அடடா.. சந்தோஷம் தாங்க முடியலயே: WhatsApp அழைப்புகளில் வரும் புதிய அம்சம்.!
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் தனித்துவமான அம்சங்களை வழங்குவதால் வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
தொந்தரவாக இருக்கிறதா?
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரு அசத்தலான அப்டேட் வர இருக்கிறது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வருவது தொந்தரவாக இருக்கிறதா? இந்த தொந்தரவைச் சரி செய்யும் வகையில் தான் வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-ல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்பட உள்ளது. வாட்ஸ்அப் "Silence Unknown Callers" எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிமையாக மியூட் செய்யலாம். மேலும் இதுதொடர்பாக wabetainfo வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால், இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
குறிப்பாக இந்த அம்சம் விரைவில் டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அம்சம் வெளியானால் பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றைத் தவிர்க்க முடியும். இதுதவிர வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் புதிய அம்சத்தைக் கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அதாவது வாட்ஸ்அப் செயலியில் வைக்கப்படும் ஸ்டேடஸ்கள் இனி சென்சிடிவாக இருக்கும்பட்சத்தில் அதனை ரிப்போர்ட் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பாக வாட்ஸ்அப் கொண்டு வரும் இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் மற்றவர்களால் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து ஆண்ட்ராய்டு பீட்டாவிடம் ரிப்போர்ட் செய்ய முடியும். குறிப்பாக இந்த புகாரானது நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டுச் சரிபார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
சேவை மற்றும் விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு ஸ்டேட்டஸ்கள் குறித்து பயனர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், குறிப்பாக உங்களைப் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரியாமல் பகிரப்பட்டாலும் புகார் கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்கள் குழு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் குறித்து அளிக்கப்படும் ரிப்போர்ட்கள் பற்றி வேலை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், மீடியா, லொகேஷன் ஷேரிங், போன் அழைப்புகள் என அனைத்தும் எண்ட் டூ எண்ட் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் வாட்ஸ்அப், மெட்டா தவிர வேறு யாரும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவோ, அவர்களின் தனிப்பட்ட அழைப்புகளை கேட்டகவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் ரிப்போர்ட் அப்டேட் ஆனது தற்போது பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்த பிறகு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புதிய ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட் குறித்து வேலை செய்துவருவதாக வாட்ஸ்அப் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருடம் பல்வேறு புதிய அம்சங்களை வழங்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








