இனி இதன் ஆதிக்கம் தான்: மே மாத இறுதிக்குகள் களமிறங்கும் whatsapp pay?

|

வாட்ஸ்அப் பே செயலி சேவை மே மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பே சேவை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பே சேவை

வாட்ஸ்அப் தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பே சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனம் தனது புதிய கட்டண சேவையை மே மாத இறுதிக்குள் நாட்டில் தொடங்கவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மனிகண்ட்ரோலின் அறிக்கை

மனிகண்ட்ரோலின் அறிக்கை

மனிகண்ட்ரோலின் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் அதன் கட்டண சேவைக்காக மூன்று தனியார் வங்கிகளுடன் கூட்டு சேரும் என்றும் இந்த பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

வாட்ஸ்அப் முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதல்

வாட்ஸ்அப் முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதல்

வாட்ஸ்அப் முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, அதன் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இந்தியாவில் வெளியிடத் தயாராகிவிட்டது. வாட்ஸ்அப் அதன் யுபிஐ அடிப்படையிலான கட்டண சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் (NPCI) சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் டிஜிட்டல்

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் டிஜிட்டல்

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் டிஜிட்டல் கட்டண சேவை எவ்வாறாயினும், வாட்ஸ்அப்-ன் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண சேவை ஒரு கட்டமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி வாட்ஸ்அப் பே அம்சம் ஆரம்பத்தில் முதல் கட்டமாக சுமார் 10 மில்லியன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதற்குப் பின் மிச்சம் உள்ள ஒப்புதல் வழங்கப்பட்டபின் அனைவருக்கும் வாட்ஸ்அப் பே வெளியிடப்படும்.

கூகிள் பே உடன் போட்டியிடுமா வாட்ஸ்அப் பே

கூகிள் பே உடன் போட்டியிடுமா வாட்ஸ்அப் பே

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதால், வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை சந்தையை பெரியதாக மாற்றும் என்று நம்புகிறது. இது ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகிள் பே, வால்மார்ட்டின் ஃபோன்பே, அலிபாபாவின் பேடிஎம் மற்றும் அமேசான் பே ஆகியவற்றுடன் நேரடியாகப் போட்டியிடும் என்று நம்பப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசேஜிங்

வாட்ஸ்அப் மெசேஜிங்

வாட்ஸ்அப் மெசேஜிங்-ல் இனி பேமெண்ட் செய்யலாம் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப்-ன் டிஜிட்டல் கட்டண முறை பயனர்கள், மற்றவர்களுக்குப் பணம் செலுத்த அல்லது தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப் பே பேமெண்ட் சேவை, வாட்ஸ்அப் மெசேஜிங் பயன்பாட்டிலேயே ஒருங்கிணைக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பேஸ்புக் தனது கட்டண தீர்வை இந்தியாவில் அறிமுகப்படுத்த பல தடை

பேஸ்புக் தனது கட்டண தீர்வை இந்தியாவில் அறிமுகப்படுத்த பல தடை

பேஸ்புக் தனது கட்டண தீர்வை இந்தியாவில் அறிமுகப்படுத்த பல தடைகளை எதிர்கொண்டது. 2018 ஆம் ஆண்டில், வாட்ஸ்அப் ஐசிஐசிஐ வங்கியுடன் ஒத்துழைத்து அதன் வாட்ஸ்அப் பே அம்சத்தை 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் சோதித்தது. இருப்பினும், இந்திய அரசு இரண்டு ஆட்சேபனைகளை எழுப்பியது.

தொலைதூர விதிகள்

தொலைதூர விதிகள்

கட்டண தீர்வுகள் கட்டுப்படுத்தப்படுவது தொலைதூர விதிகளை மீறுகிறதா இல்லையா என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் கருத்துக்களை அரசாங்கம் கேட்டுள்ளது. தரவு உள்ளூர்மயமாக்கல் கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப்பை அரசாங்கம் கேள்வி கேட்கத் தொடங்கியது.

பூமி சந்திக்க போகும் அடுத்த பேரிடர் இதுவாக இருக்க கூடும் - காரணம் யார் தெரியுமா?பூமி சந்திக்க போகும் அடுத்த பேரிடர் இதுவாக இருக்க கூடும் - காரணம் யார் தெரியுமா?

அமேசான் பே, ஃபோன்பே, பேடிஎம், கூகிள் பே

அமேசான் பே, ஃபோன்பே, பேடிஎம், கூகிள் பே

இதன் மூலம், அமேசான் பே, ஃபோன்பே, பேடிஎம், கூகிள் பே மற்றும் பலவற்றிற்கு வாட்ஸ்அப் பே நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர்கள் அனைவரையும் வாட்ஸ்அப் பே சேவையாக மாற்றினால், நிறுவனம் யுபிஐ அடிப்படையிலான கட்டண பிரிவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்றும் கூறப்படுகிறது.

source: themobileindian.com

Best Mobiles in India

English summary
whatsapp may launch its new payment service in india by May end

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X