மெசேஜிங் டூல்ஸ் வசதியுடன் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.!

By Lekhaka
|

இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி குறித்த சிறந்த தகவல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதன்மூலம் மக்கள் வியாபாரம், பண ரீதியிலான பயன்பாடுகளை மிக அருமையாக செயல்படுத்த முடியும். மேலும் பின்வரும் காலங்களில் பல்வேறு அப்டேட் வசதிகளுடன் இந்த வாட்ஸ்ஆப் செயலி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், ஃபைல்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலிப் பொறுத்தவரை முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி

தொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி

டெல்லி: உலகம் முழுக்க அதிக நபர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது. அலுவலக பயன்பாடு தொடங்கி குடும்ப சண்டை வரை அனைத்தும் வாட்ஸ் ஆப்பில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வியாபார பயன்பாட்டிற்காக புதிய அப்ளிகேஷனை வாட்ஸ் ஆப் வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதை பல நாட்களாக பாதுகாப்பாக சோதனை செய்து வந்தது. அணு ஆயுதம் போல சோதனை செய்துவிட்டு தற்போதுதான் இதை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது முழுக்க முழுக்க பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

என்ன மாதிரியான ஆப்

என்ன மாதிரியான ஆப்

இந்த ஆப் முழுக்க முழுக்க வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இதை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. வியாபாரம் ஆரம்பிக்கும் விருப்பம் உள்ள அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

செயல்பாடு

செயல்பாடு

இந்த அப்ளிகேஷன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்பலாம். இதற்கு பணம் வசூலிக்கப்படாது. அதேபோல் தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, மாற்றங்கள் என்ன என எல்லாமே இந்த ஆப் மூலம் அனுப்பப்படும். வாட்ஸ் ஆப் போல டவுன்லோட் செய்து அக்கவுண்ட் ஓபன் செய்தால் போதும்.

பயன்பாடு

பயன்பாடு

இதனால் வாடிக்கையாளர்களுக்கும் நிறைய பயன் இருக்கிறது. பட முன்பதிவு, நிகழ்ச்சி முன்பதிவு, பொருட்களின் விலை, தள்ளுபடி எல்லாம் இனி இந்த ஆப் மூலம் நமக்கு அனுப்பப்படும். இதனால் கூகுளில் தேவை இல்லாமல் தேடி நேரத்தி வீணடிக்க வேண்டியதில்லை. பல நாள் கஸ்டமர்களுக்கு சிறப்பு தகவல்களும் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
நல்ல பாதுகாப்பு

நல்ல பாதுகாப்பு

இதன் மூலம் உங்களுக்கு எல்லோரும் தகவல் அனுப்ப முடியாது. உங்களுடைய எண் இருக்கும் நபர்கள் மட்டுமே உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் அவர்களை தேவைப்பட்டால் நீங்கள் பிளாக் செய்து கொள்ள முடியும். இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டு இருக்கிறது.

அறிமுகம் ஆனது

அறிமுகம் ஆனது

தற்போது இந்த ஆப் அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு வந்து இருக்கிறது . மேலும் இந்தோனீசியா, இத்தாலி, மெக்சிகோ, இங்கிலாந்தில் இந்த ஆப் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் இரண்டு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
whatsapp launches its new business app

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X