என்னது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ்கால் வசதியா, இது உண்மை தாங்க....

By Meganathan
|

வாய்ஸ்கால் அம்சம் தான் தற்சமயம் வாட்ஸ்அப்பில் குறையாக இருக்கும் ஒரு அம்சம், அந்த குறையும் விரைவில் பூர்த்தியாகும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. வாய்ஸ்கால் ஆப்ஷன் குறித்து வாட்ஸ்அப் தலைவர் கடந்த பிப்ரவரி மாதமே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் முதல் கட்டமாக ஆன்டிராய்டு, ஐபோன்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன் பின் ப்ளாக்பெரி, நோக்கியா, மற்றும் மைக்ரோசாப்ட் போந்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ்கால் வசதி வரப்போகுது டோய்....

செப்டம்பர் மாதம் வெளியான வாட்ஸ்ஆப் அப்டேட்டில் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ளும் அம்சம் மற்றும் கேமரா அம்சங்கள் அளிக்கப்பட்டதை அடுத்து வாட்ஸ்அப்பில் மைக்ரோபோன் வேண்டும் என்ற அறிவிப்பும் சில சமயங்களில் காணப்படுகின்றது, இது வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப பயன்படும் என்பது கூடுதல் தகவல்.

வாட்ஸ்ஆப் பயன்பாட்டை மைக்ரோபோனுடன் இணைக்காதவர்களுக்கு மட்டும் தான் இந்த தகவல் கிடைக்கின்றது. இதை பார்க்க செட்டிங்ஸ் - ப்ரைவஸி - மைக்ரோபோன் - வாட்ஸ்ஆப் கொடுக்க வேண்டும். தற்சமயம் 600 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் உலகின் பிரபலமான மெசேஜிங் செயளியாக இருக்கின்றது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை இந்தாண்டு துவக்கத்திலேயே சிமார் 19 பில்லியனுக்கு பேஸ்புக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp iPhone Confirms Voice Calling Feature. Check out the Full details of the new feature and the date of its launch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X