Home
News

WhatsApp-ல் தனி-தனி சாட்டை லாக் செய்ய முடியுமா? வந்தாச்சு புது லாக் சாட் அம்சம்! இது என்ன செய்யும்?

WhatsApp பயனர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் உருவாகியுள்ள புதிய "சாட் லாக் (Chat Lock)" அம்சத்தின் மூலம் இனி நீங்கள் உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், சரியாக தான் படித்தீர்கள். உங்கள் சாட் பாக்சில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாட்டை மட்டும் உங்களால் இனி லாக் செய்து வைத்துக்கொள்ள முடியுமாம். இது வாட்ஸ்அப் ஆப்ஸிற்குள் நுழையும் போது கேட்கப்படும் லாக் அம்சம் போன்றதல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். தனி-தனி சாட்களை பிரைவசி காரணத்திற்காவோ அல்லது பாதகாப்பு நலன் கருதியோ இனி நீங்கள் லாக் செய்துகொள்ளலாம்.

WhatsApp-ல் தனி-தனி சாட்டை லாக் செய்ய முடியுமா? வந்தாச்சு லாக் சாட்!

வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை அதிகரிக்க WhatsApp நிறுவனம் பல விஷயங்களை சோதனை செய்து, மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருவது நமக்கே தெரியும். அந்த வகையில் WhatsApp நிறுவனம் தற்போது அதன் பயனர்களுக்கு குறிப்பிட்ட சாட்டை லாக் செய்ய உதவும் "லாக் சாட்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட இந்த புதிய லாக் சாட் அம்சம் வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த அம்சம் பயனர்களின் முழு சாட் பாக்ஸையும் லாக் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட சாட்டை மட்டும் லாக் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல், லாக் செய்யப்பட்ட சாட்டில் உள்ள பகிரப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உடனடியாக ஃபோனின் கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படாது என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பு அம்சத்தின் ஒரு செயல்பாடாக, லாக் செய்யப்பட்ட சாட் இல் வரும் மீடியா பைல்கள் உங்களுடைய கேலரியில் பிரதிபலிக்காது என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு சூப்பர் அம்சத்தை தான் வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒருவழியாக, இப்போது இந்த சூப்பர் கூல் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை இயக்க, பீட்டா வெர்ஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

WhatsApp-ல் தனி-தனி சாட்டை லாக் செய்ய முடியுமா? வந்தாச்சு லாக் சாட்!

இந்த அம்சத்தை இயக்க, நீங்கள் WhatsApp காண்டாக்ட்டின் ப்ரொஃபைல் பகுதிக்குச் செல்லவும். கீழே ஸ்க்ரோல் செய்து, "சாட் லாக் (Chat Lock)" என்பதை கிளிக் செய்யவும். அடுத்து, உங்கள் பிங்கர் பிரிண்ட் மூலம் இந்த அரட்டையை லாக் செய்யுங்கள். அவ்வளவு தான் அடுத்த முறை லாக் செய்யப்பட்ட சாட்டை ஓபன் செய்ய வேண்டுமென்றால், உங்கள் பிங்கர் பிரிண்ட் வைத்தால் போதுமானது.

இதன் மூலம் மற்றவர்கள் லாக் செய்யப்பட்ட சாட்டை அணுக முடியாது. இந்த புதிய அப்டேட் வரவிருக்கும் வாரங்களில் ஒரு பெரிய குழு பயனர்களுக்குக் கிடைக்கும். மேலும் எதிர்காலத்தில் பொது மக்களுக்கு நிலையான பதிப்பில் கிடைக்கும். சமீபத்தில், WhatsApp ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டது. இது பயனரை பல்வேறு சாதனங்களுடன் ஒரு வாட்ஸ்அப் கணக்கை இணைக்க அனுமதித்தது.

இந்த புதிய லாக் சாட் அம்சம் உண்மையில் WhatsApp பயனர்களுக்கு பயனளிக்குமா? என்றால் உண்மையிலேயே, இத்தகைய அம்சத்தை தான் பல WhatsApp பயனர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பதே உண்மையாகிறது. இந்த புதிய லாக் சாட் அம்சம் பற்றி உங்களுடைய கருது என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Launched New Lock Chat Feature To Lock Single Chat With Finger Print in Beta Version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X