வாட்ஸ்அப்-ல் விரைவில் அட்டகாச புதுஅம்சம்: நீங்க ஆரம்பிச்சா போதும் நாங்க முடிச்சுருவோம்- அது என்ன?

|

சமூகவலைதள பயன்பாடு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் ஏதேனும் ஒரு சமூகவலைதளத்தில் கணக்கு வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வாட்ஸ்அப் புதிய அம்சம்

வாட்ஸ்அப் புதிய அம்சம்

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஆகும். இதில் வாட்ஸ்அப் கணக்கை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம்

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களை ஈர்ப்பதற்கு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி 2018 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் அறிமுகம் செய்த அம்சம்தான் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம். இந்த அம்சம் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட வாட்ஸ்அப் நிறுவனம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்டிக்கர் அம்சமத்தை அறிமுகம் செய்தது.

ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம்

ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம்

இதுகுறித்த அறிக்கையின்படி, நீங்கள் டைப் செய்வதன் அடிப்படையில் ஸ்டிக்கர்கள் பரிந்துரைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் செயல்படுத்தி வருகிறது. புதிய அம்சம் குறித்த சோதனையில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது வளர்ச்சியடைந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

முதல் வார்த்தை டைப் செய்தால் போதும்

முதல் வார்த்தை டைப் செய்தால் போதும்

நீங்கள் டைப் செய்யும் முதல் வார்த்தை மூலம் ஸ்டிக்கர் பகுப்பாய்வு செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டா டிராக்கர் WABetaInfo அறிக்கைகள் மூலம் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின்படி முதல் வார்த்தை டைப் செய்தவுடன் ஸ்டிக்கர் ஐகான் ஒளிரும் அதை தேவைப்படும் பட்சத்தில் கிளிக் செய்து கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களும் விரைவில்

மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களும் விரைவில்

இந்த புதிய அம்சமானது., டைப் செய்யும் சொற்களின் அடிப்படையில் ஸ்டிக்கர்கள் பரிந்துரை செய்யப்படும். புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது. புதிய அம்சம் உள்-ஸ்டிக்கர் அதாவது வாட்ஸ்அப்பின் சொந்த ஸ்டிக்கர் சேகரிப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இது மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களுக்கும் கூடிய விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது காலப்போக்கில் ஈமோஜிகளாக விரிவுப்படுத்தப்படலாம்.

ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம் பீட்டாவில் இல்லை

ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம் பீட்டாவில் இல்லை

பீட்டோ சோதனையாளர்களுக்கும் தற்போதுவரை இந்த ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. புதிய அம்சமானது சாட் போர்டில் டைப் செய்யும் போது அந்த வார்த்தையை பகுப்பாய்வு செய்து அதற்கான ஸ்டிக்கரை டிராக்கர் கண்டறியும் என தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு வரலாம்

விரைவில் அறிவிப்பு வரலாம்

இதுகுறித்து வெளியான தகவலின்படி நீங்கள் ஸ்டார், நன்றி என டைப் செய்யும் பட்சத்தில் இந்த வார்த்தையை பகுப்பாய்வு செய்து அதற்கான ஸ்டிக்கர்களை டிராக்கர் வழங்கும் இந்த அம்சம். இந்த அம்சம் விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Whatsapp May Working on New Feature to Offer Sticker Suggestions

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X