இனி WhatsApp-ல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது.! என்னப்பா சொல்றீங்க உண்மையாவா? ஏன்?

|

வாட்ஸ்அப் சில காலத்திற்கு முன்பு வியூ ஒன்ஸ் (WhatsApp View Once) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது வாட்ஸ்அப் பயனர் அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோக்களை ஒரு முறை மட்டும் பார்க்க அனுமதித்தது. இந்த அம்சத்தை நம்மில் பலர் பயன்படுத்தியிருப்பீர்கள். உண்மையைச் சொல்ல போனால், இந்த அம்சத்தை WhatsApp அதன் பயனர்களுக்கு அதிக தனியுரிமையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியது.

WhatsApp வியூ ஒன்ஸ் அம்சம் எப்படி செயல்படுகிறது?

WhatsApp வியூ ஒன்ஸ் அம்சம் எப்படி செயல்படுகிறது?

ஆனால், இது சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும். இதுவரை நீங்கள் இந்த வியூ ஒன்ஸ் அம்சத்தை பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் வாட்ஸ்அப் சாட் ஓபன் செய்து, யாருக்காவது ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ பதிவு செய்யுங்கள். ரெக்கார்ட் செய்யப் போட்டோ அல்லது வீடியோவை அனுப்புவதற்கு முன்னதாக சென்ட் பட்டன் அருகில் இருக்கும் 1 என்று என்னை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

வியூ ஒன்ஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

வியூ ஒன்ஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

1 என்று எண் பச்சை நிறத்தில் காட்சியளித்தால், நீங்கள் தேர்வு செய்த போட்டோ அல்லது வீடியோவிற்கு வியூ ஒன்ஸ் அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்டது என்று அர்த்தமாகும். பின்னர், இப்போது இதை நீங்கள் சென்ட் செய்தால், பெறுநர், அந்த போட்டோ அல்லது வீடியோவை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த அம்சத்தில் இருக்கும் ஒரு சிறிய சிக்கல் என்னவென்றால், வாட்ஸ்அப் பெறுநரை இந்த வியூ ஒன்ஸ் புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க அனுமதிக்கிறது.

சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?

இனி வாட்ஸ்அப் இல் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதா?

இனி வாட்ஸ்அப் இல் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதா?

இது இந்த அம்சத்திற்கான முக்கியமான நோக்கத்தைச் செயலிழக்கச் செய்கிறது. வாட்ஸ்அப் ஒருவழியாக இந்த அம்சத்தை அறிமுகம் செய்ததில் இருக்கும் தனது தவறை உணர்ந்து, தற்போது அதைச் சரி செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. காரணம், சமீபத்திய பீட்டா அப்டேட்டில், வியூ ஒன்ஸ் அம்சத்தைப் பயன்படுத்திப் பகிரப்பட்ட புகைப்படங்களின் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கும் திறனை வாட்ஸ்அப் இப்போது பிளாக் (Block) செய்துள்ளதாக WaBetaInfo ஆல் கண்டறியப்பட்டுள்ளது.

WhatsApp வியூ ஒன்ஸ் இல் இனி ஸ்கிரீன் ஷாட் Block செய்யப்படுகிறது.!

WhatsApp வியூ ஒன்ஸ் இல் இனி ஸ்கிரீன் ஷாட் Block செய்யப்படுகிறது.!

இந்த அம்சத்தை வாட்ஸ்அப் மும்முரமாகச் சோதித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. முன்பு, ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முயன்றால் அனுப்புநர் எச்சரிக்கப்படமாட்டார் என்பது ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடாகக் கருதப்பட்டது. ஆனால், WhatsApp அதன் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக, இப்போது வியூ ஒன்ஸ் அம்சம் மூலம் பகிரப்படும் போட்டோ மற்றும் வீடியோ பைல்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் திறனை முழுமையாகத் தடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்கிரீன் ஷாட்டை பிளாக் செய்கிறது.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

View Once வீடியோக்களை வாட்ஸ்அப் எப்படி பாதுகாக்கப் போகிறது?

View Once வீடியோக்களை வாட்ஸ்அப் எப்படி பாதுகாக்கப் போகிறது?

அதேபோல், View Once அம்சத்தைப் பயன்படுத்திப் பகிரப்பட்ட வீடியோக்களைப் பொறுத்தவரை, பகிரப்பட்ட வியூ ஒன்ஸ் வீடியோ பைல்களை ​​ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்வதில் இருந்து பயனரை வாட்ஸ்அப் தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்திய அப்டேட்டில் இந்த இதற்கான மாற்றங்கள் சோதனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இது நிச்சயமாகச் சிறந்த கூடுதல் தனியுரிமை பாதுகாப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு.!

வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் பயன்படுத்தும் பயனர்களின் கவனத்திற்கு.!

இருப்பினும், வியூ ஒன்ஸ் பைல்களை பார்க்கும் பெறுநர் இரண்டாவது ஃபோனைப் பயன்படுத்தி புகைப்படங்களைக் கிளிக் செய்யவும் அல்லது வீடியோக்களை பதிவு செய்யவும் முடிந்தால் அதற்கு வாட்ஸ்அப் பொறுப்பாகாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அம்சத்தைப் பயன்படுத்தி எதையும் அனுப்பும் முன் மக்கள் கவனமாக இருக்குமாறு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது. இறுதிக்கட்ட சோதனைக்குப் பின், இந்த அம்சம் அனைவர்க்கும் கிடைக்கும் படி ரோல் அவுட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Is Now Blocking Screenshots For View Once Photos and Videos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X