WhatsApp-ல் இனி மொபைல் நம்பரை மறைக்கலாமா? சைலன்ட்டாக உஷாராகிறதா வாட்ஸ்அப்?

|

Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp, இப்போது ஒரு புதிய சேவையைச் சோதனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பிரைவசி தொடர்பான அம்சங்களில் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. கடந்த சில வருடங்களில் வாட்ஸ்அப் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வரிசையில், WhatsApp பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு விருப்பத்தை வழங்கவிருக்கிறது.

WhatsApp இல் இனி மொபைல் நம்பரை மறைக்க முடியுமா?

WhatsApp இல் இனி மொபைல் நம்பரை மறைக்க முடியுமா?

சமீபத்தில் வெளியான தகவலின் படி, WhatsApp பயனர்கள் இனி அவர்களுடைய மொபைல் நம்பர்களை மறைக்க உதவும் ஒரு பிரத்தியேகமான அம்சத்தைப் பெறப்போகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, WhatsApp இல் இனி உங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை உங்களால் மறைக்க முடியும். வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பிரைவசியை கருத்தில் கொண்டு இப்படியொரு புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது என்று கூறப்பட்டுளள்து. இது உண்மை தானா?

புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சைலன்ட்டாக உருவாக்குகிறதா?

புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சைலன்ட்டாக உருவாக்குகிறதா?

இப்போதே, இந்த புதிய அம்சத்தை சில வாட்ஸ்அப் பயனர்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதே அதுவும் உண்மை தானா? இந்த புதிய அம்சம் எப்படி வாட்ஸ்அப் பயனர்களின் மொபைல் நம்பர்களை மறைக்கப் போகிறது என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடையையும், விளக்கத்தையும் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கப்போகிறோம். வாங்க நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம்.

ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்த பிறகு வாட்ஸ்அப் எதை மறைக்க துடிக்கிறது?

ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்த பிறகு வாட்ஸ்அப் எதை மறைக்க துடிக்கிறது?

வாட்ஸ்அப் பயனர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைப்பதற்கான புதிய விருப்பத்தில் WhatsApp நிறுவனம் சமீபத்தில் வேலை செய்தது. இப்போது, அந்த அம்சத்தை தொடர்ந்து, ​​மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் சேவையானது, புதிய தனியுரிமையை மையமாகக் கொண்ட புது பாதுகாப்பு அம்சத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!

யாரிடமிருந்து உங்களுடைய மொபைல் எண்கள் மறைக்கப்படும்?

யாரிடமிருந்து உங்களுடைய மொபைல் எண்கள் மறைக்கப்படும்?

வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சேவையானது, அதன் ஆண்ட்ராய்டு வெர்ஷன் பயன்பாட்டில் உள்ள பயனர்களுக்கு இந்த சேவையை அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த சேவை ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களை குரூப் இல் உள்ள சில துணைக் குழுக்களிடமிருந்து அவர்களுடைய மொபைல் எண்களை மறைக்க அனுமதிக்கிறது. ஆம், இனி உங்கள் மொபைல் நம்பரை குரூப்பில் உள்ள மற்றவர்களால் அணுக முடியாது.

டெலெக்ராம் தளத்தில் கூட இது போன்ற ஒரு அம்சம் இருக்கிறதா?

டெலெக்ராம் தளத்தில் கூட இது போன்ற ஒரு அம்சம் இருக்கிறதா?

வாட்ஸ்அப் இன் போட்டியாளரான டெலெக்ராம் தளத்தில் இது போன்ற ஒரு அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெலெக்ராம் தளத்தில், பயனர்கள் அவர்களுடைய மொபைல் எண்களை மறைத்துவிட்டு, அவர்கள் விரும்பும் ஒரு யூஸர் பெயரின் மூலம் பாதுகாப்பாக மெசேஜ்ஜிங் தளத்தை பயன்படுத்த டெலெக்ராம் அனுமதிக்கிறது. இது போன்ற ஒரு சேவையை தான் வாட்ஸ்அப் இப்போது சோதனை செய்து வருகிறது. ஆனால், இது குரூப்பில் மட்டும் மொபைல் எண்களை மறைக்க அனுமதிக்கிறது.

