஜிபி அளவுள்ள கோப்புகளைப் பகிர அனுமதிக்கும் அம்சத்தில் WhatsApp செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையில் வாட்ஸ்அப் பயனர்களைக் குஷி அடையச் செய்துள்ளது. இந்த புத்தம் புதிய அம்சம் iOS மற்றும் Android இரண்டிலும் சோதிக்கப்படுகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

தற்போதைய வாட்ஸ்அப் பயனர்களுக்கு இருக்கும் சிக்கல் என்ன தெரியுமா?
பிரபலமான வாட்ஸ்அப் அம்சங்கள் பற்றிய தகவலை உடனுக்குடன் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் டிப்ஸ்டர் WABetaInfo ஆல் இந்த புதிய அம்சம் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, வாட்ஸ்அப் பயனர்கள் வெறும் 100 MB வரையிலான கோப்புகளை மட்டுமே அவர்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து அனுப்ப முடியும். இந்த குறைந்த அளவு கொண்ட அம்சம் உண்மையில் பெரிய அளவு கோப்புகளை ஷேர் செய்ய விரும்பும் போது சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது உண்மையில் வாட்ஸ்அப் பயனர்களைப் பல வகையில் பாதிக்கிறது.

டெலெக்ராம் தளத்தில் 1.5 ஜிபி அளவு கொண்ட கோப்புகளைக் கூட அனுப்ப முடியுமா?
நீண்ட காலமாக இந்த சிக்கல் பற்றிப் பல நேரங்களில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆப்பிற்குப் போட்டியாகச் செயல்பட்டு இயங்கிக்கொண்டிருக்கும் மிகப் பெரிய மற்றொரு மெசேஜ்ஜிங் தளம் என்றால் அது டெலெக்ராம் ஆப்ஸ் தான். டெலெக்ராம் தளத்தில், அதன் பயனர்கள் அதிகபட்சமாக சுமார் 1.5 ஜிபி அளவு கொண்ட கோப்புகளைக் கூட அனுப்பிக்கொள்ளும் வசதியை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால், வாட்ஸ்அப் வெறும் 100 எம்பி அளவை மட்டுமே வழங்கி வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு வழியாக வாட்ஸ்அப் இப்போது இந்த அம்சத்தை உருவாக்கி வருகிறது.

வாட்ஸ்அப் இன் புதிய அம்சம் 2 ஜிபி அளவு பைல்களை அனுப்ப அனுமதிக்கிறதா?
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு சில பீட்டா சோதனையாவார்களின் வாட்ஸ்அப் இல் இந்த அம்சம் கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் புதுப்பிப்பு பீட்டா பதிப்புகள் 2.22.8.5 இல் இந்த அம்சம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Android இல் 2.22.8.7 மற்றும் iOS இல் 22.7.0.76. இது இன்னும் பீட்டா சோதனையில் இருப்பதால், இந்த அம்சத்திற்கான அணுகலைப் பலர் பெறுவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் சந்தேகத்திற்கு இடமின்றி குறுஞ்செய்தி பயன்பாட்டின் பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

டெலெக்ராம் vs வாட்ஸ்அப்
இருப்பினும், அவ்வாறு செய்வதற்கு WhatsApp இதை முதலில் சரியாகச் சோதனை செய்து பார்க்க வேண்டும். டெலிகிராம் செயலி அதன் பயனர்களை இப்போது வரை சுமார் 1.5 ஜிபி வரையிலான அளவு கொண்ட கோப்புகளைப் பகிர அனுமதித்துள்ளது. வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அதிகமான பயனர்களுக்குக் கொண்டுவந்தால், அது ஒரு புதிய முன்னுதாரணமாக அமையும். குறிப்பாக, வாட்ஸ்அப் இந்த இடத்தில் டெலெக்ராம் செயலியை விட 0.5 ஜிபி அளவு டேட்டாவை பகிர அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜிபி அளவு பைலை அனுப்ப உதவும் முதல் மெசேஜ்ஜிங் தளமாக வாட்ஸ்அப் மாறுமா?
வாட்ஸ்அப் இன் இந்த முயற்சி வெற்றிபெற்றால், 2ஜிபி வரை டேட்டாவை அனுப்பும் முதல் செய்தியிடல் செயலியாக வாட்ஸ்அப் மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மெசேஜ்ஜிங் தளத்தில் 2ஜிபி அளவு தகவலை அனுப்பும் வசதியை இப்போது வரை எந்த ஆப்ஸும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு புறம் இது பெரிய கோப்புகளை அனுப்ப அனுமதிக்கிறது என்றாலும் கூட, இது இன்னும் சில சிறந்த அனுபவத்தை வாட்ஸ்அப் பயனர்களுக்கு வழங்கவிருக்கிறது.

இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்ன?
உதாரணத்திற்கு, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கிடைத்துவிட்டால், அது பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவின் தரத்தைக் குறைக்காமல் அதிக தெளிவு திறனுடன் அப்படியே அனுப்புவதற்கு அனுமதிக்கும். இதனால், வாட்ஸ்அப் பயனர்களுக்குச் சிறந்த படத் தரம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களின் மெசேஜ்ஜிங் தளத்தில் இருந்து பகிரும் புகைப்படங்கள் அதன் அசல் தரத்தில் மற்றும் அளவிலிருந்து குறைக்கப்பட்ட பின்னரே பகிரப்படுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு இது தான்.. வாட்ஸ்அப் கொடுக்க முயல்வதும் இது தான்
இனி இந்த கம்ப்ரெஸ் அம்சத்தின் செயல்பாடு மற்றும் இதனால் ஏற்படும் தெளிவற்ற சிக்கலில் இருந்து வாட்ஸ்அப் பயனர்கள் முழுமையாக விடுபடலாம். உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய WhatsApp பயன்பாடு அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மோசமாகத் தோல்வியடைகிறது. காரணம், இன்று நம்முடைய ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராக்கள் சிறப்பாகவும், தரவு வேகம் வேகமாகவும் இருப்பதனால், மக்கள் உயர் தெளிவு திறன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களையே பார்க்கவும் பகிரவும் விரும்புகிறார்கள்.

எப்போது இந்த புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்கும்?
வாட்ஸ்அப் இதை இத்தனை காலத்திற்குப் பிறகு உணர்ந்து தாமதமாகச் செயல்படுத்துகிறது என்பது தாமதம். இருப்பினும், இந்த அம்சம் இன்றைய காலகட்டத்தில் உள்ள பயனர்களுக்கு மிகவும் தேவையான சேர்க்கை என்பதனால் வாட்ஸ்அப் இன் இந்த முயற்சிக்கு அதன் பயனர்களின் பாராட்டும் கிடைத்துள்ளது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் கிடைக்கும் படி அறிமுகம் செய்யப்படும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஏனெனில் இந்த அம்சம் இப்போது வெறும் ஒரு சிறிய குழு சோதனையாளர்களுடன் மட்டுமே சோதிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








