Whatsapp-ல் இரண்டாவது மியூட் அம்சம் அறிமுகம்: எதற்கு, எப்போது தெரியுமா?

|

சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது.

வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சம்

வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சம்

அதன்படி தற்போது வாட்ஸ்அப்பில் மியூட் வீடியோ என்ற அம்சம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வீடியோக்களை ஒருவருக்கு அனுப்புவதற்கு முன்பு அல்லது ஸ்டேட்டஸ் வைப்பதற்கு முன்பு மியூட் செய்ய பயன்படுகிறது.

டிரிம்மிங் மற்றும் மீயூட் வீடியோ

டிரிம்மிங் மற்றும் மீயூட் வீடியோ

WeBetainfo மூலமான தகவலின்படி மியூட் வீடியோ அம்சத்தை நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அது பீட்டா அப்டேட்டில் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. WeBetainfo பகிர்ந்துள்ள ஸ்க்ரீன்ஷாட்டின்படி டிரிம்மிங் மற்றும் மீயூட் சவுண்ட் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒலியை நீக்கி மியூட் மோட்

ஒலியை நீக்கி மியூட் மோட்

மியூட் வீடியோ அம்சம், வீடியோக்களை தொடர்பில் உள்ள ஒருவருக்கு அனுப்புவதற்கு முன்பாகவும் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு முன்பாகவும் அதன் ஒலியை நீக்கி மியூட்டில் வைக்க உதவும் என கூறப்படுகிறது. அதோடு வீடியோவை வேண்டிய அளவு வெட்டவும் ஒலியை நீக்கவும் இது உதவுகிறது.

கால அளவு மற்றும் ஸ்பீக்கர் ஐகான்

கால அளவு மற்றும் ஸ்பீக்கர் ஐகான்

மியூட் வீடியோ அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வளர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. பயனர்கள் பகிர விரும்பும் வீடியோவின் டிரிம்மிங் கால அளவு மற்றும் ஸ்பீக்கர் ஐகான் இடம்பெறும் என ஸ்க்ரீன் ஷாட் தெரிவிக்கிறது. அந்த ஐகானை கிளிக் செய்தால் வீடியோ அனுப்புவதற்கு முன்பு வீடியோவை மியூட் செய்யலாம்.

உலகிலேயே இதுதான் கடைசி: அரியவகை உயிரினத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை!உலகிலேயே இதுதான் கடைசி: அரியவகை உயிரினத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை!

நேரடியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

நேரடியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

இந்த புதிய அம்சம் வளர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது வரை பீட்டா சோதனைக்கு கூட கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பு அம்சம் நேரடியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணம் அனுப்பும் சேவை

பணம் அனுப்பும் சேவை

சமீபத்தில் வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி முதல் யுபிஐ கட்டண சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப் இந்த சேவையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உடன் இணைந்து தயாரித்துள்ளது. இதன்மூலம் இனி பயனர்கள் எளிதாக பணம் அனுப்பலாம்.

7 நாட்களில் மறைந்துவிடும் அம்சம்

7 நாட்களில் மறைந்துவிடும் அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட மெசேஜ் தானாகவே 7 நாட்களில் மறைந்துவிடும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கடந்தாண்டு முதல் சோதனையில் இருந்தது. வாட்ஸ்அப் Disappearing messages என்றழைக்கப்படும் இந்த அம்சத்தில் மெசேஜ்கள் 7 நாட்களுக்கு பிறகு தாமாகவே மறைந்துவிடும். வாட்ஸ்அப் சேட்டிங்கில் Disappearing Message அம்சத்தை இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும். பயனர்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.

ஜாயின் மிஸ்டு கால் அம்சம்

ஜாயின் மிஸ்டு கால் அம்சம்

அதேபோல் ஜாயின் மிஸ்டு கால் என்று அழைக்கப்படும் அம்சத்தை அறிமுகம் செய்வதில் வாட்ஸ் அப் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் பயனர்களை, அவர்கள் முன்பு தவறவிட்ட குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் மீண்டும் சேர அனுமதிக்கிறது. அழைப்பு முடிந்துவிட்டால் ஜாயின் மிஸ்டு கால் மூலம் இணைவதற்கான விருப்பம் காண்பிக்காது.

source: ndtv.com

Best Mobiles in India

English summary
Whatsapp May Working on Mute Video Feature: Allow to Mute Videos Before Sending Contact or Status

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X