வாட்ஸ்அப் கால் பிரிவில் எதிர்பார்த்திடாத புதிய மாற்றங்கள்.. இந்த மாற்றம் பயனளிக்குமா?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய சேவையைச் சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய 2.21.140.11 பீட்டா புதுப்பிப்பில் இந்த புதிய சேவையை வெளியிட்டு சோதனை செய்து வருகிறது என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது. இது, அழைப்புகளுக்கு புதிய பயனர் இடைமுகத்தையும், குழு அழைப்புகளுக்கான புதிய அம்சத்தையும் சேர்க்கிறது. ஆப்பிள் iOS பீட்டா பயனர்கள் தற்பொழுது வாட்ஸ்அப் பயன்பாட்டில் அழைப்பைப் பெறும்போது புதிய பயனர் இடைமுகத்தைக் காண்பார்கள்.

வாட்ஸ்அப் அழைப்பு பக்கத்தில் புதிய இடைமுக அம்சமா?

வாட்ஸ்அப் அழைப்பு பக்கத்தில் புதிய இடைமுக அம்சமா?

WaBetaInfo பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின் படி, புதிய இடைமுகம் ஆப்பிளின் ஃபேஸ்டைம் பயன்பாட்டில் காணப்பட்டதைப் போலவே இருக்கிறது. புதிய இடைமுகம் இப்போது பயனர்கள் அழைப்பின் போது ஒரு பயனர் தேடும் விருப்பங்களை விரைவாகக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது. திரையின் அடிப்பகுதியில் ரிங் பாட்டனும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிட்ட குழு அழைப்புகளில் மீண்டும் சேர வாய்ப்பு

தவறவிட்ட குழு அழைப்புகளில் மீண்டும் சேர வாய்ப்பு

இந்த சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு, நீங்கள் தவறவிட்ட குழு அழைப்புகளில் உங்களை மீண்டும் சேர அனுமதிக்கிறது.குழு அழைப்பில் சேர யாராவது ஒரு பயனரை அழைத்தால், அந்த நேரத்தில் அவர்களால் சேர முடியாமல் போய்விட்டால், அவர்களுக்கு வந்த குழு அழைப்பு முடிவடையாமல் செயல்பாட்டில் இருந்தால் வாட்ஸ்அப் பயனர்கள் மீண்டும் அவர்களின் வாட்ஸ்அப்பைத் திறக்கும்போது அந்த குழு அழைப்புடன் மீண்டும் சேர முடியும்.

Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!

வீடியோ அழைப்புக்குக் கீழே சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம்

வீடியோ அழைப்புக்குக் கீழே சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம்

இந்த செய்தி பயன்பாட்டில் அழைப்பு பிரிவுகளை ஒருவர் திறக்கும்போது, நடந்துகொண்டிருக்கும் வீடியோ அழைப்புக்குக் கீழே "Tap to join" லேபிளைக் காண்பார்கள்.

தற்போது, வாட்ஸ்அப் சோதனை செய்துவரும் இந்த அழைப்பு சேவையின் புதிய அம்சம் iOS பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது விரைவில் ஆண்டிராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iOS பயனர்களுக்கு இப்போது கிடைக்கும் புதிய அப்டேட்

iOS பயனர்களுக்கு இப்போது கிடைக்கும் புதிய அப்டேட்

உண்மையில், இந்த அழைப்பு சேவை அம்சம் அனைவருக்கும் மிகவும் தேவைப்படும் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அம்சத்தை நீங்கள் இதுவரை பெறவில்லை என்றால், வரும் நாட்களில் அதைப் பெறுவீர்கள் என்று வாட்ஸ்அப் பீட்டா தெரிவித்துள்ளது. iOS பயனர்களுக்கு இப்போது இந்த வாட்ஸ்அப் அம்சம் இன்று முதல் பயன்படுத்தக் கிடைக்கிறது.

SBI பயனர்களே! இந்த ஆவணங்களை உடனே அப்டேட் செய்யவும் அல்லது வங்கி சேவை ரத்து..SBI பயனர்களே! இந்த ஆவணங்களை உடனே அப்டேட் செய்யவும் அல்லது வங்கி சேவை ரத்து..

அப்டேட்டிற்காக காத்திருக்க வேண்டுமா?

அப்டேட்டிற்காக காத்திருக்க வேண்டுமா?

வழக்கம் போல் வாட்ஸ்அப் நிறுவனம் தனது சோதனை சேவையை ஆப்பிள் பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது. ஆப்பிள் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் சிறிய அளவிலேயே வெளியிடப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அப்டேட் இன்னும் கிடைக்காத நபர்கள், அவை உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு இயக்கப்பட்டிருப்பதைக் காணப் பொறுமையாக இருங்கள்" என்று WaBetaInfo கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Makes Major Changes To Calls Section In Beta Update Says WaBetaInfo : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X