Home
News

WhatsApp-க்கு வந்த அடேங்கப்பா அப்டேட்! Status-ல் Like, Reshare, Private Mention என 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது 2 புதிய வீடியோ கால் அம்சங்களை அறிமுகம் செய்த வேகத்தில், ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கான (Status Update) புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது வாட்ஸ்அப் ​​​​பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ்-ஐ லைக் (Like) செய்யலாம் மற்றும் அவர்கள் மென்ஷன்டு (Mentioned) செய்யப்பட்டுள்ள ஸ்டேட்டஸ்-ஐ ரீஷேர் (Reshare) செய்யலாம். மேலும் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் மற்றவர்களை தனிப்பட்ட முறையில் டேக் (Tag) செய்யவும் மற்றும் மென்ஷன் (Mention) செய்யவும் முடியும்.

வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, ஒருவர் உங்களை தன்னுடைய ஸ்டேட்டஸ் அப்டேட்களில் மென்ஷன் செய்தால், அது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நோடிப்ஃபை செய்யப்படும், மேலும் அவருடைய ஸ்டேட்டஸில் குறிப்பிட்ட மென்ஷன் காட்டப்படாது. அதாவது "உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்கள் ஸ்டேட்டஸ்-ஐ பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்வதோடு, அவர்களை தனிப்பட்ட முறையில் மென்ஷன் செய்வதன் மூலம், அவர்களின் மற்ற பார்வையாளர்களுடன் அதை எளிதாக ரீஷேர் செய்ய அனுமதிக்க முடியும்" என்று வாட்ஸ்அப் கூறுகிறது!

WhatsApp Status-ல் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் லைக்குகள் எப்படி வேலை செய்யும்? ஒரே ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் பயனர்கள் மற்ற பயனர்களின் ஸ்டேட்டஸ்-ஐ லைக் செய்யலாம்.
ஸ்டேட்டஸ் லைக்குகள் தனிப்பட்டதாக இருக்குமா?
ஆம், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் லைக்குகள் தனிப்பட்டவைகளாக இருக்கும், அதாவது நீங்கள் யாருடைய ஸ்டேட்டஸை லைக் செய்கிறீர்களோ அவரால் மட்டும் அதை பார்க்க முடியும்.

ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கு வந்துள்ள இந்த புதிய அம்சங்கள் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்குமா?
ஆம், இந்த அம்சங்கள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன, விரைவில் உலகளவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு அணுக கிடைக்கும். இதோடு சேர்த்து அடுத்த சில மாதங்களில் ஸ்டேட்டஸ் மற்றும் அப்டேட்ஸ் டேப்பில் கூடுதல் அம்சங்களை கொண்டு வருவோம், இது மிகவும் முக்கியமானவர்களுடன் நெருக்கமாக இருப்பதை இன்னும் எளிதாக்கும் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னரே குறிப்பிட்டபடி வாட்ஸ்அப் வீடியோ கால்களுக்கான புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைகள் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. இன்னும் அணுக கிடைக்காதோர் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

மெட்டாவின் கூற்றுப்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபில்டர்கள் மிகவும் விளையாட்டுத்தனமான சூழ்நிலையை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அது உங்கள் வீடியோவிற்கு வண்ணத்தை சேர்க்கும் அல்லது கலை உணர்வை உருவாக்கும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பேக்கிரவுண்ட்களுடன் நீங்கள் உங்கள் சுற்றுப்புறங்களை ப்ரைவேட் ஆக வைத்து கொள்ளலாம்.

உதாரணத்திற்க்கு நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாமல், ஒரு காபி ஷாப்பில் அல்லது ஒரு வசதியான அறையில் நீங்கள் இருப்பது போல் உங்களை காட்டிக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக உங்கள் வாட்ஸ்அப் வீடியோ கால்களை (WhatsApp Video Call) மெருகூட்டப்பட்ட தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலிக்கு வந்து உள்ள லேட்டஸ்ட் அப்டேட் வழியாக வார்ம் (Warm), கூல் (Cool), பிளாக் & ஒயிட் (Black & White), லைட் லீக் (Light Leak), ட்ரீமி (Dreamy), ப்ரிஸம் லைட் (Prism Light), ஃபிஷ்ஐ (Fisheye), விண்டேஜ் டிவி ( Vintage TV), ஃப்ரோஸ்டட் கிளாஸ் (Frosted Glass) மற்றும் டியோ டோன் (Duo Tone) போன்ற 10 ஃபில்டர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

கூடவே ப்ளர் (Blur), லிவிங் ரூம் (Living Room), ஆபீஸ் (Office), கஃபே (Cafe), பெபல்ஸ் (Pebbles), ஃபுடி (Foodie), ஸ்மூஷ் (Smoosh), பீச் ( Beach), சன்செட் ( Sunset), செலிப்ரேஷன் (Celebration) மற்றும் ஃபாரஸ்ட் (Forest) உள்ளிட்ட 10 புதிய பேக்கிரவுண்ட் விருப்பங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் பயனர்கள், தாங்கள் மேற்கொள்ளும் வாட்ஸ்அப் வீடியோ கால்களின் தரத்தை மேம்படுத்த டச்-அப் மற்றும் லோ-லைட் ஃபில்டர்களையும் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp introduces Likes Reshare Private Mention Tagging in Status Updates How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X