புது WhatsApp சீக்ரெட் கோட் அம்சம்.. உங்கள் சாட்டுக்கு போடுங்க பூட்டு.. இனி பாஸ்வோர்ட் இல்லாமல் நோ-என்ட்ரி..
வாட்ஸ்அப் (WhatsApp) தனது பயனர்களுக்காக புதிய சீக்ரெட் கோட் சாட் லாக் (Secret Code Chat Lock feature) அம்சத்தை அறிமுகம் செய்து, இப்போது வெளியிட்டு வருகிறது. இனி உங்கள் முக்கியமான அல்லது நெருக்கமான சாட்களை பாஸ்வோர்ட் இட்டு மறைத்துக்கொள்ளலாம்.
ஆம், வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள, இந்த புதிய சீக்ரெட் கோட் அம்சத்தின் (Secret Code feature) மூலம், இனி உங்கள் தனிப்பட்ட சாட்களை நீங்கள் நார்மல் சாட் பாக்சில் (chat box) இருந்து மறைப்பதோடு, மற்றவர் யாரும் அணுக முடியாத படி, இரட்டிப்பு பாதுகாப்பை நீங்கள் விரும்பும் சீக்ரெட் கோட் (WhatsApp secret code password) மூலம் தனியாக லாக் செய்துகொள்ள முடியும்.

இந்த புதிய வாட்ஸ்அப் சாட் லாக் அம்சம் (WhatsApp Chat Lock feature) மற்றும் சீக்ரெட் கோட் அம்சம் (WhatsApp Secret Code feature) ஆகிய இரண்டும் இப்போது ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சாட் லாக் அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.
புதிய வாட்ஸ்அப் சாட் லாக் அம்சம் (WhatsApp Chat Lock feature) :
இந்த அம்சத்தை அறிமுகம் செய்ததில் இருந்து நிறுவனம் இதை மேம்படுத்த வேலை செய்து வருகிறது. சாட் லாக் அம்சத்தை இப்போது வாட்ஸ்அப் புதிய சீக்ரெட் கோட் அம்சத்துடன் மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் விரும்பும் உங்களுடைய தனிப்பட்ட சாட்களை சீக்ரெட் பாஸ்வோர்ட் அமைத்து, அவற்றை பொதுவான சாட் பாக்சில் இருந்து ஹைடு செய்துகொள்ளலாம். அதாவது மற்றவர்கள் அணுகாதபடி மறைத்துக்கொள்ளலாம்.
சீக்ரெட் கோட் மூலம் லாக் செய்யப்பட்ட சாட்களை, மீண்டும் திறக்க பயனர்கள் உள்ளிட்ட சீக்ரெட் கோட் அல்லது தனிப்பட்ட பாஸ்வோர்டை டைப் செய்ய வேண்டும். இது உங்கள் போனின் PIN நம்பர் அல்லது உங்கள் வாட்ஸ்அப் லாகின் பாஸ்வோர்ட் போன்றதாக இருக்க கூடாது. இது உங்களால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும் பாஸ்வோர்டாக இருக்க வேண்டும்.
இந்த சீக்ரெட் சாட் லாக் அம்சம் ஒரு லாக்கர் போன்ற இடத்தில், நீங்கள் விரும்பும் சாட்டை ஹைடு செய்து வைக்கிறது. நீங்கள் தேர்வு செய்யும் உங்கள் விருப்பமான பாஸ்வோர்ட் உடன் இது ஆக்டிவேட் செய்யப்படுகிறது. சீக்ரெட் கோட் மூலம் லாக் செய்யப்பட்ட அல்லது ஹைடு செய்யப்பட்ட சாட்கள், பிரதான சாட் பட்டியலில் காணப்படாது.
மேலும் ரகசியக் குறியீட்டை உள்ளிடும்போது மட்டுமே ஹைடு செய்யப்பட்ட சாட்கள் அணுக கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மெசேஜ்ஜிங் பில்டஃபார்ம் தளத்தில் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. நீங்கள் லாக் செய்த சாட் பட்டியலைத் திறந்து, மேலே உள்ள மூன்று-புள்ளி மெனுவைத் தட்டவும்.
எப்படி புதிய வாட்ஸ்அப் சாட் லாக் அம்சத்தை செட் செய்வது (How to set WhatsApp Chat Lock feature):
பிறகு Chat lock settings > toggle Hide locked chats என்பதை நிலைமாற்றி, நீங்கள் எளிதாக நினைவில் வைத்து கொள்ளக்கூடிய ரகசியக் குறியீட்டை உள்ளிடவும். உங்கள் லாக் செய்யப்பட்ட சாட்கள் பிரதான சாட் பாக்சில் இருந்து மறைக்கப்படும். WhatsApp இல் நீங்கள் லாக் செய்த அல்லது ஹைடு செய்த சாட்களை வெளிப்படுத்த, மீண்டும் நீங்கள் உள்ளிட்ட அதே பாஸ்வோர்டை உள்ளிட்ட வேண்டும்.
உங்கள் பாஸ்வோர்டை வாட்ஸ்அப் இல் உள்ள சாட் பார் பகுதியில் டைப் செய்ய வேண்டும். இது Chat Lock அம்சத்தால் பாதுகாக்கப்பட்ட உரையாடல்களைக் காண்பிக்கும். ஒருவேளை மறக்கப்பட்ட சாட்டில் இருந்து, நேரடியாக நீங்கள் போனை லாக் செய்தாலோ அல்லது வெளியேறினாலோ மீண்டும் ஒரு முறை பாஸ்வோர்டை உள்ளிட்ட பிறகு அந்த சாட் காண்பிக்கபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








