Home
News

ZOHO Arattai செயலியை ஓரங்கட்டும் வாட்ஸ்அப்.. சத்தமின்றி புதிய வசதி அறிமுகம்.. இதோ முழு விவரம்..

வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் அரட்டை செயலி ஆனது இந்தியாவில் அதிக பிரபலமானது. இந்நிலையில் அரட்டை செயலிக்கு போட்டி கொடுக்கும் வகையில் வாட்ஸ்அப் ஆனது புதிய அம்சங்களை கொண்டுவந்துள்ளது.

வாட்ஸ்அப் பாஸ்கீ

அதாவது உங்களது வாட்ஸ்அப் சாட் பேக்கப்களை பாஸ்கீ (Passkey) மூலம் பாதுகாப்பதற்கான ஒரு புதிய வழியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனவே நீங்கள் இனி நீங்கள் பாஸ்வேர்டு அல்லது 64 இலக்க என்கிரிப்ஷன் கீகளை ஞாபகம் வைத்துக்கொள்ள அவசியம் இருக்காது.

ZOHO Arattai செயலியை ஓரங்கட்டும் வாட்ஸ்அப்..

வாட்ஸ்அப்-ன் இந்த புதிய அப்டேட் மூலம் யூசர்கள் தங்களது கைரேகை, முகம், ஸ்கிரீன் லாக் மூலம் என்கிரிபட் செய்யப்பட் சாட்களை ரீஸ்டோர் செய்துகொள்ள முடியும். பாஸ்வேர்டு போல அல்லாமல் பாஸ்கீ என்பது பாஸ்வோர்ட் மேனேஜரில் சேமிக்கப்பட்டு, அனைத்து சாதனங்களிலும் பாதுகாப்பான முறையில் லாகின் செய்வதற்கு அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது இந்த புதிய அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் உலக அளவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இதனை எப்படி அமைப்பது என்பதை பார்க்கலாம்.

இந்த அம்சத்தை எனேபிள் செய்வதற்கு முதலில் உங்களுடைய முதன்மை சாதனத்தில் உள்ள வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும். அடுத்து மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து, அதில் இருக்கும் Settings > Chats > End-to-End encrypted backup ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள். அதில் பாஸ்கீயை ஆன் செய்வதற்கான ஆப்ஷனைக் காண முடியும்.

அதன்பின்பு பாஸ்கீ என்பது உங்களது கைரேகை, முகம் அல்லது ஸ்கிரீன் லாக் போன்றவற்றைப் பயன்படுத்தி வெரிஃபிகேஷன் செயல்முறையை பிராசஸ் செய்கிறது. மேலும், அந்த பாஸ்கீயானது பாஸ்வேர்ட் மேனேஜரில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படும். இதுதவிர யூசர்கள் தங்களுடைய பேக்கப்களை ஒரு பாஸ்வேர்ட் அல்லது 64 இலக்க என்கிரிப்ஷன் கீ மூலமாகவும் பாதுகாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இது நீளமான அதே சமயத்தில் தனித்துவமான வாட்ஸ்அப் மூலமாக ஆட்டோமேட்டிக்காக உருவாக்கப்படும் ஒரு குறியீடு ஆகும். ஒருவேளை உங்களது பாஸ்வேர்ட் என்கிரிப்ஷன் கீ அல்லது பாஸ்கீ போன்றவற்றை தொலைத்துவிட்டால் உங்களுடைய பேக்கப்பை வாட்ஸ்அப்பால் ரீஸ்டோர் செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்க.

அதேசமயம் பெரும்பாலான வாட்ஸ்அப் அப்டேட்டுகள் போன்று இந்த சாட் பேக்கப் வழங்கும் பாஸ்கீ அப்டேட் கூட வரும் மாதங்களில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்த புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க சற்று அதிக நாட்கள் ஆகும்.

உங்களது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாஸ்கீயை உருவாக்குவதற்கு நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

உங்களது ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ளன வாட்ஸ்அப் செயலியை திறக்கவும். அடுத்து Settings ஆப்ஷனுக்குச் சென்று அதில் உள்ள Account என்பதை தேர்வு செய்யவும். அதன்பிறகு Passkey > Create Passkey > Continue என்பதை தட்டவும்.

பாஸ்கீ மூலம் என்கிரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட் பேக்கப்களை எடுப்பது எப்படி?

வாட்ஸ்அப் செயலியை திறந்து Settings பிரிவுக்குச் செல்லுங்கள்.
அடுத்து Chat மற்றும் Chat Back-up என்பதை தேர்வு செய்யவும்.
அதன்பின்பு கீழே ஸ்க்ரோல் செய்து End-to-End encrypted backup என்பதை தட்டுங்கள். அதன்பிறகு Use Passkey என்பதை தேர்வு செய்துவிட்டு, ஸ்கிரீனில் காணப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.

ZOHO Arattai செயலியை ஓரங்கட்டும் வாட்ஸ்அப்..

அரட்டை (arattai) செயலி சரிவைச் சந்தித்துள்ளது

அதேபோல் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வந்த அரட்டை செயலி தற்போது தரவரிசையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது கடந்த அக்டோபர் மாதம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே முதல் இடத்தைப் பிடித்து அசத்திய இந்த அரட்டை செயலி, ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தற்போது முதல் 100 செயலிகள் பட்டியலை விட்டு வெளியேறிவிட்டது. அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்கிற தனியுரிமை அம்சத்தை கொண்டிருக்கவில்லை. இதனாலேயே சரிவைச் சந்தித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp introduces passkey backup to protect encrypted chats with fingerprint, face ID
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X