கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் யுபிஐ வசதியை கூகுள் பே மற்றும் போன்பே ஏற்கனவே அறிமுகம் செய்த நிலையில். தற்போது வாட்ஸ்அப் நிறுவனமும் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது சர்வதேச யுபிஐ பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்தியப் பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமீபத்தில் ஆன்லைனில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஸ்கிரீன்ஷாட்-இல் புதிய வசதியானது யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) பக்கத்தில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) எனும் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக நீங்கள் இந்த விருப்பத்தை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷன் என்பதை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன்பின்பு எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு தான் வாட்ஸ்அப் செயலியில் யுபிஐ பேமண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதில் 140-க்கும் அதிகமான வங்கிகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாட்ஸ்அப்பில் சர்வதேச யுபிஐ பேமண்ட் மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் இந்த சர்வதேச யுபிஐ பேமண்ட் வசதி தற்போது தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் இன்னொரு புதிய அப்டேட்-ஐ கூட வெளியிட உள்ளது.
அதாவது வாட்ஸ்அப் செயலியில் தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் போது 30 வினாடி வீடியோவை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் அனுமதிக்கிறது. ஆனால் இந்த 30 வினாடி ஸ்டேட்டஸ் நேரம் போதாது என பல பயனர்கள் வாட்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 30 வினாடி கால அவகாசத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
அதாவது இனிமேல் வாட்ஸ் ஸ்டேட்டஸ் அளவு 60 வினாடிகளாக மாற்றப்பட உள்ளது. அதுவும் இந்த புதிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இதற்கான வேலைகளை வாட்ஸ்அப் செய்து வருவதாக இன்ஃபோ (WABetaInfo) வலைப்பக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாட்ஸ்அப் பீட்டா பக்கத்தில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, தற்போது 60 வினாடி வீடியோக்களை அனுமதிக்கும் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப். அதுவும் வாட்ஸ்அப் பீட்ட வெர்ஷன் ஆண்ட்ராய்டு 2.24.7.6 இல் சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த புதிய அம்சம் தற்போது சில பீட்டா வெர்ஷன் பயனர்களக்கு மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது என்றும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








