WhatsApp ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு புதிய வியூ ஒன்ஸ் சேவை அறிமுகம்.. இதை எப்படி பயன்படுத்துவது?

|

WhatsApp நிறுவனம் நீண்ட காலமா பரிசோதனை செய்து வந்த ஒரு முக்கிய அம்சத்தைச் சமீபத்தில் தனது பீட்டா பயனர்களுக்காக மட்டும் வெளியிட்டு சோதனை செய்தது. நீண்ட நாள் சோதனைக்குப் பின்பு தற்பொழுது இந்த புதிய வியூ ஒன்ஸ் சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு பொதுவாகக் கிடைக்கும் படி, புதிய அப்டேட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

வியூ ஒன்ஸ் அம்சமா? அப்படி என்றால் என்ன? இது என்ன செய்யும்?

வியூ ஒன்ஸ் அம்சமா? அப்படி என்றால் என்ன? இது என்ன செய்யும்?

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த 'வியூ ஒன்ஸ்' அம்சம் தற்பொழுது அனைவருக்கும் அணுகக் கிடைக்கிறது. வியூ ஒன்ஸ் அம்சமா? அப்படி என்றால் என்ன? இந்த அம்சம் உண்மையில் என்ன செய்யும்? இதனால் என்ன பயன்? என்று முழுமையாகப் பார்க்கலாம். வியூ ஒன்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தும் போது, பயனர்கள் அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவை எதிர்முனையில் உள்ள பயனர் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

இதே அம்சம் ஸ்னாப்சாட் ஆப்ஸில் உள்ளதா? உண்மைதானா?

இதே அம்சம் ஸ்னாப்சாட் ஆப்ஸில் உள்ளதா? உண்மைதானா?

கிட்டத்தட்ட இந்த புதிய அம்சம் ஸ்னாப்சாட் ஆப்ஸில் உள்ள அம்சத்தைப் போலவே செயல்படுகிறது. இதேபோன்ற அம்சம் ஸ்னாப்சாட் பயன்பாட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வியூ ஒன்ஸ் போன்ற அம்சத்திற்காக மட்டுமே உலகம் முழுக்க பிரபலம் அடைந்த ஒரு முக்கிய ஆப்ஸ் தான் ஸ்னாப்சாட். இப்போது, இதே போன்ற அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளதால், ஸ்னாப்சாட் பயன்படுத்தும் பயனர்கள் இனி அவர்களின் வாட்ஸ்அப் மூலம் இந்த வியூ ஒன்ஸ் அம்சத்தைப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

வாங்கிய 5 நாளில் வெடித்து சிதறிய OnePlus Nord 2 போன்.. ஒன்பிளஸ் நிறுவனம் என்ன சொன்னது தெரியுமா?வாங்கிய 5 நாளில் வெடித்து சிதறிய OnePlus Nord 2 போன்.. ஒன்பிளஸ் நிறுவனம் என்ன சொன்னது தெரியுமா?

கடந்த அப்டேட்டில் வெளியான டிஸ்ஸப்பியரிங் மெசேஜ்

கடந்த அப்டேட்டில் வெளியான டிஸ்ஸப்பியரிங் மெசேஜ்

தெரியாதவர்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் கடந்த அப்டேட்டில் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் நீங்கள் அனுப்பும் மெசேஜ்ஜை மறுமுனையில் இருக்கும் பயனர் படித்ததும், உங்கள் சாட் பாக்சில் இருந்து நீக்கம் செய்துவிடுகிறது. இதே போன்ற அம்சம் நீண்ட காலமாக ஸ்னாப்சாட் பயன்பாட்டில் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாருக்கெல்லாம் இந்த புதிய அப்டேட் கிடைக்கிறது?

யாருக்கெல்லாம் இந்த புதிய அப்டேட் கிடைக்கிறது?

இத புதிய வியூ ஒன்ஸ் அம்சம் தற்பொழுது ஐபோன் பயனர்களுக்கான இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் வெர்ஷன் 2.21.150 வழியாக அணுகக் கிடைக்கிறது. அதேபோல், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் புதிய வாட்ஸ்அப் அப்டேட் வெர்ஷன் 2.21.14.24 மூலம் பயன்படுத்தக் கிடைக்கிறது. இது ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் வழியாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தால் மட்டும் போதுமானது.

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..

வியூ ஒன்ஸ் அம்சத்தில் உள்ள சிறப்பு என்ன?

வியூ ஒன்ஸ் அம்சத்தில் உள்ள சிறப்பு என்ன?

இந்த புதிய அம்சத்தின் முக்கிய சிறப்பம்சம் என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம், 'வியூ ஒன்ஸ்' அம்சத்தைப் பயன்படுத்திப் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் ஒரு பயனர் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அவர்கள் அந்த மீடியா மெசேஜ்ஜை பார்த்த பின்னர் சாட்டில் இருந்து அது தானாக நீங்கிவிடும். மேலும், அது பெறுநரின் புகைப்படங்கள் அல்லது கேலரியில் சேமிக்கப்படாது எனது குறிப்பிடத்தக்கது.

ஸ்க்ரீன் ஷாட் அல்லது ஸ்க்ரீன் ரெகார்டர் செய்ய வாய்ப்புள்ளதா?

ஸ்க்ரீன் ஷாட் அல்லது ஸ்க்ரீன் ரெகார்டர் செய்ய வாய்ப்புள்ளதா?

வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஆப்பின் வழியாக மற்றொருவருக்கு அனுப்பவும் முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை ஸ்க்ரீன் ஷாட் அல்லது ஸ்க்ரீன் ரெகார்டர் மூலம் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம். வழக்கம் போல் உங்கள் சாட்டில் இருந்து மீடியா கோப்புகளை அனுப்புவது போன்றே இதை நீங்கள் அனுப்பலாம். ஆனால், ஃபைலை அனுப்புவதற்கு முன்பு கேப்ஷன் பார் அருகில் தோன்றும் புதிய '1' ஐகானைத் கிளிக் செய்ய மறக்காதீர்கள்.

300 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மிகப்பெரிய சூப்பர்நோவா வெடிப்பு.. நாசா வெளியிட்ட 'கலீடோஸ்கோப் ஆஃப் கலர்' படம்300 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மிகப்பெரிய சூப்பர்நோவா வெடிப்பு.. நாசா வெளியிட்ட 'கலீடோஸ்கோப் ஆஃப் கலர்' படம்

1 ஐகானை மட்டும் தட்டுங்கள்

1 ஐகானை மட்டும் தட்டுங்கள்

1 ஐகானை தட்டுவதன் மூலம் உங்கள் காண்டாக்ட்களுக்கு நீங்கள் அனுப்பும் மீடியா செய்தியானது வியூ ஒன்ஸ் அம்சத்தின் கீழ் அவர்களுக்கு அனுப்பத் தயாராகிவிடும். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு போட்டோ அல்லது வீடியோவை நீங்கள் எளிதாக வியூ ஒன்ஸ் அம்சத்தின் கீழ் கொண்டு வர முடியும். இந்த புதிய அம்சத்தை ட்ரை செய்து உங்களின் அனுபவத்தை எங்களுடன் கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள். ஸ்னாப்சாட் பயன்படுத்தும் பயனர்கள் இனி வாட்ஸ்அப் இல் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Launched New View Once Feature To Send Disappearing Media Files For Both Android and iOS Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X