WhatsApp பீட்டா 2.22.17.23 வெர்ஷன்

WhatsApp பீட்டா 2.22.17.23 வெர்ஷன்

நாம் பேசும் இந்த புதிய வாட்ஸ்அப் அம்சத்தை நிறுவனம் அதனுடைய ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.17.23 வெர்ஷன் மூலம் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்பில் phone number sharing என்ற பெயரில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுள் ப்ளே ஸ்டோர் பீட்டா திட்டத்தின் மூலம் இப்போது கிடைக்கிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதால், சோதனையாளர்களுக்கு தற்போது கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

WABetaInfo இன் தகவல் என்ன சொல்கிறது?

WABetaInfo இன் தகவல் என்ன சொல்கிறது?

WABetaInfo இன் அறிக்கையின்படி, Android இல் குறிப்பிட்ட WhatsApp குரூப்களில் இருந்து மொபைல் எண்களை மறைக்க இந்த அம்சம் விரைவில் உங்களை அனுமதிக்கும். இந்த விருப்பம் default ஆக டி-ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும் என்று, வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு குரூப்பில் சேரும்போது, ​​உங்கள் போன் எண் தகவல், குரூப்பில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் தானாகவே மறைக்கப்படும். அதேபோல், உங்களின் விருப்பத்தின்படி குறிப்பிட்ட துணைக் குரூப் உடனும் இதை நீங்கள் பகிரலாம்.

போன் நம்பர் ஷேரிங் அம்சம் என்ன நிலையில் உள்ளது?

போன் நம்பர் ஷேரிங் அம்சம் என்ன நிலையில் உள்ளது?

குரூப்களுக்கான போன் எண் ஷேரிங் அம்சத்தைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டுடன் WABetaInfo அறிக்கை வெளிவந்துள்ளது. இது வெளிவரத் தொடங்கும் போது, இது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய யோசனையை பயனர்களுக்கு இந்த ஸ்கிரீன்ஷாட் விபரங்கள் வழங்கியுள்ளது. இந்த அம்சம் WhatsApp ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சோதனை கட்டத்தில் இருப்பதனால், இறுதி வெளியீட்டிற்கு முன் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் உடன் செயல்படும் மற்றொரு அம்சம்

2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் உடன் செயல்படும் மற்றொரு அம்சம்

இந்த புதிய அம்சத்துடன் கூடுதலாக, வாட்ஸ்அப் புதிய லாகின் ஒப்புதல் அம்சத்துடன் செயல்பட்டு வருகிறது. இது தவறான பயனர் அணுகுமுறையைத் தடுக்க உதவுகிறது. அசல் பயனர்களைப் பாதுகாக்கும் முறையில் இந்த சேவை செயல்படுவதாக WABetaInfo தெரிவிக்கிறது. வாட்ஸ்அப்பில் கிடைக்கும் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் உடன் இந்த அம்சம் செயல்படும். ஒரு பயனர் வேறு ஸ்மார்ட்போனிலிருந்து WhatsApp கணக்கில் லாகின் செய்யும் போது, பயனர்கள் வாட்ஸ்அப்பில் நோட்டிபிகேஷனை பெறுவார்கள்.

Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!

பயனர் பாதுகாப்பை பலப்படுத்த வாட்ஸ்அப் மும்முரமா?

பயனர் பாதுகாப்பை பலப்படுத்த வாட்ஸ்அப் மும்முரமா?

வாட்ஸ்அப் அதன் மெசேஜ்ஜிங் தளத்தில் இன்னும் பல புதுப்பிப்புகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வாட்ஸ்அப் பயனர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் விபரங்களை மறைக்க உதவும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் வளர்ச்சியில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மொபைல் நம்பர் மறைக்கப்படும் இந்த அம்சத்தைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்பதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp May Soon Let You Hide Numbers From Specific Groups

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X