Home
News

அடடே வீடியோ காலில் இப்படியொரு வசதியா? சத்தமின்றி WhatsApp செயலியில் அறிமுகமான புதிய அம்சம்..

தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ள இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்விஸ் ஆப்ஸ்களில் முதன்மையானது மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் எளிதாகத் தொடர்பு கொள்ள மற்றும் அரட்டை அடிக்க யூஸர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு அலுவலக வேலைகளுக்கும் இந்த வாட்ஸ்அப் செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சம் வாட்ஸ்அப் தளத்தில் வெளிவந்துள்ளது.

சத்தமின்றி WhatsApp செயலியில் அறிமுகமான புதிய அம்சம்..

அதாவது வாட்ஸ்அப் செயலியில் வீடியோகால் பேசும் போது உங்கள் சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய வசதியை எப்படி பயன்படுத்துவது என்று விரிவாகப் பார்ப்போம். வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோகால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். பின்பு ஷேர் செய்யத் துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் போன்களில் வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தைப் பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். கடந்த மே மாதம் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்திற்கான டெஸ்டிங் செய்யத் துவங்கியது வாட்ஸ்அப் நிறுவனம்.

அதன்பின்பு விண்டோஸ் பீட்டா வெரஷ்னின் இந்த அம்சத்திற்கான டெஸ்டிங் ஜூன் மாத வாக்கில் துவங்கியது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2016-ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்து துவங்கிவிட்டனர். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் உடல்நல பாதுகாப்பு அம்சங்கள் முதல் வானிலை விவரங்கள் முதல் அனைத்துமே இருக்கின்றன. எனவேதான் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அனைவரும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேண்டி மெட்டா நிறுவனம் standalone app-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச் அணிந்தபடியே மெசேஜ் அனுப்பலாம், கால் பேசலாம் மற்றும் பல அம்சங்கள் இதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சத்தமின்றி WhatsApp செயலியில் அறிமுகமான புதிய அம்சம்..

இந்த செயலியை (standalone app) மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பர்க் கடந்த மாதம் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Wearables-க்கான கூகுள்-இன் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான Wear OS 3 இல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த செயலியைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. டெலிகிராம், டிஸ்கார்ட், ஸ்லாக்கின் ஹடில்ஸ் போன்ற பல்வேறு செயலிகளுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Introduces Screen Sharing in Video Calls: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X