WhatsApp இருக்கா? இனிமே Voice Chat பண்ணுங்க.. டைப் பண்ண வேண்டாம்.. குரூப் சாட்ல வந்தாச்சு புதுசா!
வாட்ஸ்அப் (WhatsApp) இல்லாத போனை பார்க்க முடியாது. அதில் பர்சனல் சாட், குரூப் சாட் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. இதில் புதுப்புது அப்டேட்களை மெட்டா (Meta) நிறுவனம் கொண்டுவருகிறது. இப்போது, குரூப் சாட் செய்து கொண்டிருக்கும்போதே வாய்ஸ் சாட்டில் (Voice Chat) கனெக்ட் செய்து கொள்ளும்படி புதிய அப்டேட்டை கொடுக்கிறது. இதற்கு குரூப் மெம்பர் லிமிட் கிடையாது. 3 பேர் இருந்தாலும் கிடைக்கும், 256 பேர் இருந்தாலும் கிடைக்கும். இந்த வாய்ஸ் சாட் பீச்சரின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் மூலம் பல்வேறு குரூப்களில் யூசர்கள் இருக்கிறார்கள். குடும்ப குரூப் தொடங்கி, ஆபீஸ், ஸ்கூல், காலேஜ் என்று பலவேறு குரூப்களை யூசர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் அதிக பேர் இருந்தால், டைப் செய்து கலந்துரையாடுவது சிரமமாக இருக்கலாம். இதற்காகவே வாய்ஸ் சாட் பீச்சரை மெட்டா நிறுவனம் கொண்டுவந்தது. இது வாய்ஸ் மெசேஜை போல ரெக்கார்ட் செய்வது கிடையாது.

ஒரே நேரத்தில் லைவ்வில் வாய்ஸ் சாட் செய்ய முடியும். இதுகிட்டத்தட்ட குரூப் கால் போலத்தான். ஆனால், சம்பந்தப்பட்ட குரூப்பில் டெக்ஸ்ட் சாட் செய்துகொண்டே இந்த வாட்ஸ் சாட்டில் இணைந்து இருக்கலாம். ஆகவே, எப்போதும் லைவ்வில் இருக்க முடியும். அதே நேரத்தில் வாய்ஸ் சாட் ஆரம்பித்துவிட்ட பிறகு எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம் அல்லது வெளியேறலாம்.
இதற்கு அட்மின் அப்ரூவல் தேவையில்லை. ஆகவே, விருப்பம் உள்ள குரூம் மெம்பர்கள் தேவை இருந்தால், வாய்ஸ் சாட்டில் இணையவும், வெளியேறவும் முடிகிறது. சொல்லப்போனால், இந்த பீச்சர் 33 முதல் 256 மெம்பர்களை கொண்ட வாட்ஸ்அப் குரூப்களுக்கு மட்டுமே இதற்கு முன்பு கிடைத்து வந்தது. 33 மெம்பர்களுக்கும் குறைவாக இருக்கும் குரூப்களுக்கு கிடைக்காமல் இருந்தது.
இப்போது, எத்தனை மெம்பர்கள் இருந்தாலும் வாய்ஸ் சாட் செய்யும்படி மெட்டா நிறுவனம் அப்டேட் கொடுத்துள்ளது. ஆகவே, உங்களிடம் 2 பேரோ, 3 பேரோ அல்லது எத்தனை பேர் கொண்ட குரூப்போ இருந்தாலும், அதில் இந்த வாய்ஸ் சாட் பீச்சரை பயன்படுத்தி கொள்ளலாம். இதை தொடங்கியவுடன் மெசேஜ் போல குரூப் சாட்டின் கீழே பேனர் தோன்றும். இதை கிளிக் செய்து, சேரலாம் / வெளியேறலாம்.

வாட்ஸ்அப் மெசேஜ்களை போலவே, இந்த வாய்ஸ் சாட் டேட்டாக்களும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-end Encryption) செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, குரூப்பில் இருக்கும் மெம்பர்களை தவிர வேறு யாரும் இதை அக்சஸ் செய்ய முடியாது. இப்போது, இந்த வாய்ஸ் சாட் பீச்சரை (Voice Chat Feature) எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வாய்ஸ் சாட் பீச்சர் பயன்படுத்துவது எப்படி? உங்களது குரூப் சாட்டை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். வலது பக்கத்தின் மேலே வாய்ஸ் சாட் ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்தால், ஸ்டார்ட் வாய்ஸ் சாட் (Start Voice Chat) டேப் தோன்றும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, குரூப்பில் இருக்கும் அனைவருக்கும் நோட்டிபிகேஷன் சென்றுவிடும்.
அதேபோல மெசேஜ் போல ஒரு பேனரும் டைப் செய்யும் இடத்துக்கு மேலே தோன்றும். இதை குரூப் மெம்பர்கள் கிளிக் செய்தால் போதும், சேர்ந்து கொள்ளாலம். அதேபோல அதையே கிளிக் செய்து வெளியேறலாம். இதற்கான ஆப்ஷன்கள் அதில் இருக்கும். அதே நேரத்தில் குரூப் சாட் லைவ்வில் இருக்கும். ஆகவே, மெசேஜ்களையும் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








