இனி வாட்ஸ்அப் இந்த ஐபோன் மாடல்களில் எல்லாம் வேலை செய்யாதாம்!

|

WABetaInfo-ன் புதிய அறிக்கையின்படி வாட்ஸ்அப் பதிப்பு புதிப்பின் மூலம் இனி ஐஓஎஸ் 9 சாதனங்களில் அதன் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட் தகவல்

வாட்ஸ்அப் அப்டேட் தகவல்

வாட்ஸ்அப் நிறுவனம் ஐஓஎஸ் 9-ல் இயங்கும் சாதனங்களில் தனது சேவையை நிறுத்தப்போவதாக WABetaInfo இன் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பழைய இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்களது சாதனத்தை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது புதிய சாதனத்திற்கு மாற வேண்டும் என கூறப்படுகிறது.

iOS 9 சாதனங்கள்

வெளியாகியுள்ள தகவலின்படி 2.21.50 வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் உள்ள iOS 9 சாதனங்கள், வாட்ஸ்அப் பயன்பாட்டை பயன்படுத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

புதிய சேவைக்கான அப்டேட்

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கான தேவையை கண்டறித்து அவ்வப்போது அப்டேட் செய்து புதிய சேவையை வழங்குகிறது. அதன்படி WABetaInfo தகவலின்படி ஐஓஎஸ் பதிப்பு 9-ல் இயங்கும் ஐபோன்களுக்கான ஆதரவை நிறுவனம் கைவிட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுபிப்பு பதிப்பு 2.21.50.11 தற்போது பீட்டா சோதனையில் இருக்கிறது. இந்த பதிப்பு பயனர்களுக்கு புது சேவையை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பு பதிப்பு ஐஓஎஸ் 9 இயங்குதள பயனர்களுக்கு கிடைக்காது எனவும் அந்த சாதனங்கள் பயன்படுத்தும் பயனர்கள் தங்களது சாதனங்களை அப்டேட் செய்து கொள்ளும்படியும் தெரிவிக்கப்படுகிறது.

புதுப்பிப்ப பதிப்பை அப்டேட் செய்ய வேண்டும்

வாட்ஸ்அப் வரவிருக்கும் புதுப்பிப்பை ஐபோன் 4, ஐபோன் 4எஸ் பயனர்கள் பயன்படுத்த முடியாது. ஐஓஎஸ் புதிய பதிப்பை புதுப்பிக்காத ஐபோன் 5, ஐபோன் 5எஸ், ஐபோன் 5சி பயனர்கள் விரைவில் புதிப்பிக்க வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் அவர்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Whatsapp Messenger Going to Drop the Support in These Iphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X