இனி Google Pay, PhonePe எதுக்கு? FASTag முதல் கரண்ட் பில் வரை.. வாட்ஸ்அப்பிலேயே பில் செலுத்தலாம்..
வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. அதுவும் வாட்ஸ்அப் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு பயனுள்ள அம்சம் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது இந்தியாவில் பில் பேமெண்ட்ஸ் (Bill Payments) எனும் வசதியைத் தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இனி நமது வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகளுக்குக் கட்டணம் செலுத்தலாம், மாதாந்திர பில்களை கட்டலாம். குறிப்பாக வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் செயலியிலேயே இதனை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் பாரத் கனெக்ட் எனப்படும் மத்திய பில் கட்டண அமைப்பான BBPS உடன் இணைந்து வாட்ஸ்அப் தனது பில் பேமெண்ட் சேவையை வழங்குகிறது. கிட்டதட்ட 30 பிரிவுகளின் கீழ் 22,722 நிறுவனங்கள் வாட்ஸ் அப்பில் இந்த வசதியை இணைத்துள்ளன. எனவே பயனர்கள் வாட்ஸ்அப் மூலமாகவே மின்சாரக் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம், குடிநீர் வரி, FASTag ரீசார்ஜ், காப்பீட்டு பிரீமியம், கிரெடிட் கார்டு பில் மற்றும் கடன் தவணை உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை எளிதாக செலுத்த முடியும்.
பில் கட்டணம் செலுத்துவதற்காக இனி வாட்ஸ்அப் செயலியில் இருந்து வெளியேறி Google Pay, PhonePe போன்ற பிற செயலிகளைத் திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்புவது போன்று மிகவும் எளிமையான முறையில், செயலிக்குள் இருந்தபடியே பல்வேறு பில்களையும் பயனர்கள் செலுத்திக்கொள்ள முடியும்.
மேலும், டிவி DTH சேவைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேதி, மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நேரம் உள்ளிட்ட முக்கியமான கட்டண நினைவூட்டல் தகவல்களையும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வழங்கும். இதன் மூலம் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தி, சேவை துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும்.
காலையில் எழுந்தவுடன் வாட்ஸ்அப்பில் வந்துள்ள தகவல்களைப் பார்ப்பது பலரின் வழக்கமாகிவிட்ட நிலையில், செயலியிலேயே பில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பயன்படுத்தும் வாட்ஸ்அப்பிலேயே கட்டணங்களைச் செலுத்த முடிவதால், இது மக்களுக்கு கூடுதல் வசதியை வழங்கும்.
வாட்ஸ்அப்பில் செலுத்த வேண்டிய பில் தொகையைச் சரிபார்த்த பிறகு, பயனர்கள் தங்களுக்கு ஏற்ற கட்டண முறையைத் தேர்வு செய்து பணம் செலுத்தலாம். குறிப்பாக UPI, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கட்டணத்தைச் செலுத்தும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய பில் பேமெண்ட் வசதி இந்திய பயனர்களுக்கு படிப்படியாகக் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் கிடைத்ததும், அதன் மூலம் பில்களை எவ்வாறு செலுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் பில் பேமெண்ட் செய்வது எப்படி?
1.வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும்.
2.அதில் மேலே இருக்கும் ₹ (ரூபாய்) ஐகானை கிளிக் செய்யவும்.
3.செலுத்த வேண்டிய பில் வகையைத் (Category) தேர்வு செய்யவும்.அதற்கான பில் வழங்குநரைத் (Biller) தேர்வு செய்யவும்.
4.அடுத்து உங்களது விவரங்களை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
5. அதன்பின்னர் அதில் காட்டப்படும் பில் தொகையைச் சரிபார்க்கவும்.
6.UPI, Debit Card அல்லது Credit Card ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
7.இப்போது Confirm என்பதை கிளிக் செய்து பணம் செலுத்தவும்.
8.UPI, Debit Card அல்லது Credit Card மூலம் ஒருமுறை பணம் செலுத்தினால், அந்த விவரங்கள் சேமிக்கப்படும். அடுத்த முறை அதே முறையை பயன்படுத்தி எளிதாக பில் செலுத்தலாம்.


Click it and Unblock the Notifications