Home
News

வாட்ஸ்அப் செயலியில் வரும் ஆதார் கார்டு.. இனி சிரமம் இருக்காது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்தியா முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. அதுவும் சிம் கார்டு வாங்குவது முதல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. குறிப்பாக ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாது. ஆகவே இந்தியாவில் ஆதார் கார்டு இருப்பதும், அதை அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

குறிப்பாக பலர் ஆதார் அட்டைகளை இழப்பதால் சில பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆனாலும் இனி ஆதார் பதிவிறக்கம் செய்ய UIDAI இணையதளத்திற்குச் செல்ல அவசியம் இருக்காது. அதாவது ஆதார் அட்டையை நேரடியாக வாட்ஸ்அப் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலியில் வரும் ஆதார் கார்டு.. இனி சிரமம் இருக்காது..

அதுவும் இந்த வசதி அதிகாரப்பூர்வ MyGov Helpdesk WhatsApp சாட்பாட் மூலம் கிடைக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் வாட்ஸ்அப் செயலி இந்த செயல்முறையை மிக எளிதாக்கியுள்ளது. இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியைத் தினசரி பயன்படுத்துகின்றனர். ஆகவே தான் வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டு சேவைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியை பெறுவதற்கு முன்பு சில முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்களிடம் ஒரு ஆக்டிவ் DigiLocker கணக்கு இருக்க வேண்டும். அதன்பிற்கு அதிகாரப்பூர்வ MyGov Helpdesk WhatsApp எண்ணை (9013151515) உங்கள் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டும். சரி இப்போது வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டு பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மூலம் ஆதார் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

வழிமுறை-1: உங்கள் போனில் 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைல் போனில் சேமிக்க வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து வாட்ஸ்அ செயலியை திறந்து வாட்ஸ்அப் செயலியை திறந்து இந்த எண்ணுக்கு "Hi" என்று மெசேஜ் அனுப்பவும்.
வழிமுறை-3: அதன்பிறகு சாட்பாட்டில் இருந்து ஒரு மெனு வரும். அதில் DigiLocker எனும் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வழிமுறை-4: இப்போது உங்களது DigiLocker கணக்கை உறுதிப்படுத்த வேண்டும்.
வழிமுறை-5: அதன்பின்பு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
வழிமுறை-6: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உடனே ஒரு OTP வரும். அதை சரிபார்ப்பதற்காக உள்ளிட வேண்டும்.
வழிமுறை-7: ஓடிபி நம்பர் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆவணங்களின் பட்டியல் தோன்றும்.
வழிமுறை-8: அதன்பிறகு ஆதார் என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஆதார் அட்டையை PDF வடிவத்தில் வாட்ஸ்அப் செயலியில் பதிவிறக்கம் செய்யப்படும்.

வாட்ஸ்அப் செயலியில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதுவும் ஆதார் கார்டை தொலைத்தவர்கள் உடனே வாட்ஸ்அப் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும்.

பிளாஸ்டிக் ஆதார் கார்டு விலை உயர்வு:
சமீபத்தில் பிளாஸ்டிக் ஆதார் கார்டு விலை உயர்த்தப்பட்டது. அதாவது ஆரம்பத்தில் இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டு வாங்குவதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டணம் தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் வரும் ஆதார் கார்டு.. இனி சிரமம் இருக்காது..

பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை போன்று பிவிசி (PVC) எனும் பிளாஸ்டிக் வடிவத்தில் ஆதார் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் இந்த பிவிசி எனும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற இந்திய இந்திய தனித்துவ அடையாள ஆவணத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இதற்கான கட்டணம் தான் ரூ.50-லிருந்து தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.

அதுவும் 2020-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் பிளாஸ்டிக் ஆதார் கார்டு கட்டணம் உயர்ந்துள்ளது. வரி மற்றும் டெலிவரி கட்டணம் உள்ளிட்டவையும் இந்த 75 ரூபாய் கட்டணத்தில் அடங்கி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp makes it easy to download your Aadhaar card: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X